ஒரு செங்கல்லை வைத்து கோட்டை எழுப்பிய உதயநிதி.. 68133 வாக்கு வித்தியாசத்தில்.. சேப்பாக்கத்தில் வெற்றி

Subscribe to Oneindia Tamil

சென்னை: சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்ட உதயநிதி ஸ்டாலின் 68133 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். சேப்பாக்கம் தொகுதியில் பாமக வேட்பாளர் கஸ்ஸாலி சுமார் 21000 வாக்குகளை மட்டுமே பெற்று தோல்வி அடைந்துள்ளார்.

Recommended Video

    சேப்பாக்கத்தில் 50000 வாக்கு வித்தியாசத்தில் Udhayanidhi Stalin வெற்றி

    திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் முதன்முறையாக தேர்தலில் போட்டியிட்ட நிலையில் வெற்றி பெற்றுள்ளார்.

    தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6ம் தேதி நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. அதிமுக, திமுக, மநீம, நாம் தமிழர், அமமுக என ஐந்து முனை போட்டி நிலவுகிறது.

    திமுக முன்னிலை

    திமுக முன்னிலை

    பிற்பகல் 3.50 மணி நிலவரப்டி திமுக கூட்டணி திமுக 149 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இதில் கிள்ளியூர், விளாத்திகுளம், சேப்பாக்கம், வந்தவாசி ஆகிய தொகுதிகளின் வெற்றியும் அடக்கம். அதிமுக கூட்டணி 82 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. வால்பாறை, பவானிசாகர் தொகுதி வெற்றியும் இதில் அடக்கம் ஆகும்.

    கொளத்தூர் சேப்பாக்கம்

    கொளத்தூர் சேப்பாக்கம்

    சென்னையில் உள்ள கொளத்தூர், சேப்பாக்கம், ராயபுரம், விருகம்பாக்கம், வில்லிவாக்கம், துறைமுகம், தி.நகர் உள்பட 16 தொகுதிகளிலும் திமுக முன்னிலை வகிக்கிறது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களிலும் திமுக கூட்டணியே பெரும்பலான இடங்களில் முன்னிலை வகிக்கிறது

    எடப்பாடி முன்னிலை

    எடப்பாடி முன்னிலை

    அதிமுக கூட்டணி கோவை, திருப்பூர் மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் முன்னிலை வகிக்கிறது. சேலம், ஈரோடு மாவட்டங்களிலும் கணிசமான இடங்களில் அதிமுக முன்னிலை வகிக்கிறது. எடப்பாடி தொகுதியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வென்றுள்ளார், போடியில் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம், குமாரபாளையத்தில் அமைச்சர் தங்கமணி, தொண்டாமுத்தூரில் வேலுமணி ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள்.

    சேப்பாக்கத்தில் வெற்றி

    சேப்பாக்கத்தில் வெற்றி

    சென்னை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்ட திமுகவின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆரம்பம் முதலே மிகப்பெரிய அளவில் வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை வகித்தார். உதயநிதி ஸ்டாலின் 68133 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். சேப்பாக்கம் தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் 81601 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். பாமக வேட்பாளர் கஸ்ஸாலி 21076 வாக்குகளை பெற்று தோல்வி அடைந்துள்ளார்

    திமுக உற்சாகம்

    திமுக உற்சாகம்

    உதயநிதி ஸ்டாலின் முதல்முறையாக சட்டசபை தேர்தலில் களம் கண்டார். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஒரு செங்கல் தான் நடப்பட்டதாக கூறி பிரச்சாரம் செய்து பரபரப்பை ஏற்படுத்தினார் ஒரு செங்கலை உதயநிதி செய்த பிரச்சாரம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த சூழலில் ஒரு செங்கல்லை வைத்து கோட்டை எழுப்பிய உதயநிதி 68133 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருப்பது திமுகவினரை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+