கிறிஸ்துமஸுக்கு முதல் நாள் ஊருக்கு செல்ல ரயிலில் முன்பதிவு இன்று தொடக்கம்.. புக்கிங் செய்வது எப்படி?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தொடர் விடுமுறை ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது. அரையாண்டு விடுமுறை, கிறிஸ்துமஸ் விடுமுறை ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. டிசம்பர் 24 ஆம் தேதி பயணம் செய்வதற்கு இன்று முன்பதிவு செய்யலாம்.

தமிழகத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்பு அரையாண்டு தேர்வு விடுமுறை விடப்படும். அரையாண்டு விடுமுறையையொட்டி சொந்த ஊர்களுக்கு செல்பவர்கள் வசதிக்காக டிசம்பர் 22 ஆம் தேதிக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு அண்மையில் தொடங்கியது. ஐ.ஆர்.சி.டி.சி இணையதளம் வழியாகவும், ரயில் டிக்கெட் முன்பதிவு மையங்கள் மூலமாகவும் முன்பதிவு நடைபெற்று வருகிறது.

Christmas railway train

முன்பதிவு தொடங்கிய சிறிது நேரத்தில் தென் மாவட்டங்களுக்குச் செல்லும் கன்னியாகுமரி, அனந்தபுரி போன்ற ரெயில்களில் டிக்கெட்கள் விற்றுத் தீர்ந்தன. பொதிகை, முத்துநகர், கொல்லம், குருவாயூர், செந்தூர் போன்ற தென் மாவட்ட ரயில்களில் டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது.

டிசம்பர் 23 ஆம் தேதி சொந்த ஊர் செல்பவர்கள் நேற்று வெள்ளிக்கிழமை முன்பதிவு செய்தனர். அதேபோல டிசம்பர் 24 ஆம் தேதி சொந்த ஊர் செல்பவர்கள் இன்று சனிக்கிழமை முன்பதிவு செய்யலாம். டிசம்பர் 25 ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று சொந்த ஊர் செல்பவர்கள் நாளை 26 ஆம் தேதி முன்பதிவு செய்யலாம். மேலும், முன்பதிவு காலை 8 மணிக்கு தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ரயில் டிக்கெட்டுகளை ஆன்லைன் மூலமாகவோ அல்லது ரயில் நிலையத்தில் நேரடியாகவோ முன்பதிவு செய்யலாம். ஆன்லைனில் முன்பதிவு செய்ய, IRCTC இணையதளம் அல்லது செயலியைப் பயன்படுத்தலாம். Rail one செயலி மூலம் எளிதாக டிக்கெட் புக் செய்யலாம்.

IRCTC இணையதளத்தில் புறப்படும் இடம், சென்று சேரும் இடம், தேதி ஆகியவற்றை தேர்வு செய்து கொள்ள வேண்டும். முன்பதிவு செய்யும்போது அடையாள அட்டைகளில் ஏதாவது ஒன்று தேவைப்படும். ஆதார் அடையாள அட்டை எண்ணை முன்பதிவு செய்யும்போது உடன் வைத்திருக்க வேண்டும். பயணிகளின் பெயர்கள், வயது, பாலினம் போன்ற விவரங்கள் பூர்த்தி செய்த பின்னர், கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு அல்லது வேறு ஏதேனும் ஆன்லைன் கட்டண முறை மூலம் பணம் செலுத்தலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+