அங்கீகாரம் இல்லாத பள்ளிகளுக்கு 'ஆப்பு'.. கல்வி அதிகாரிகளுடன் அமைச்சர் அன்பில் நாளை முக்கிய ஆலோசனை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆசிரியரின் பாலியல் தொல்லை காரணமாக கடந்த மாதம் கோவை பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இதன் பிறகு மாநிலத்தின் சில பள்ளிகளில் இருந்து பாலியல் புகார்கள் தொடர்ந்து வந்தன.

பள்ளி மாணவிகளுக்கு நடக்கும் பாலியல் கொடூரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கைகள் எழுந்தன. இதனை தொடர்ந்து பள்ளிகளில் மாணவிகளின் பாதுகாப்புக்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

பாலியல் புகார் பெட்டிகள்

பாலியல் புகார் பெட்டிகள்

பள்ளிகளில் நடக்கும் பாலியல் புகார்களை உடனடியாக கவனத்துக்கு கொண்டு வரும் வகையில் பள்ளிகளில் புகார் பெட்டிகள் அமைக்கப்படும் என்று தமிழக அரசு ஏற்கனவே அறிவித்து இருந்தது. மேலும், தமிழகத்தில் 37 ஆயிரத்து 391 அரசு பள்ளிகளில் வருகிற 31-ந்தேதிக்குள் பாலியல் புகார் பெட்டிகளை அமைக்குமாறும் பள்ளிகல்வித்துறை உத்தரவிட்டிருந்தது.

நாளை முக்கிய ஆலோசனை

நாளை முக்கிய ஆலோசனை

இந்த நிலையில் பள்ளிகளில் பாலியல் புகார் பெட்டிகள் அமைப்பது தொடர்பாகவும், நெல்லை சாப்டர் பள்ளியில் கழிவறை கட்டிடம் இடிந்து 3 மாணவர்கள் உயிரிழந்த நிலையில் மோசமான நிலையில் உள்ள பள்ளி கட்டிடங்களை இடிப்பது தொடர்பாகவும் கல்வித்துறை அதிகாரிகளுடன் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நாளை ஆலோசனை நடத்துகிறார்.

அங்கீகாரம் இல்லாத பள்ளிகள்

அங்கீகாரம் இல்லாத பள்ளிகள்

பள்ளிகளில் கூடுதலாக தேவைப்படும் வகுப்பறைகள், அங்கீகாரம் இல்லாத பள்ளிகள் மீது எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்தும் நாளை ஆலோசனை செய்யப்பட உள்ளது. ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு குறித்தும், பள்ளி மாணவர்களுக்கு நடத்தப்படும் திருப்புதல் தேர்வு குறித்தும் இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து முடிவு எடுக்கப்பட உள்ளது.

 முக்கிய அறிவிப்புகள் வரும்

முக்கிய அறிவிப்புகள் வரும்

இந்த கூட்டத்தில் பள்ளிகல்வித்துறை செயலாளர், பள்ளிகல்வித்துறை ஆணையர் நந்தகுமார், பள்ளிகல்வித்துறையின் இயக்குனர்கள் என முதன்மை கல்வி அலுவலர்கள் அனைவரும் பங்கேற்க உள்ளனர். இந்த கூட்டம் முடிந்த பிறகு பள்ளிகல்வித்துறை தொடர்பாக முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+