• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மரத்துக்கு பின்னாடி "டிரஸ் அட்ஜஸ்ட்".. மனிதநேய ஜெய்சங்கர்.. ஷார்ப் எம்ஜிஆர்.. நெகிழும் நடிகை

Google Oneindia Tamil News

சென்னை: மறைந்த முதல்வர் எம்ஜிஆர் குறித்து வெண்ணிற ஆடை நிர்மலா பேசிய பெருமைமிகு பேச்சுக்கள், இணையத்தில் வட்டமடித்து கொண்டிருக்கிறது.
எம்ஜிஆர் = அரை நூற்றாண்டை கடந்தும் அழியாத புகழை இன்றுவரை பெற்று வரும் மூன்றெழுத்து மந்திரம்.. எட்டாவது வள்ளல் எனப்படும் மக்கள் திலகம்.. தமிழக அரசியலில் இன்று வரை அதே சக்தியுடன் திகழும் அற்புதமான முன்மாதிரி.

"வெறும் பொழுதுபோக்கு அம்சமாயிருந்த சினிமாவை மக்களோடும், சமுதாயத்தோடும், இறுதியில் அரசியலோடும் இணைத்து.. ஆட்சியையே கைப்பற்றும் அளவுக்கு மாபெரும் சக்தி படைத்த மகத்தான கலைஞர்...

நீங்க உத்தரவு போட கூடாது.. அருந்ததி சமூக பெண் ஊராட்சி தலைவர் விரட்டியடிப்பு! திருவண்ணாமலையில் கொடுமைநீங்க உத்தரவு போட கூடாது.. அருந்ததி சமூக பெண் ஊராட்சி தலைவர் விரட்டியடிப்பு! திருவண்ணாமலையில் கொடுமை

குடைக்குள் எம்ஜிஆர்

குடைக்குள் எம்ஜிஆர்

இன்றும்கூட இவர்மீது ரசிகர்கள், அசைக்கமுடியாத அன்பை வைத்திருக்கிறார்கள்.. சமீபத்தில், கொடநாடு சாலையிலுள்ள எம்ஜிஆர் சிலை மழையில் நனைந்துகொண்டிருந்தது.. அதை பார்த்ததுமே எம்ஜிஆர் ரசிகர் ஒருவர், கேட்டை திறந்துகொண்டு உள்ளே சென்று சிலை அமைக்கப்பட்டுள்ள தூண் மீது ஏறி, எம்ஜிஆர் சிலை நனையாதவாறு கையில் வைத்திருந்த குடையை உயர்த்திப் பிடித்து நின்று கொண்டிருந்தார்.. இதுதான் எம்ஜிஆர் ரசிகர்கள்..!

சபாஷ் ஜெய்சங்கர்

சபாஷ் ஜெய்சங்கர்

இவரை பற்றி எத்தனையோ நடிகர், நடிகைகள் பெருமையுடன் பேசிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.. அந்தவகையில், அவருடன் இணைந்து பணியாற்றிய நடிகை வெண்ணிற ஆடை நிர்மலா ஒரு பிரபல சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.. அதில், அவரிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டது.. அதில் எம்ஜிஆர் மற்றும் ஜெய்சங்கர் குறித்த இனிய தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.. அந்த தகவல்களை அவரவர் ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி கொண்டிருக்கிறார்கள்.. அதன் சுருக்கம்தான் இது..!

டேபிள் லைட்

டேபிள் லைட்

ஒவ்வொரு செயல்பாடும் எனக்கு ஆச்சரியத்தை தரும்.. முதன்முதலில் நான் அவரிடம் ஆச்சரியப்பட்ட விஷயம் என்னவென்றால், எம்ஜிஆர் நடிக்கும் எந்த ஷூட்டிங்கிலும், டேபிள் சேர் ஒன்று போட்டு வைத்திருப்பார்கள்.. அதில் டேபிள் லைட் வைத்திருப்பார்கள்.. ஷூட்டிங் பிரேக் நேரத்தில், எம்ஜிஆர் இந்த சேரில் உட்கார்ந்து ஏதோ எழுதி கொண்டே இருப்பார்.. இவர் அடிக்கடி ஏதோ எழுதிக்கொண்டே இருக்கிறாரே என்று ஒருநாள் அருகில் சென்று கவனித்தேன்..

செக்கரட்டரி

செக்கரட்டரி

அப்போதுதான், அரசியல் தொடர்பாக பலருக்கு கைப்பட பதில்களை, விளக்கங்களை, கண்டனங்களை, அவரே எழுதி கொண்டிருந்தார்.. உடனே நான் அவரிடம் கேட்டேன், "ஏன் சார், ஒரு செக்கரட்டரி யாரையாவது வைத்துக்கொள்ளலாமே? நீங்கள் சொல்லும் பதில்கள், அல்லது கண்டனங்களை அவர்கள் நோட்ஸ் எடுத்துக்கொண்டு, விரிவாக எழுதுவார்களே... நீங்கள் எதுக்காக உங்கள் கைப்பட எழுத வேண்டும்? என்று கேட்டேன்..

திரிஞ்சிடும்

திரிஞ்சிடும்

அதற்கு எம்ஜிஆர், நாம அந்த மாதிரியெல்லாம் செய்யக்கூடாது.. "ஒருத்தன் கருப்பா வாந்தி எடுத்தானாம்.. ஆனால், இந்த விஷயம், நாலஞ்சி பேர் மூலமாக மாறி மாறி போகும்போது, "காக்கா காக்காவா" வாந்தி எடுத்தான்னு அந்த வார்த்தையே திரிஞ்சி போயிடும்.. அதுமாதிரி நாம சொல்லக்கூடிய விஷயம் என்னவோ, அதற்கு நேர்எதிரான விஷயமாக வெளிப்பட்டுவிடக்கூடாது.. அதனால் எந்த ஒரு கருத்தையும் நாமே சொன்னால்தான் அது சரியாக இருக்கும்" என்றார்.. இன்றைக்கு ட்விட்டரில் "அட்மினை" போட்டு பலர் பதிவுகளை எழுதி கொண்டிருக்கும்போது, எம்ஜிஆர் எவ்வளவு ஷார்ப்பாக அப்போது சிந்தித்துள்ளார் பாருங்கள்.

ஜெய்சங்கர் + ஜாலி

ஜெய்சங்கர் + ஜாலி

ஜெய்சங்கர் பற்றி சொல்லணும்னா, ரொம்ப ஃப்ரண்ட்லியான நபர்.. ஆனால், எம்ஜிஆர் சார், சிவாஜி சார் போன்ற பெரிய பெரிய ஹீரோக்களுடன் நடிக்கும்போது, ஷூட்டிங்கில் ஷாட் இல்லாத நேரத்தில் யாரும் சத்தம் போட்டு பேசக்கூடாது.. சத்தம் போட்டு சிரிக்கக்கூடாது.. கால் மேல கால் போட்டு உட்காரக்கூடாது, இப்படியெல்லாம் நிறைய கட்டுப்பாடு இருக்கும்.. ஆனால், ஜெய்சங்கர் அப்படி இல்லை.. ஃப்ரண்ட்லியாக பழக கூடியவர்.. "ஓகே, ரைட்" இதுபோன்ற வார்த்தைகள் எல்லாம் அவர் நடிக்கும்போதுதான், முதல்முதலாக பயன்படுத்தப்பட்டன.. அதுக்கு முன்னாடி எல்லாம் இந்த "ஓகே" வார்த்தையெல்லாம் சினிமாவில் கிடையாது.. ஒரு பெண்ணின் கஷ்டங்களை உணரக்கூடியவர் ஜெய்சங்கர்..

ஷூட்டிங் + அட்ஜஸ்ட்

ஷூட்டிங் + அட்ஜஸ்ட்

அவுட்டோர் ஷூட்டிங் நடக்கும்போது, நடிகைகள் தங்கள் டிரஸ்ஸை சரிசெய்து செய்து கொள்ள வேண்டி, தயங்கி நிற்பார்கள்.. அதை புரிந்து கொண்ட ஜெய்சங்கர், உடனே டைரக்டரிடம் சென்று, "அவங்க டிரஸ்ஸை அட்ஜஸ்ட் செய்து கொண்டு வரட்டும், கொஞ்சம் அனுப்பி வைங்க" என்று அனுமதி கேட்டு எங்களை அனுப்பி வைப்பார்.. அப்போதெல்லாம் கேரவன் கிடையாது.. மரத்துக்கு பின்னாடிதான் மறைந்திருந்து டிரஸ்ஸை சரி செய்து கொள்ள வேண்டி வரும்.. இதுமாதிரியான தர்மசங்கட சூழலை, நாங்கள் சொல்லாமலேயே, அவரே புரிந்து கொண்டு உதவி செய்வார்.." என்ற பெருமையுடன் அந்த பேட்டி நீள்கிறது.

English summary
Top star MGRs Good qualities and actor Jaisankars fantastic Character, explains Actress Vennira Aadai Nirmala
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X