Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஈபிஎஸ் காட்டுமிராண்டி போல நடக்கிறார் “உங்க வயசுக்கு இதெல்லாம்” ஓபிஎஸ்க்கு சப்போர்ட்டாக வந்த தினகரன்!

Subscribe to Oneindia Tamil

சென்னை : ஓ.பன்னீர்செல்வம் குறித்து ஆவேசமாகப் பேசிய எடப்பாடி பழனிசாமியை அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.

எங்கள் வயதுக்கு நாங்களே கோபப்படுவது இல்லை. எடப்பாடி பழனிசாமி கோபம் கொள்கிறார். ஒரு காட்டுமிராண்டியைப் போல் நடந்து கொள்கிறார் என டிடிவி தினகரன் கடுமையாகச் சாடியுள்ளார்.

மேலும், ஜெயலலிதா மரணம் பற்றிய ஆறுமுகசாமியின் அறிக்கை அரசியல்வாதியின் அறிக்கை போல் உள்ளதாகவும் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.

அரசியல்வாதியின் அறிக்கையை போல்

அரசியல்வாதியின் அறிக்கையை போல்

மருதுபாண்டியரின் 221-வது நினைவு தினத்தையொட்டி சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் உள்ள மருது சகோதரர்களின் சிலைகளுக்கு அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் அறிக்கை என்பது, ஒரு அரசியல்வாதியின் அறிக்கையைப் போல் உள்ளது. இதை நான் மட்டும் சொல்லவில்லை. தமிழ்நாட்டில் உள்ள அனைவரும் சொல்கின்றனர்.

சித்தியை காப்பாற்ற

சித்தியை காப்பாற்ற

எங்கள் சித்தியை பாதுகாப்பதற்காக நான் இதைக் கூறவில்லை. மூத்த பத்திரிகையாளர்கள், பத்திரிகைகள், பொதுவானவர்கள், அரசியலுக்கு அப்பாற்பட்டவர்கள், ஏன் எங்களுக்கு எதிரானவர்கள் கூட அந்த அறிக்கை உண்மை இல்லை என்று கூறுகின்றனர். இந்த விவகாரம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும். ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் அறிக்கை மிகவும் தவறானது.

மருத்துவர்கள் அஞ்சுவார்கள்

மருத்துவர்கள் அஞ்சுவார்கள்

மருத்துவர்கள், அரசு அதிகாரிகள், எய்ம்ஸ் மருத்துவமனை நிபுணர்கள், அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர்கள் ஆகியோரின் மரியாதையை குலைக்கும் வகையில் இந்த விசாரணை அறிக்கை உள்ளது. விஐபி அந்தஸ்தில் உள்ளவர்கள் இனிவரும் காலங்களில் சிகிச்சைக்காக மருத்துவமனைக்குச் சென்றால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் பயப்படுவார்கள். அவர்கள் மீது வீண்பழிதான் ஏற்படும் என அஞ்சுவார்கள்." எனத் தெரிவித்தார்.

காட்டுமிராண்டி போல

காட்டுமிராண்டி போல

மேலும், ஓபிஎஸ் பற்றி எடப்பாடி பழனிசாமி கோபமாகப் பேசியதை விமர்சித்த டிடிவி தினகரன், "ஓபிஎஸ் விளக்கம் அளித்ததை நான் தொலைக்காட்சியில் பார்த்தேன். அவரே இதனை நிரூபித்தால் நான் அரசியலை விட்டே விலகுகிறேன், இல்லாவிட்டால் எடப்பாடி பழனிசாமி பதவி விலக தயாரா எனக் கேட்டுள்ளார். எதிர்க்கட்சித் தலைவர், முதலமைச்சரை சந்திப்பதில் தவறு இல்லை. எடப்பாடி பழனிசாமி கோபத்துடன் நடந்துகொள்கிறார். ஒரு முதலமைச்சராக இருந்தவர் இதுபோல் நடந்துகொள்வது சரியல்ல. எங்கள் வயதுக்கு நாங்களே கோபப்படுவது இல்லை. அவர் கோபம் கொள்கிறார். ஒரு காட்டுமிராண்டி போல் நடந்து கொள்கிறார்." எனத் தெரிவித்துள்ளார்.

எந்தப் பதவியில் இருந்தாலும்

எந்தப் பதவியில் இருந்தாலும்

மேலும் பேசிய தினகரன், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு யார் யாரெல்லாம் காரணம், யாரெல்லாம் அதற்கு அனுமதி கொடுத்தனர் என்பதை விசாரித்து, அது யாராக இருந்தாலும், அவர்கள் எந்த பதவியில் இருந்தாலும் பாரபட்சமின்றி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதான் தூத்துக்குடி போராட்டத்தில் ஈடுபட்டு உயிரிழந்தவர்களின் குடும்பங்களைச் சேர்ந்தவர்களின் கோரிக்கை. இதனை அரசு நிறைவேற்ற வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+