பிளஸ் 2 செய்முறை தேர்வு ஏப்ரல் 25 முதல் மே 2 வரை நடைபெறும் - அரசு தேர்வுகள் இயக்ககம்
12ம் வகுப்புகளுக்கான செய்முறை தேர்வு ஏப்ரல் 25 முதல் மே 2 வரை நடைபெறும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
சென்னை: 12ம் வகுப்புகளுக்கான செய்முறை தேர்வு ஏப்ரல் 25 முதல் மே 2 வரை நடைபெறும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. செய்முறை தேர்வுக்காக வழிகாட்டுதலும் வெளியிடப்பட்டிருக்கிறது. மே 4ம் தேதிக்குள் செய்முறை தேர்வு மதிப்பெண்கள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது.
கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டாக பள்ளிகளில் வகுப்புகள் சரிவர நடைபெறவில்லை. கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் பிளஸ் 2, பிளஸ் 1, பத்தாம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. நவம்பர் முதல் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டன.

பொதுத் தேர்வு எழுத இருக்கும் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வு நடைபெற்று வருகிறது. கடந்த பிப்ரவரி மாதம் இறுதியில் முதற்கட்ட திருப்புதல் தேர்வு நடந்து முடிந்தது.
10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு இரண்டாம் கட்ட திருப்புதல் தேர்வு கடந்த திங்கட்கிழமை முதல் தொடங்கியுள்ளது. இந்த நிலையில், 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 25 முதல் செய்முறை தேர்வு நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
12ம் வகுப்புகளுக்கான செய்முறை தேர்வு ஏப்ரல் 25 முதல் மே 2 வரை நடைபெறும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. செய்முறை தேர்வுக்காக வழிகாட்டுதலும் வெளியிடப்பட்டிருக்கிறது. மே 4ம் தேதிக்குள் செய்முறை தேர்வு மதிப்பெண்கள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது.
வழக்கமாக 10ஆம் வகுப்பு மற்றும் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் ஆண்டுதோறும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடக்கும். நடப்பு கல்வியாண்டில் கரோனா பரவலால் பள்ளிகள் திறப்பில் தாமதம் ஏற்பட்டது. அதனால் மே மாதத்தில் பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்திருந்தது. பிளஸ் 2 பொதுத்தேர்வு மே 5 முதல் 28ம் தேதி வரை நடக்கும். சுமார் 8.36 லட்சம் மாணவ, மாணவிகள் பிளஸ் 2 தேர்வு எழுத உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications