சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நாளை முதல் ஹோட்டல்களில் அமர்ந்து சாப்பிடலாம்.. ஆனால் சில கண்டிஷன்.. தமிழக அரசின் அதிரடி உத்தரவு!

தமிழகத்தில் நாளை ஹோட்டல்கள் திறக்கப்பட உள்ள நிலையில் இதற்கான கட்டுப்பாடுகள், விதிமுறை வெளியிடப்பட்டு உள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் நாளை ஹோட்டல்கள் திறக்கப்பட உள்ள நிலையில் இதற்கான கட்டுப்பாடுகள், விதிமுறை வெளியிடப்பட்டு உள்ளது.

Recommended Video

    தமிழகத்தில் நாளை முதல் அமலாகும் புதிய விதிகள்.. என்னென்ன கட்டுபாடுகள்?

    அன்லாக் 1.0 நாளை முதல் நாடு முழுக்க அமலுக்கு வருகிறது. கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர மற்ற இடங்களில் நாளை முதல் முக்கியமான தளர்வுகள் அமலுக்கு வருகிறது.

    தமிழகத்தில் நாளை கோவில்கள், மால்கள், ஹோட்டல்கள் திறக்கப்பட உள்ளது. இந்த தளர்வுகள் மொத்தம் மூன்று கட்டமாக நாடு முழுக்க அமலுக்கு வரும்.

    ஊரடங்கில் தளர்வு.. பெட்ரோல், டீசல் விலையும் ஊரடங்கில் தளர்வு.. பெட்ரோல், டீசல் விலையும் "தளர்வு".. சென்னையில் 34 நாட்களுக்கு பிறகு கிடுகிடு

    நாளை திறப்பு

    நாளை திறப்பு

    ஹோட்டல்கள் திறக்கப்பட உள்ள நிலையில் தமிழக ஹோட்டல்களில் நாளையில் இருந்து பின் வரும் விதிகளை கடைபிடிக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டு இருக்கிறது. அதன்படி ஹோட்டல்களில் கண்டிப்பாக தெர்மல் ஸ்கெனிங் கருவிகள் இருக்க வேண்டும். வாசலில் எல்லா வாடிக்கையாளர்களையும் தெர்மல் சோதனை செய்துதான் உள்ளே அனுப்ப வேண்டும். எக்காரணம் கொண்டும் கொரோனா அறிகுறி உள்ள நபர்களை உள்ளே அனுப்ப கூடாது.

    உடல் வெப்பநிலை

    உடல் வெப்பநிலை

    அதிக உடல் வெப்பநிலை இருந்தாலும் கடைக்கு உள்ளே அனுப்ப கூடாது.ஹோட்டலின் நுழைவாயிலில் கிருமி நாசினி இருக்க வேண்டும். கையை கிருமி நாசினி கொண்டு கழுவிய பின்தான் உள்ளே அனுமதிக்க வேண்டும். கைகழுவும் இடத்திலும் கண்டிப்பாக கிருமி நாசினி இருக்க வேண்டும். டேபிள்களை சுத்தமாக துடைத்து வைத்து இருக்க வேண்டும். கடைகளை திறக்கும் முன் முழுமையாக கிருமி நாசினி கொண்டு கழுவ வேண்டும்.

    ஏசிக்கு தடை

    ஏசிக்கு தடை

    ஏசி மூலம் கொரோனா பரவும் ஆபத்து இருக்கிறது. இதனால் ஏசி ரூம்களை இயக்க கூடாது. ஹோட்டல்களில் மின்விசிறிகள் இயங்கலாம். ஆனால் ஏசிகள் இயங்க கூடாது. 50% இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி. டேபிள் அருகருகே இருக்க கூடாது. குறைந்தது டேபிளுக்கு இடையே 6 மீட்டர் இடைவெளி விட்டு இருக்க வேண்டும். தினமும் கழிவறைகளை 5 முறை சுத்தமாக கழுவ வேண்டும்.

    ஊழியர்கள் மாஸ்க்

    ஊழியர்கள் மாஸ்க்

    ஊழியர்கள் எல்லோரும் மாஸ்க் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைப்பிடித்து பணிகளை செய்ய வேண்டும். செயின், கடிகாரம் உள்ளிட்ட ஆபரணங்கள் ஊழியர்கள் அணிய கூடாது. உணவுகளை சமைக்கும் போது சரியாக தரக்கட்டுப்பாட்டை பயன்படுத்த வேண்டும். கூடுதல் கட்டணம் எதுவும் வசூலிக்க கூடாது. பழைய உணவு பொருட்களை விற்க கூடாது , என்று கூறப்பட்டு உள்ளது.

    English summary
    Unlock 1.0: Rules and regularities for people to follow at hotel in Tamilnadu from tomorrow.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X