இதுதான் "மேக வெடிப்பு.." சென்னையில் கொட்டி தீர்த்த 123 மி.மீ. மழை.. வெதர்மேன் அலர்ட்!
சென்னை: மெரினா, எம்ஆர்சி நகர், ராயப்பேட்டை, மாம்பலம் பகுதிகளில் மழை தெறிக்க விடுவதாகவும் இது கிட்டதட்ட மேகவெடிப்பு போன்ற நிலைதான் என்றும் தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
Recommended Video
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த நவம்பர் மாதங்களில் தீவிரமடைந்தது. இந்த நவம்பர் மாதத்தில் தமிழகத்தில் நவம்பர் 7,11, 18 ஆகிய தேதிகளில் பெய்த மழையை மக்களால் மறக்க முடியாது.
அந்த அளவுக்கு அதிக மழை பெய்துவிட்டது. மார்கழி தொடங்கியவுடன் சில தினங்களாக மழையில்லாமல் இருந்தது. எனினும் தமிழகத்தில் சில இடங்களில் பெய்துதான் வந்தது.

திருவண்ணாமலை
இந்த நிலையில் இன்று காலை முதல் சென்னை, திருவண்ணாமலை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. சென்னையில் எம்ஆர்சி நகர், மயிலாப்பூர், மெரினா, மந்தைவெளி, ராயப்பேட்டை, முகப்பேர், அண்ணாநகர், கிண்டி, வடபழனி, ஈக்காட்டுத்தாங்கல் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை விட்டு விட்டு வெளுத்து வாங்கி வருகிறது.

அதிகபட்சம்
இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறுகையில் இன்று சென்னையில் பெய்து வரும் மழையை மேக வெடிப்பு என்று சொல்லலாம். இதுவரை அதிகபட்சமாக 124.7 மி.மீ. மழை பெய்துள்ளது. ஒரு மணி நேரத்தில் 96.5.மி.மீ மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக காற்றின் வேகம் இன்று நண்பகல் 12.17 மணிக்கு 30.6 கி.மீட்டராக இருந்தது.

கிழக்கு பகுதியில் மேகக் கூட்டங்கள்
சும்மா தெறிக்க விடுகிறது. கிழக்கு பகுதியில் கடலில் நிறைய மேக கூட்டங்கள் உள்ளன. இந்த மழை இன்னும் குறைந்தது ஒரு மணி நேரத்திற்காவது நீடிக்கும். எம்ஆர்சி நகர், நுங்கம்பாக்கம், ராயப்பேட்டை, மெரினா கடற்கரை, மாம்பலம் உள்ளிட்ட பகுதிகளில் வேற லெவலில் மழை பெய்கிறது.

100 மி.மீ. தாண்டும்
சமீபத்திய ஆண்டுகளில் சென்னையில் இதுவரை இந்த அளவிற்கு மழை பெய்ததில்லை.பெரும்பாலான இடங்களில் மழையின் அளவு 100 மி.மீட்டரை தாண்டும். கடல் பகுதிக்கு அருகே காற்று குவிந்துள்ளது. எம்ஆர்சி நகரில் 123 மி.மீ. மழை பெய்துள்ளது. பெய்கிறது , பெய்கிறது தொடர்ந்து பெய்து கொண்டே இருக்கிறது, எம்ஆர்சி நகரில் மழையின் அளவு 150 மி.மீ. அளவுக்கு செல்ல வாய்ப்புள்ளது. மெரினாவில் 150 மி.மீ.ருக்கு மேல் மழையின் அளவு இருக்க வாய்ப்புள்ளது. நுங்கம்பாக்கத்தில் 115 மி.மீ மழை பெய்துள்ளது. மாம்பலத்திலும் 100 மி.மீ மழை பெய்துள்ளது.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
லேட்டாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை.. இந்த ஆண்டு கொஞ்சம் சிக்கல்தான்! IMD கொடுத்த வார்னிங்! -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை












Click it and Unblock the Notifications