அண்ணோவ்.. நான் ரவுடிலாம் இல்லணா! என்ன பண்ணாலும் பஞ்சாயத்து ஆகுது! படுத்தே விட்ட டிடிஎஃப் வாசன்!
சென்னை : பைக்கில் சென்றால் தானே பிடிப்பீர்கள் நான் காரில் செல்கிறேன் என வம்பாக பேசி தற்போது போலீசாரிடம் சிக்கி இருக்கும் டிடிஎஃப் வாசன், தான் ரவுடி எல்லாம் கிடையாது.. நான் என்ன பண்ணாலும் பிரச்சனை ஆகி விடுகிறது என புலம்பி இருக்கிறார்.
வாயில் வாஸ்து சரி இல்லை என சொல்வார்கள் அது யாருக்கு பொருந்துகிறதோ பைக்கில் சாகசம், யூட்யூபில் வீடியோ என ஃபேமஸ் ஆகி வந்த டிடிஎஃப் வாசனுக்கு பொருந்தும். ஆரம்பத்தில் பைக்கில் ஊர் சுற்றும் சாதாரண இளைஞன் தானே என இருந்த வாசன் தற்போது பிரபல நடிகர்களுடன் ஒப்பிட்டுப் பேசும் அளவுக்கு வளர்ந்திருக்கிறார்.
யூடியூபில் ஃபேமஸ் ஆவதும் அவர் வருமானம் ஈட்டுவதும் அவரது தனிப்பட்ட திறமை மற்றும் முயற்சி சார்ந்தது. அதில் யாருக்கும் மாற்று கருத்து இல்லை. அதே நேரத்தில் சாகசம் செய்கிறேன் என்ற பெயரில் அதிவேகமாக பைக் ஓட்டுவது கைகளை விட்டு சாகசம் செய்வது இளைஞர்களை தவறாக வழி நடத்துவதாக புகார் எழுந்தது.

டிடிஎஃப் வாசன்
இதனை தொடர்ந்து எந்த நிகழ்ச்சிக்கு சென்றாலும் ஏதாவது ஒரு சர்ச்சையில் சிக்கி சின்னாபின்னம் ஆவது அவருக்கு வாடிக்கையாக போனது. தமிழ்நாடு மட்டுமல்லாது லடாக் வரையிலும் போக்குவரத்து விதிமீறல் வழக்குகளும் அதனால் அபராதமும் கட்டி இருக்கிறார் டிடிஎஃப் வாசன். கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட கடலூர் வந்த போது அவரது ரசிகர்கள் எனக் கூறிக் கொள்ளும் 2கே கிட்ஸ் அலப்பறை தாங்க முடியாமல் போலீசார் கடுப்பாகினர். ஹெல்மெட் அணியாமல் தாறுமாறாக வண்டி ஓட்டி போலீசார் மீது இடிப்பது போல் சென்றதால் பலருக்கு 'கவனிப்பு' கிடைத்தது.

அத்துமீறல்
மேலும் வழக்கு பதிவு செய்யப்பட்டு சில வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. அதற்குப் பிறகு வீடியோ ஒன்றில் பேசிய டிடிஎஃப் வாசன் நான் பைக்கில் சென்றால் தானே பிடிப்பீர்கள் இப்ப பாருங்க கார்ல போறேன் என பேசி இருந்தார். தற்போது காருக்கும் சிக்கல் முளைத்திருக்கிறது. நேற்று சென்னையில் திரைப்படம் ஒன்றின் சிறப்புக் காட்சியை டிடிஎஃப் வாசன் காண வந்தார். எப்படியும் அவரை பார்க்க கூட்டம் வரும் என முன்னெச்சரிக்கையாக போலீசார் அங்கு குவிக்கப்பட்டிருந்தனர். அப்போது வெள்ளை நிற காரில் மாசாக என்ட்ரி கொடுத்தார் வாசன். அப்போதுதான் அந்த சிக்கலும் முளைத்தது.

காருக்கு ஃபைன்
டிடிஎஃப் வாசன் ஓட்டி வந்த காரில் பதிவு எண் இல்லாமல் இருந்தது. அதை அடுத்து போக்குவரத்து விதிகளை மீறி பதிவெண் இல்லாமல் காரை ஓட்டி வந்த குற்றத்திற்காக அவருக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் வாகனத்தின் பதிவினை ஒட்டிவிட்டு காரை எடுத்துச் செல்லுங்கள் என காரையும் போலீசார் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. இதையடுத்து அந்த கார் அவருடைய நண்பருடையது என்பது காரை சில தினங்களுக்கு முன்பே வாங்கியதும் தெரிய வந்தது. போலீசார் விதித்த அபராதத்தை கட்டியதோடு உடனடியாக அந்த வாகனத்தின் நம்பர் பிளேட்டும் ஒட்டப்பட்டது. இதை தொடர்ந்து அந்த விவகாரம் முடிவுக்கு வந்தது.

ரவுடியெல்லாம் இல்லை
இந்நிலையில் இது தொடர்பாக தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள டிடிஎஃப் வாசன்," நான் எது செய்தாலும் பிரச்சினையாகி விடுகிறது அண்ணா. நிறைய பேர் என்ன ரவுடி மாதிரி பாக்குறாங்க .. யாரோ எங்கேயோ பிரச்சனை பண்ணாலும் என்னோட பாலோவர்ஸ் தான் பண்றாங்க அப்படின்னு கிளப்பி விட்டுறாங்க.. நான் ரவுடி எல்லாம் கிடையாது.. எங்க ஊர்ல என்ன ரவுடி மாதிரி பாக்குறாங்க.. ரொம்ப கஷ்டமா இருக்கு.. பைக்ல போனா தான் பிரச்சனைன்னு கார்ல போனா கார்லயும் பிரச்சனை வருது.. கையை விட்டு பைக் ஓட்டியது தப்புதான் இனிமேல் ஓட்ட மாட்டேன். அதுக்காக என்னை ரவுடி போல சித்தரிக்க வேண்டாம் அண்ணா" என கூறியிருக்கிறார். இதையடுத்து படுத்தே விட்டானய்யா டிடிஎஃப் வாசன் என கமெண்ட் செய்து வருகின்றனர்.
-
Gold price: மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. நகை பிரியர்கள் ஹேப்பி.. ஒரு சவரன் ரேட் என்ன? -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்!












Click it and Unblock the Notifications