சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பாஜக பிரசாரத்தில் சிதம்பரம் மருமகள் படம்.. அபத்தமானது.. தாமரை மலரவே மலராது.. வைரலாகும் பதிலடி

Google Oneindia Tamil News

சென்னை: பாஜக தேர்தல் விளம்பரத்தில் தனது புகைப்படத்தைப் பயன்படுத்தியுள்ளது அபத்தமானது என்றும் தமிழ்நாட்டில் கண்டிப்பாக தமாரை மலரவே மலராது என்றும் ஸ்ரீநிதி கார்த்தி சிதம்பரம் ட்வீட் செய்துள்ளார்.

தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. வாக்குப்பதிவுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் தங்கள் தேர்தல் பிரசாரத்தைத் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

இந்த முறை அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாஜகவிற்கு 20 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இன்று தாராபுரம் தொகுதியில் போட்டியிடும் தமிழ்நாடு பாஜக தலைவர் எல் முருகனுக்கு ஆதரவாகப் பிரதமர் மோடியே நேரடியாக வங்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

பாஜக பிரசாரம்

பாஜக பிரசாரம்

மற்ற கட்சிகளை ஒப்பிடும்போது, இணையதளங்களில் பாஜக வலுவாக உள்ளது. பாஜகவுக்கு ஆதரவாக பேஸ்புக், ட்விட்டர் போன்ற தளங்களில் தொடர்ந்து பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், தமிழ்நாடு பாஜக தனது ட்விட்டரில் தேர்தல் பிரசாரம் தொடர்பாகப் பதிவிட்டிருந்தது. அதில் பரதநாட்டியம் ஆடும் பெண் ஒருவரது புகைப்படம் இடம் பெற்றிருந்தது.

யார் அந்த நபர்

யார் அந்த நபர்

இந்த புகைப்படம் தான் தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளது. ஏனென்றால் இந்த புகைப்படத்தில் இருப்பவர் சிவகங்கை எம்பி கார்த்தி சிதம்பரத்தின் மனைவி ஸ்ரீநிதி சிதம்பரம். பரதநாட்டிய கலைஞரான இவரது புகைப்படத்தை பாஜக பயன்படுத்தியுள்ளது. அதுவும் 2010ஆம் ஆண்டு நடைபெற்ற செம்மொழி மாநாட்டிற்காக வெளியிடப்பட்ட பாடலில் இருந்து அவரது புகைப்படத்தை எடுத்துப் பயன்படுத்தியுள்ளதாக நெட்சன்கள் கிண்டல் செய்து வருகின்றனர்,

தமிழகத்தில் தாமரை மலரவே மலராது

பாஜக தேர்தல் பிரசாரத்தில் தனது புகைப்படம் பயன்படுத்தப்பட்டுள்ளது அபத்தமானது என்று ஸ்ரீநிதி சிதம்பரம் தெரிவித்துள்ளார் மேலும், தமிழகத்தில் தாமரை என்றும் மலராது என்றும் அவர் சாடி பதிவிட்டுள்ளார். இந்த ட்வீட் இணையத்தில் மிக வேகமாக வைரலானது. இதையடுத்து ஸ்ரீநிதி சிதம்பரம் இடம்பெற்றுள்ள இந்த குறிப்பிட்ட ட்வீட்டை மட்டும் தமிழ்நாடு பாஜக தனது ட்விட்டரில் இருந்து அகற்றியுள்ளது.

பிரசாரம் முழுக்க பொய்கள்

பிரசாரம் முழுக்க பொய்கள்

இதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியும் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது. தனது ட்விட்டர் பக்கத்தில், சம்மந்தப்பட்டவர்களின் ஒப்புதலுடன் ஒரு விஷயத்தைச் செய்வது என்பது பாஜகவுக்குப் புரியக் கடினமான இருக்கலாம் என்றும் இருந்தாலும் ஸ்ரீநிதி கார்த்தி சிதம்பரத்தின் படத்தை அவரது அனுமதியின்றி பயன்படுத்தக் கூடாது என்று விமர்சித்துள்ளது. மேலும், பாஜகவின் பிரசாரம் முழுக்க பொய்களால் நிரம்பியுள்ளதாகவும் காங்கிரஸ் சாடியுள்ளது.

English summary
Srinidhi Karti Chidambaram viral reply for Using her image in BJP propaganga.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X