டிஎன்பிஎஸ்சி குரூப் 2 , குரூப் 2ஏ தேர்வுகள்: எப்போது தேர்வு? எத்தனை மதிப்பெண்கள் - முழு விபரம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: குரூப் 2 குரூப் 2ஏ தேர்வுகள் மூன்று கட்டங்களாக நடைபெறும் என்று என்றும் வரும் மே 21ஆம் தேதி முதற்கட்ட தேர்வு நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் அறிவித்துள்ளார். இந்த தேர்வுக்கான விண்ணப்பங்கள் வரும் 23ஆம் தேதி டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் அறிவிப்பாணை வெளியிடப்படும் என்றும் மார்ச் 23ஆம் தேதி வரைக்கும் விண்ணப்பிக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கு தேவைப்படும் ஊழியர்கள், அலுவலர்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். இதன் மூலம் போட்டி தேர்வுகள் ,நேர்காணல் தேர்வுகள் ஆகியவற்றை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்துகிறது. அரசு பணிகளின் அடிப்படையில் இந்த தேர்வுகள் குரூப் 1, குரூப் 2, குரூப் 3 மற்றும் குரூப் 4 மற்றும் குரூப் 5,6,7,8 ஆகிய தேர்வுகள் உள்ளன.

இந்நிலையில் அரசு துறைகளுக்கு ஊழியர்கள் முதல் அதிகாரிகள் வரை தேர்வு செய்ய நடத்தப்படும் டிஎன்பிஎஸ்சி எனப்படும் அரசு பணியாளர் தேர்வு வாரியத்தின் புதிய பணி நியமனங்கள் மேற்கொள்ளப்படும் என்ற விவரம் முன்கூட்டியே திட்ட அறிக்கையாக வெளியிடப்படும். அதன்படி 2022ஆம் ஆண்டில் மேற்கொள்ள உள்ள பணி நியமனங்கள் போட்டித் தேர்வுகள் மற்றும் தேர்வு விதிமுறைகள் குறித்த திட்ட அறிக்கை கடந்த ஆண்டு இறுதியில் வெளியிடப்பட்டது. அந்த அட்டவணையின்படி, பிப்ரவரி மாதம் குரூப் 2 தேர்வுகளுக்கும், மார்ச் மாதம் குரூப் 4 தேர்வுகளுக்கும் அறிவிப்பு வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது அதன்படி இன்றைய தினம் அறிவிக்கப்பட்டுள்ளது.

குரூப் 2, குரூப் 2ஏ தேர்வுகள்

குரூப் 2, குரூப் 2ஏ தேர்வுகள்

இன்று செய்தியாளர்களிடம் பேசிய தேர்வாணையத்துறை தலைவர் பாலச்சந்திரன், தமிழ்நாடு தேர்வாணையத்தின் வெப்சைட்டில் வரும் 23ஆம் தேதி தேர்வுகாண விண்ணப்பங்கள் வெளியிடப்படும் என்று கூறினார். மார்ச் 23ஆம் தேர்வுகான விண்ணப்பங்களை சமர்பிக்க கடைசி நாளாகும் என்றும் கூறினார். தேர்வுகள் மே 21ஆம் தேதி சனிக்கிழமை நடைபெறும் என்று கூறினார்.

எந்த மொழியில் எழுதலாம்

எந்த மொழியில் எழுதலாம்

தமிழில் எழுத விரும்புபவர்களுக்கு தமிழ் 100 கேள்விகள், ஆப்டியூட் டெஸ்ட் 25 , பொது அறிவியல் 75 என 200 கேள்விகள் மொத்தம் 300 மதிப்பெண்களுக்கு கேள்விகள் கேட்கப்படும். ஆங்கிலத்தில் தேர்வு எழுத விரும்புபவர்களுக்கு பொது ஆங்கிலம் 100 மதிப்பெண்கள், ஆப்டிடியூட் 25 கேள்விகள், பொது அறிவியல் 75 கேள்விகள் என மொத்தம் 200 கேள்விகள் 300 மதிப்பெண்களுக்கு கேட்கப்படும் என்றும் கூறினார். 90 மதிப்பெண்கள் எடுத்தவர்கள் மட்டுமே வெற்றி பெற்றவர்களாக அறிவிக்கப்படும் எனறும் பாலச்சந்திரன் கூறினார்.

 எத்தனை மணிக்கு தேர்வு

எத்தனை மணிக்கு தேர்வு

கடந்த ஆண்டு 2017ஆம் ஆண்டு குரூப் 2 ஏ தேர்வுகள் நடைபெற்றன. காலியிடங்கள் மொத்தம் இன்டர்வியூ போஸ்ட் 116 இடங்களாகவும் நேர்முகத்தேர்வு அல்லாமல் 5413 காலியிடங்களும் உள்ளன. டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் காலை 10 மணிமுதல் பிற்பகல்1 மணி வரை நடைபெற்ற நிலையில் இனி காலை 9.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணிவரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிற்பகல் நடைபெறும் தேர்வு நேரத்தில் மாற்றங்கள் ஏதுமில்லை.

மூன்று கட்ட தேர்வு

மூன்று கட்ட தேர்வு

குரூப் 2, குரூப் 2 ஏ மூன்று கட்டங்களாக நடைபெறும் என்றும் கூறினார். மே 21ஆம் தேதி நடைபெறும் முதற்கட்ட தேர்வுக்கான ரிசல்ட் ஜூன் மாதம் வெளியிடப்படும் என்றும் முதன்மை எழுத்துத்தேர்வுகள் செப்டம்பர் மாதம் நடைபெறும் என்றும் பாலச்சந்திரன் கூறினார். தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு நேர்முகத்தேர்வு அல்லாத பதவிகளுக்கு டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் கலந்தாய்வு நடைபெறும் பாலச்சந்திரன் கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+