ஒரு பதவிக்கு 296 பேர் போட்டி! திணறிய டிஎன்பிஎஸ்சி! இந்த வருடம் இத்தனை பேர் போட்டியா? முழு விபரம் இதோ
சென்னை: குரூப் 4 தேர்வுக்கு 21.85 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர் என்று டிஎன்பிஎஸ்சி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ள நிலையில், ஒரு பதவிக்கு 296 பேர் போட்டியிட வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் எனப்படும் டிஎன்பிஎஸ்சி கடந்த சில நாட்களுக்கு முன் பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக அறிவிப்பாணையை வெளியிட்டது. இதையடுத்து பலரும் ஆர்வத்துடன் விண்ணப்பித்தனர்.
274 கிராம நிர்வாக அலுவலர்கள், 3681 இளநிலை உதவியாளர்கள், 2108 தட்டச்சர்கள், 1024 சுருக்கெழுத்து தட்டச்சர் பணியிடங்கள் என மொத்தம் 7 ஆயிரத்து 138 பணியிடங்களுக்கு இந்த தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
இதேபோல், வீட்டுவசதி வாரியம் மற்றும் நகர்புற வாழ்விடம் மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் இளநிலை உதவியாளர், பில் வசூலிப்பவர் சுருக்கெழுத்து தட்டச்சர் என 163 பணியிடங்களோடு சேர்த்து மொத்தம் 7301 பணியிடங்கள் போட்டித் தேர்வுகள் மூலம் நிரப்பப்படும் எனவும் டிஎன்பிஎஸ்சி அறிவித்தது. மேலும் 81 இடங்கள் விளையாட்டு வீரர்களுக்கான கோட்டா அடிப்படையில் நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

குரூப் 4 தேர்வு
இதைத் தொடர்ந்து குரூப் 4 தேர்வுக்கு கடந்த மாதம் 30ம் தேதி முதல் விண்ணப்பித்தல் தொடங்கியது. சுமார் 30 நாட்கள் விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டது. இந்த காலஅவகாசம் நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணியுடன் முடிவடைந்தது. இதில் லட்சக்கணக்கோர் விண்ணப்பித்துள்ளனர். இது டிஎன்பிஎஸ்சி வரலாற்றில் குரூப் 4 பதவியில் புதிய சாதனை படைத்துள்ளது. இதற்கு முன்பு நடந்த குரூப் 4 தேர்வுக்கு இவ்வளவு பேர் விண்ணப்பித்தது இல்லை. ஏற்கனவே கடந்த 2017ம் ஆண்டு அதிகபட்சமாக 20.76 லட்சம் பேர் தான் விண்ணப்பித்திருந்தனர்.

சாதனை முறியடிப்பு
இந்த சாதனை தற்போது முறியடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் கூறியதாவது: குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க 30 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டது. கடைசி நாளுக்கு முந்தைய 4 நாட்களில் விண்ணப்பிப்போர் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. இறுதி நாளன்றும் நேற்று முன்தினம் விண்ணப்பிக்க அதிகமானோர் ஆர்வம் காட்டினர். இதனால் நேற்று முன்தினம் 12 மணி வரை காலஅவகாசம் வழங்கப்பட்டதால் இரவிலும் நிறைய பேர் விண்ணப்பித்துள்ளனர்.

காலகெடு முடிந்துள்ளது
தற்போது விண்ணப்பிக்க நீட்டிக்கப்பட்டிருந்த காலகெடு முடிந்துள்ளது. இத்தேர்வுக்கு 21,85,328 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில் ஆண்கள் 9,26,583 பேர், பெண்கள் 12,58,616 பேர், மூன்றாம் பாலினத்தவர்கள் 129 பேர் விண்ணப்பித்துள்ளனர். அதைத்தொடர்ந்து குரூப் 4 தேர்வுக்கான எழுத்து தேர்வு ஜூலை 24ம் தேதி நடைபெறும். இந்த தேர்வுகள் காலை 9.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை 3 மணி நேரம் இந்த தேர்வு நடைபெறும்.

அபார சாதனை
டிஎன்பிஎஸ்சிக்கு தேர்வுக்கு இதுவரை கடந்த 2012ம் ஆண்டு 12,33,731 பேர், 2013ம் ஆண்டு 14,05,137 பேர், 2014ம் ஆண்டு 12,72,862 பேர், 2016ம் ஆண்டு 15,79,747 பேர், 2017ம் ஆண்டு 20,76,200 பேர், 2019ம் ஆண்டு 16,31,648 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில் அதிக பட்சமாக 2017ம் ஆண்டு 20,76,200 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் இந்தாண்டு அதையும் விட அதிகபட்சமாக 21,85,328 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications