பைத்தியம்.. ’கதவு’னாலே பிரச்சினை! அண்ணாமலைக்கு ஆதரவாய் வந்த சூர்யா சிவா! காயத்ரி ரகுராமுக்கு சவால்!
சென்னை : பாஜகவில் இருந்து விலகிய திருச்சி சூர்யா சிவா திடீரென அண்ணாமலைக்கு ஆதரவாக ட்விட்டர் யுத்தத்தில் ஈடுபட்டு வரும் முன்னாள் பாஜக நிர்வாகி காயத்ரி ரகுராமுக்கு எதிராக களத்தில் குதித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாஜகவின் சிறுபான்மை பிரிவு மாநிலத் தலைவர் டெய்சி சரண் மற்றும் ஓபிசி பிரிவு மாநிலச் செயலர் சூர்யா சிவா ஆகியோருக்கு இடையில் நடந்த உரையாடல் தொடர்பான ஆடியோ சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் ஆனது.
இந்த விவகாரம் தொடர்பாக சூர்யா சிவா கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டாம் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ள நிலையில், இதே விவகாரத்தில் பாஜக பிரமுகரான காயத்ரி ரகுராம் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

காயத்ரி ரகுராம்
இதனையடுத்து கட்சியில் இருந்து விலகுவதாக அவர் அறிவிக்க, அவரது ராஜினாமாவை ஏற்றுக் கொண்டதாகவும் அவர் நிரந்தரமாக நீக்கப்படுவதாக அக்கட்சி தலைமை அறிவித்தது. அப்போதிலிருந்து தற்போது வரை ஏதாவது ஒரு விவகாரத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை அவர் தொடர்ந்து ட்விட்டரில் விமர்சித்து வருகிறார். மேலும் ஈரோடு இடைத்தேர்தலில் அண்ணாமலை போட்டியிட சவால் விடுகிறேன், நான் உங்களை எதிர்த்து நிற்பேன் சவால் விடுகிறேன். உங்கள் நாடகம் மற்றும் போலி விளம்பரங்கள் டெல்லியில் வெளிவரட்டும். சவாலை ஏற்றுக்கொள்வீர்களா? எனவும் கேட்டிருந்தார்.

சூர்யா சிவா
இந்நிலையில் திருச்சி சூர்யா சிவா திடீரென அண்ணாமலைக்கு ஆதரவாக ட்விட்டர் யுத்தத்தில் ஈடுபட்டு வரும் முன்னாள் பாஜக நிர்வாகி காயத்ரி ரகுராமுக்கு எதிராக களத்தில் குதித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக பதிவிட்டுள்ள சூர்யா சிவா," கூப்பிடுற இடத்துக்கெல்லாம் வரத்துக்கு அவரை என்னன்னு நினைச்சீங்க? தைரியம் இருந்தால் அண்ணன் சவுக்கு சங்கர் மாதிரி உதயநிதியை எதிர்த்து நிற்பேன் என்று சொல்லு இல்லை என்றால் நீலகிரி பாராளுமன்ற தொகுதியில் முருகனை எதிர்த்து நிற்பேன் என்று சொல்லு.

ஆடியோ - வீடியோ
அதை விட்டுவிட்டு தேர்தலில் நிற்க விருப்பம் இல்லாதவரை வாருங்கள் நாம் தேர்தலில் போட்டியிடலாம் என்று சொல்வது சரியா? நான் இந்த விவாதத்திற்கு வருவது தேவையற்றது. ஆனால் நீங்கள் கொடுக்கக்கூடிய பேட்டியில் எல்லா இடத்திலும் என் பெயரை தொடர்ச்சியாக பயன்படுத்திக் கொண்டே இருக்கிறீர்கள். நீங்கள் என்னிடம் ஆடியோ இருக்கிறது வீடியோ இருக்கிறது என்று சொல்லி தான் கட்சியை விட்டு விலகினீர்கள் ஆனால் கட்சியை விட்டு உங்களை விலக்கிய பிறகு எங்கே அந்த ஆடியோ வீடியோ என்று கேட்டால் என்னிடம் எதுமே கிடையாது அது திருச்சி சூர்யாவிடம் தான் இருக்கிறது என்று சொல்வது முதலில் சரியா?

சந்திக்க தயார்
உங்கள் அனைத்து கேள்விகளுக்கும் உங்களிடம் நேரடியாக சந்திக்க நான் தயாராக இருக்கிறேன். உங்களுக்கு திராணி தைரியம் இருந்தால் ஒரு தனியார் தொலைக்காட்சியில் விவாதத்தை வைத்துக் கொள்ளலாம் நாம் இருவரும் நேரடியாக சந்திக்க?நான் தயார் நீங்கள் தயாரா? முதலில் என்கிட்ட வா மா. நான் ராஜினாமா செய்த அடியாள் என்றால் நீ டிஸ்மிஸ் செய்யப்பட்ட பைத்தியம். நீ போய் நிற்கிற இடத்தில் எல்லாம் அவரும் வந்து நிற்பாரா?

கதவுனாலே பிரச்சினை
நீ தான் என் கேள்விகளுக்கு பதில் இருக்கிறதா என்னை நேரில் சந்திக்க யாருக்கு தைரியம் இருக்கிறது என்று ஒரு பேட்டியில் கேட்ட? எனக்கு இருக்கிறது தங்களுக்கு? கதவு நாளே உனக்கு ஏமா பிரச்சனையா இருக்குது. கண்ணாடி கதவு போட்டாலும் பிரச்சனை கதவை திறந்தாலும் பிரச்சனை கொஞ்சம் உன் கதவை நீ மூடிகிட்டு இருந்தா தான் என்ன. ஏதோ விமான போக்குவரத்து துறை அமைச்சர் என்று நினைப்பு" என கடுமையாக பதிலடி கொடுத்திருக்கிறார். பாஜகவில் இருந்து விலகிய சூர்யா சிவா திடீரென அண்ணாமலைக்கு ஆதரவாக ட்விட்டர் யுத்தத்தில் குதித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
மொத்தமாக காலியாகும் மம்தா கட்சி.. பாஜகவுக்கு தாவும் 50 திரிணாமுல் MLAகள்? 20 எம்பிக்களும் ராஜினாமா? -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications