தமிழகம் முழுவதும் இன்று பள்ளிகள் திறப்பு..மாணவர்கள் உற்சாகம்..வரவேற்ற ஆசிரியர்கள்
கோடை விடுமுறை முடிந்து மாநிலம் முழுவதும் 1முதல் 10ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணர்களுக்கு இன்று பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.
சென்னை: தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்ததை அடுத்து 1முதல் 10ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணர்களுக்கு இன்று பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. உற்சாகத்துடன் பள்ளிக்கு வந்த மாணவர்களை ஆசிரியர்கள் பூக்களைக் கொடுத்து வரவேற்றனர்.
Recommended Video
தமிழகத்தில் 1 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் முடிந்து கடந்த மே 13ஆம் தேதி முதல் கோடை விடுமுறை விடப்பட்டது. 10,11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே 31ஆம் தேதி வரை பொதுத் தேர்வுகள் நடைபெற்றன.
கோடை விடுமுறை முடிந்து மாநிலம் முழுவதும் 1முதல் 10ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணர்களுக்கு ஜூன் 13ஆம் தேதியன்று பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்தார். கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் பள்ளிகள் திறப்பு தள்ளிப்போகலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில் திட்டமிட்டபடி பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன.

முழு பாடத்திட்டம்
கடந்த கொரோனா காலத்தில் பள்ளிகள் மூடப்பட்டு குறைந்த கால அளவில் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டதால், முழு பாடங்களையும் மாணவர்கள் படிக்க முடியாது என்பதால், பாடத்திட்டம் குறைக்கப்பட்டது. அதனால் இந்த கல்வியாண்டில் முழுமையாக பாடங்களை படிக்க வசதியாக முன்கூட்டியே பள்ளிகள் திறக்க வேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டு, தற்போது இன்று பள்ளிகள் திறக்கப்படுவதால் முழு பாடத்திட்டமும் இடம் பெற உள்ளது.

அனைவரும் வர உத்தரவு
இன்று அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டுள்ளதை அடுத்து அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. பள்ளி மாணவர்களுக்கு நாளை முதல் 20 நாட்களுக்குள் புத்தகம், புத்தகப்பை, சீருடைகள் வழங்கப்படும். மாணவர்களுக்கு சீருடையில் எவ்வித மாற்றமும் கொண்டு வரப்போவது கிடையாது என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.

முககவசம்
முகக்கவசம் கட்டாயம் என்ற அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்புக்கு பின் கொரோனா விதிமுறைகள் முறையாக பின்பற்றபடும். பள்ளி திறப்பதற்கு முன்னதாக பள்ளிக்கூட வளாகம், உணவுக்கூடம், கழிப்பறைகள் சுத்தம் போன்றவை குறித்து வலியுறுத்திய பிறகே பள்ளிகள் திறக்கப்படுகிறது. எனவே வகுப்பறைகள் மாணவர்களுக்கு பாதுகாப்பான முறையில் இருக்கும். பள்ளிகள் திறப்பின்போது முதல் ஐந்து நாட்கள் நல்லொழுக்கத்திற்கான வகுப்புகள் நடத்தப்படும்.

கட்டாயப்படுத்தக்கூடாது
பள்ளிக்கட்டணம் உடனடியாக கட்ட சொல்லி மாணவர்களை பள்ளி நிர்வாகம் நிர்பந்திக்ககூடாது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளதாக அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார். ஜூன் 20ஆம் தேதியன்று பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கும் ஜூன் 27ஆம் தேதியன்று பிளஸ் 1 படிக்கும் மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.

மாணவர்கள் உற்சாகம்
இதனிடையே இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஜூன் மாதத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் மகிழ்ச்சியுடனும் உற்சாகத்துடனும் பள்ளிகளுக்கு வந்தனர். பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு பூக்களைக் கொடுத்தும் சாக்லேட்டுகளை கொடுத்தும் ஆசிரியர்கள் வரவேற்றனர்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications