விரைவில் அதிமுகவுக்கு தலைமையேற்பேன்.. தொண்டரிடம் அடித்து சொன்ன சசிகலா.. என்ன நடக்குமோ!
சென்னை: நான் அதிமுக பொதுச் செயலாளராக நான் நிச்சயம் தலைமை ஏற்பேன் என சசிகலா பேசிய புதிய ஆடியோ வெளியாகியுள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலுக்கு முன்னர், தான் அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கப் போவதாக அறிவித்த சசிகலா தற்போது தினமும் அதிமுக தொண்டர்களிடையே பேசி வருகிறார்.
இந்த நிலையில் அவரது உரையாடல்கள் வேண்டுமென்றே பொதுவெளியில் வெளியாகிறது. இது அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது. மேலும் சசிகலாவுடன் பேசும் அதிமுக தொண்டர்கள் நீக்கப்பட்டும் வருகிறார்கள்.

நிச்சயம்
இந்த நிலையில் தற்போது புதிய ஆடியோ ஒன்று வெளியாகியுள்ளது. சிவகங்கை சண்முகநாதனுடன் அவர் பேசிய ஆடியோவில் தொண்டர்கள் என்னை பொதுச் செயலாளர்னு சொல்லிட்டீங்க. நான் நிச்சயம் வந்து தலைமை ஏற்பேன். கவலைப்படாதீங்க.

தொண்டர்கள்
நான் தலைமையேற்க வேண்டும் என்பது தொண்டர்களின் விருப்பம். எனவே உங்கள் விருப்பத்தை நிறைவேற்றுவேன் என சசிகலா தெரிவித்துள்ளார். இந்த நிலையில் கோவில்பட்டி, விளாத்திகுளம் அதிமுகவினர் சசிகலாவுக்கு ஆதரவாக தீர்மானங்களை நிறைவேற்றி வருகிறார்கள்.

தளர்வுகள்
கொரோனா ஊரடங்கில் தற்போது படிப்படியாக தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இதனால் சசிகலா சொன்ன மாதிரி விரைவில் தொண்டர்களை சந்திப்பார் என தெரிகிறது. அந்த பயணத்தை ஜெயலலிதா சமாதியிலிருந்து அவரிடம் ஆசி பெற்று தொடங்கவும் திட்டமிட்டுள்ளாராம்.

ஒரு வாரம்
அந்த சுற்றுப்பயணத்தின் போது ஒருவாரத்திற்கு இத்தனை மாவட்டங்கள் வீதம் தொண்டர்களை சந்திக்கிறாராம். அப்போது அவருக்கு எந்த மாதிரியான ஆதரவு கிடைக்கிறது என்பதை பார்த்துவிட்டு பின்னர் தனது முடிவை அறிவிப்பார் என்கிறார்கள். கொரோனா தொடர்ந்தால் இனி வீடியோ மூலம் தொண்டர்களிடம் பேசவும் சசிகலா திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
-
அதிமுக சிதறி சின்னாபின்னமாகிடுச்சு.. தவெகவில் இணைந்த கையோடு எடப்பாடியை வெளுத்த வெல்லமண்டி நடராஜன்! -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
எடப்பாடி பழிவாங்குவார்.. ஜூட் விட ரெடியான விஜயபாஸ்கர்.. நேரம் எடுத்துக்கொள்ளும் சிவி சண்முகம்! -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
பதவியும் போனது.. வீடும் போனது! செவ்வந்தி இல்லத்தை காலி செய்த எடப்பாடி பழனிசாமி.. பின்னணி என்ன? -
29 பேருக்கும் மீண்டும் பதவி கிடையாது.. மறைமுகமாக சொன்ன எடப்பாடி பழனிசாமி.. அதிமுகவில் நடப்பது என்ன? -
அதிமுகவில் அடுத்த விக்கெட்.. தவெகவில் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்.. 2016 -இல் திருச்சி கிழக்கில் வெற்றி பெற்றவர் -
சிலுப்பிகிட்டு போன சிவி சண்முகம்.. வேற வேலையைப் பார்க்கப் போன வேலுமணி! அதிமுகவின் ஓயாத பஞ்சாயத்து! -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
தவெகவில் இணைந்தவர்களை கைவிட மாட்டோம்.. அதிமுகவினருக்கு மறைமுக சிக்னல் கொடுத்த புஸ்ஸி ஆனந்த்! -
விஜய்க்கு சிக்கல்? எம்எல்ஏக்கள் ராஜினாமாவை விசாரிக்கும் சிபிஐ- அமலாக்கத்துறை? அதிமுக எம்பி ஐடியா












Click it and Unblock the Notifications