சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பாஜகவின் தொழிலாளர் விரோத போக்கை முறியடிப்போம்! காங்கிரஸ் மே தின வாழ்த்து!

Google Oneindia Tamil News

சென்னை: உழைப்பாளர்களின் உரிமைகளை பாதுகாக்கிற வகையில், உரிமைக்குரல் எழுப்பும் நாளாக மே 1 ஆம் தேதி அமைய வேண்டும் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி மே தின வாழ்த்துக் கூறியுள்ளார்.

நீண்டகாலமாக நடைமுறையில் இருந்த தொழிலாளர் சட்டங்களை அகற்றிவிட்டு புதிய தொழிலாளர் விரோத சட்டங்களை மத்திய அரசு இயற்றியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

வாட்டிவதைக்க போகும் வெயில்! 3 டிகிரி செல்சியஸ் அதிகபட்ச வெப்பநிலை பதிவாகுமாம்! கவனமா இருங்க மக்களே! வாட்டிவதைக்க போகும் வெயில்! 3 டிகிரி செல்சியஸ் அதிகபட்ச வெப்பநிலை பதிவாகுமாம்! கவனமா இருங்க மக்களே!

இதி தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது;

சிகாகோ நகர்

சிகாகோ நகர்

கடந்த 136 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவின் சிகாகோ நகரில் ஒன்று கூடிய தொழிலாளர்கள் 8 மணி நேரம் வேலை, 8 மணி நேரம் ஓய்வு, 8 மணி நேரம் உறக்கம் என்ற கோரிக்கையை வைத்து இதே மே 1 ஆம் தேதி ஆர்ப்பரித்தனர். அன்றைய ஆட்சியாளர்களின் அடக்குமுறையால் தொழிலாளர் தலைவர்கள் உயிர் தியாகம் செய்தனர்.

 தொழிலாளர் விரோதம்

தொழிலாளர் விரோதம்

மக்கள் போராடிப் பெற்ற உரிமைகளை பறிக்கும் வகையில் நீண்டகாலமாக நடைமுறையில் இருந்த தொழிலாளர் சட்டங்களை அகற்றிவிட்டு புதிய தொழிலாளர் விரோத சட்டங்களை மத்திய அரசு இயற்றியுள்ளது. பா.ஜ.க.வின் தொழிலாளர் விரோத போக்கு இத்தகைய நடவடிக்கையினால் உறுதி செய்யப்பட்டுள்ளது.

பொறுப்பு உண்டு

பொறுப்பு உண்டு

பொருளாதார தேக்க நிலையினால் தொழிற்சாலைகள் மூடப்பட்டு, உற்பத்தி குறைந்து, வேலை வாய்ப்பு இழந்த தொழிலாளர்கள், பணியாளர்கள் உள்ளிட்ட உழைக்கும் மக்கள் அனைவருக்கும் மாதந்தோறும் நிவாரண தொகை வழங்க வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கு உண்டு. ஆனால், நிவாரணத் தொகை வழங்காமல் வாழ்வாதாரம் இழந்த நிலையில் தொழிலாளர்கள் வாழ்ந்து வருகிறார்கள். பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தை உறுதி செய்கிற வகையில் நிவாரணத் தொகை வழங்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

தொழில் வளர்ச்சி

தொழில் வளர்ச்சி

எனவே, தொழில் வளர்ச்சி குன்றிய நிலையில் ஏற்பட்ட வேலை இழப்பினால் தொழிலாளர்களின் வாழ்வில் கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்டு வருகிற நிலையில் தங்களது உரிமைகளை பாதுகாக்கிற வகையில், உரிமைக்குரல் எழுப்பும் நாளாக மே 1 ஆம் தேதி அமைய வேண்டும். உழைக்கும் தொழிலாளர் வர்க்கத்தினர் அனைவருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் மே தின வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

English summary
TNCC President Ks Azhagiri May day wishes:உழைப்பாளர்களின் உரிமைகளை பாதுகாக்கிற வகையில், உரிமைக்குரல் எழுப்பும் நாளாக மே 1 ஆம் தேதி அமைய வேண்டும் என கே.எஸ்.அழகிரி மே தின வாழ்த்துக் கூறியுள்ளார்.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X