டிஎன்பிஎஸ்சி குரூப் 2, குரூப் 2ஏ தேர்வுகள் எப்போது?... நாளை அறிவிப்பு - அரசு வேலைக்கு தயாராகுங்கள்
குரூப் 2 தேர்வுகள் எப்போது நடைபெறும் என்று நாளைய தினம் அறிவிக்கப்பட உள்ளது. அதற்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி தலைவர் நாளை வெளியிடுகிறார்.
சென்னை: டிஎன்பிஎஸ் குரூப் 2, குரூப் 2 ஏ தேர்வுகள் எப்போது நடைபெறும் என்பதற்கான அறிவிப்பு நாளை வெளியாக உள்ளது. அதற்கான அறிவிப்பை சென்னை அலுவலகத்தில் டிஎன்பிஎஸ்சி தலைவர் வெளியிடுகிறார்.
தமிழக அரசு வேலையில் அமர வேண்டும் என்று நினைக்கும் லட்சக்கணக்கான இளம் தலைமுறையினர் டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் பற்றிய அறிவிப்பு எப்போது வெளியாகும் என்று காத்துக்கொண்டிருப்பார்கள். தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கு தேவைப்படும் ஊழியர்கள், அலுவலர்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். இதன் மூலம் போட்டி தேர்வுகள் ,நேர்காணல் தேர்வுகள் ஆகியவற்றை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்துகிறது. அரசு பணிகளின் அடிப்படையில் இந்த தேர்வுகள் குரூப் 1, குரூப் 2, குரூப் 3 மற்றும் குரூப் 4 மற்றும் குரூப் 5,6,7,8 ஆகிய தேர்வுகள் உள்ளன.

இந்நிலையில் அரசு துறைகளுக்கு ஊழியர்கள் முதல் அதிகாரிகள் வரை தேர்வு செய்ய நடத்தப்படும் டிஎன்பிஎஸ்சி எனப்படும் அரசு பணியாளர் தேர்வு வாரியத்தின் புதிய பணி நியமனங்கள் மேற்கொள்ளப்படும் என்ற விவரம் முன்கூட்டியே திட்ட அறிக்கையாக வெளியிடப்படும். அதன்படி 2022ஆம் ஆண்டில் மேற்கொள்ள உள்ள பணி நியமனங்கள் போட்டித் தேர்வுகள் மற்றும் தேர்வு விதிமுறைகள் குறித்த திட்ட அறிக்கை கடந்த ஆண்டு இறுதியில் வெளியிடப்பட்டது.
அந்த அட்டவணையின்படி, பிப்ரவரி மாதம் குரூப் 2 தேர்வுகளுக்கும், மார்ச் மாதம் குரூப் 4 தேர்வுகளுக்கும் அறிவிப்பு வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது அதன்படி நாளைய தினம் குரூப் 2 தேர்வுகள் எப்போது நடைபெறும் என்ற அறிவிப்பு வெளியாக உள்ளது.
இந்த ஆண்டு மொத்தம் 5,831 காலிப் பணியிடங்களுக்கு குரூப் 2, குரூப் 2 ஏ தேர்வும், 5,255 காலிப் பணியிடங்களுக்கு குரூப் 4 தேர்வும் நடைபெற உள்ளது. இந்த ஆண்டு டிஎன்பிஎஸ்சி சார்பில் 32 வகையான தேர்வுகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அறிவிப்பு வெளியான 75 நாள்களில் தேர்வுகள் நடைபெறும் என்றும் டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் டிஎன்பிஎஸ் குரூப் 2, குரூப் 2 ஏ தேர்வுகள் எப்போது நடைபெறும் என்பதற்கான அறிவிப்பு நாளை வெளியாக உள்ளது. அதற்கான அறிவிப்பை சென்னை அலுவலகத்தில் டிஎன்பிஎஸ்சி தலைவர் நாளை பிற்பகல் 12.30 மணிக்கு வெளியிடுகிறார்.
TNPSC தேர்வுகளில் தமிழ் மொழி கட்டாயம் என அரசாணை கடந்த டிசம்பர் 3 ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ள நிலையில், அது குறித்த பாடத்திட்டம் மற்றும் மாதிரி வினாத்தாள் வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில், தமிழ் மொழித் தகுதித் தாள் (Qualifying Paper), தேர்வர்கள் அனைவருக்கும் கட்டாயமாக்கப்படுகிறது.
தமிழ் மொழித் தகுதித் தேர்வுக்கான பாடத்திட்டம் பத்தாம் வகுப்புத் தரத்தில் நிர்ணயம் செய்யப்படுகிறது. மேற்கண்டவாறு நடத்தப்படும் கட்டாய தமிழ்மொழித் தாளில் குறைந்தபட்சம் 40 சதவீத மதிப்பெண் தேர்ச்சி (Minimum Qualifying Marks) கட்டாயமாக்கப்படுகிறது.
தகுதித் தாளில் தேர்ச்சி பெறாதவர்களின் இதர போட்டித் தேர்வுத்தாள் மதிப்பீடு செய்யப்படமாட்டாது. இந்த அரசாணையின் விளைவாக வெளி மாநிலத்தை சேர்ந்தவர்கள் அல்லது தமிழ் மொழியில் அடிப்படை புலமை இல்லாதவர்களால், தமிழக அரசுப் பணிகளில் சேர முடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
-
Bank of Baroda: பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் அதிகாரி வேலை.. 140 பணியிடங்கள்.. டிகிரி தகுதி தான்! -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம்












Click it and Unblock the Notifications