இறந்தும் வாழும் உயிரானாய்..உயர் வானம்போல் - கருணாநிதி சிலை திறப்பு...கவிஞர் வைரமுத்து கவிதை
கருணாநிதியின் முழு உருவ சிலை திறப்பு விழா குறித்து கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பதிவில் கவிதை வெளியிட்டுள்ளார்.
சென்னை: நிலையானாய்; வடக்கைத் தீண்டும் நீட்சியுமானாய்; இன்று சிலையானாய்; சிலையெடுத்த
செல்வனை வாழ்த்து தந்தாய் என்று கருணாநிதி சிலை திறக்கப்படுவது குறித்து கவிஞர் வைரமுத்து கவிதையில் பெருமிதம் தெரிவித்திருக்கிறார்.
Recommended Video
தமிழ்நாடு முதல்வராக 5 முறை பதவி வகித்தவரும், முன்னோடி திட்டங்களை கொண்டு வந்தவருமான மூத்த அரசியல் தலைவர் கருணாநிதிக்கு ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் சிலை திறக்கபட உள்ளது.
14 அடி உயர பீடத்தில், 16 அடி உயரத்தில் வெண்கலத்தில் கலைஞரின் உருவச்சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்தி திணிப்பு எதிர்ப்பு, மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி உள்ளிட்ட கலைஞரின் 5 கட்டளைகள் பீடத்தில் பொறிக்கப்பட்டுள்ளது.
கருணாநிதியின் முழு உருவ வெண்கலச் சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், குடியரசுத் துணை தலைவர் வெங்கைய நாயுடு இன்று மாலை திறந்து வைக்கிறார். அண்ணா அறிவாலயத்தில் உள்ள கருணாநிதியின் சிலை மாடலிலேயே இந்த சிலையும் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த சிலை இரண்டு டன் எடை கொண்டது. தமிழகத்தில் தற்போது உயரமான சிலையாக கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலையே உள்ளது. தற்போது கருணாநிதிக்கு அமைக்கப்பட உள்ள இந்த சிலையே உலோகத்தினால் செய்யப்படும் அதிக உயரம் கொண்ட சிலையாகும்.
இந்நிலையில், கருணாநிதியின் சிலை திறப்பு விழா குறித்து கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,
கலையானாய்
காவலானாய்
களத்துக்கு வேல்கள் செய்யும்
உலையானாய்;
இறந்தும் வாழும் உயிரானாய்;
உயர் வானம்போல்
நிலையானாய்;
வடக்கைத் தீண்டும்
நீட்சியுமானாய்; இன்று
சிலையானாய்;
சிலையெடுத்த
செல்வனை வாழ்த்து தந்தாய்
என்று கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பதிவில் பெருமிதத்துடன் பதிவிட்டுள்ளார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications