கிராம சபை கூட்டத்துக்கு அனுமதி அளிக்காதது ஏன்?.. அமைச்சர் பெரிய கருப்பன் விளக்கம்!
சென்னை: கொரோனா பரவலை தடுக்கும் வகையில் கிராம சபை கூட்டத்துக்கு அனுமதி அளிக்கவில்லை என்று தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பெரிய கருப்பன் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26-ம் தேதி குடியரசு தினம், மே 1-ம் தேதி உழைப்பாளர் தினம், ஆகஸ்டு 15-ம் தேதி சுதந்திர தினம் மற்றும் அக்டோபர் 2-ம் தேதி காந்தி ஜெயந்தி ஆகிய நாட்களில் கிராம சபை கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்த நாட்களில் அனைத்துக் கிராம பஞ்சாயத்துகளிலும் ஒரே நாளில் கிராம சபை கூட்டம் நடைபெறும். பஞ்சாயத்து அலுவலகத்திலோ, சமுதாய கூடத்திலோ, வேறு ஒரு பொது இடத்திலோ கிராம சபை கூட்டம் நடைபெறும்.

கிராம சபை கூட்டங்கள்
இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திற்கு உட்பட்ட தீர்மானங்களை கொண்ட எந்த ஒரு கிராம சபை தீர்மானமும் எந்த ஒரு நீதிமன்றத்திலும் ஏற்றுக்கொள்ளப்படும். அதாவது சட்டமன்றம் , நாடாளுமன்ற தீர்மானத்திற்கு இணையான அதிகாரம் கிராம சபை தீர்மானத்திற்கு உண்டு. மேலும் ஒரு கிராமம் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வும், கிராமத்தில் செய்ய வேண்டிய திட்டங்கள், வளர்ச்சி பணிகள் குறித்த ஆலோசனையும் கிராம சபை கூட்டங்களில் முடிவெடுக்கப்படும்.

கொரோனாவால் ரத்து
இத்தகைய சிறப்பு மிக்க கிராம சபை கூட்டங்கள் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த ஆண்டும், இந்த ஆண்டு குடியரசு தினம் அன்றும் நடத்தப்படவில்லை. இந்த நிலையில் வருகிற சுதந்திர தினம் அன்றும் கிராம சபை கூட்டங்கள் நடைபெறாது என்று தமிழ்நாடு அரசு அறிவித்தது. தி.மு.க அரசின் இந்த உத்தரவுக்கு மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் கடும் கண்டனம் தெரிவித்தார்

கமல் கடும் கண்டனம்
கொரானாவில் தேர்தல் நடக்கும், வாக்கு எண்ணிக்கை நடக்கும், பதவி ஏற்பு விழா நடக்கும், சட்டமன்றம் நடக்கும், உள்ளாட்சித் தேர்தலுக்கான முஸ்தீபுகள் நடக்கும். ஆனால், கிராம சபை மட்டும் நடக்காது. அதிமுகவிற்கும், திமுகவிற்கும் எந்த வித்தியாசமும் இல்லை. முந்தைய ஆட்சியில் கிராம சபை நடத்த தொடுத்த வழக்கை திமுக ரகசியமாக வாபஸ் பெற்றுக் கொண்டபோதே இந்த அரசும் கிராம சபைகளைக் கண்டு அஞ்சுகிறது என்பதைப் புரிந்துகொண்டோம். தி.மு.க.வின் சாயம் வெளுத்துவிட்டது' என்று கமல்ஹாசன் கடுமையாக குற்றம்சாட்டி இருந்தார்.

ஏன் அனுமதி இல்லை?
இந்த நிலையில் கிராம சபை கூட்டம் ரத்து செய்யப்பட்டதற்கு ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பெரிய கருப்பன் விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:- கிராமப்புற பகுதிகளில் தற்போது கொரோனா தொற்று அரசின் தீவிர நடவடிக்கைக்கு பிறகு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் கொரோனா பரவலை மேலும் கட்டுப்படுத்தவும், பரவாமல் தடுக்கவும் அரசால் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைக்கு குந்தகம் விளைவிக்காமல் இருக்கும் நோக்கில் பொதுமக்கள் நலன் கருதி இந்த ஆண்டு ஆகஸ்டு 15-ம் தேதி அன்று நடத்தப்படவுள்ள கிராம சபை கூட்டம் கூட்டுவதற்கு அரசு அனுமதி வழங்கவில்லை.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
ஸ்டாலின் அதிரடி மாற்றம்.. இனி இவங்க யாருமே வேண்டாம்.. கொத்தாக தூக்கப்படும் பெரிய மீன்கள்! -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
திமுகவை சீண்டும் துரை வைகோ.. இன்னைக்கு என்ன சொல்லி இருக்காருன்னு பாருங்க! புது பஞ்சாயத்து -
SC/ST நிதி வேறு துறைகளுக்கு மாற்றப்பட்டதா? அது வெறும் அவதூறு.. அமைச்சர் வன்னி அரசு விளக்கம்! -
“துரோகி.. துரோகி”.. செல்வப்பெருந்தகை வந்தபோது திமுகவினர் கோஷம்.. திடீர் பரபரப்பு! -
யார் எம்எல்ஏ, யார் அமைச்சர் என்று முதல்வருக்கே தெரியாத ஆட்சி நடக்கிறது.. உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்! -
“திமுக கூட்டணியில்தான் தொடர்கிறோம்.. தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு”.. CPI வீரபாண்டியன் உறுதி! -
“திமுக தயவில்தான் தவெக ஆட்சி நடக்கிறது.. நான்தான் வழியனுப்பி வைத்தேன்”.. ஸ்டாலின் ஓபன் டாக்! -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது!












Click it and Unblock the Notifications