கவிஞர் வைரமுத்துவுக்கு ஞானபீடம் விருது! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
சென்னை: கவிஞர் வைரமுத்துவுக்கு ஞானபீடம் விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது. இலக்கியத்தில் அவருடைய பங்களிப்பை போற்றும் விதமாக, இந்த விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த அறிவிப்புக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
ஏராளமான தேசிய விருதுகளை வைரமுத்து பெற்றிருக்கிறார். இந்நிலையில், இந்த விருது தன்னை மேலும் முனைப்புடன் இலக்கியத்தில் ஈடுபட வைக்கும் என்று வைரமுத்து தெரிவித்திருக்கிறார்.

ஞானபீட விருது என்றால் என்ன?
வாழ்நாள் முழுமைக்குமான இலக்கியப் பங்களிப்பைக் கருத்தில் கொண்டு ஞானபீடம் விருது வழங்கப்படுகிறது. தமிழில் இதுவரை 2 பேர் மட்டுமே இந்த விருதை பெற்றிருக்கின்றனர். இதற்கு முன்னர் கடந்த 1975ம் ஆண்டு எழுத்தாளர் அகிலன், அவரை தொடர்ந்து கடந்த 2002ம் ஆண்டு எழுத்தாளர் ஜெயகாந்தன் ஆகியோர் இந்த விருதை பெற்றிருக்கின்றனர்.
இந்த விருது 1962ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. நாட்டின் மிகவும் பழமையான இலக்கிய விருதுகளில் இதுவும் ஒன்று. டைம்ஸ் ஆஃப் இந்தியா குழுமத்தை சேர்ந்த, சாகு ஜெயின் குடும்பத்தினரால் நிறுவப்பட்ட பாரதிய ஞானபீடம் அறக்கட்டளைதான் இந்த விருதுகளை வழங்கி வருகிறது. அரசியலமைப்பு சட்டத்தின் 8வது அட்டவணையில் உள்ள 22 மொழிகளுக்கும் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.
பரிசு தொகை எவ்வளவு?
விருது பெறுபவர்களுக்கு ரூ.11 லட்சம் பரிசு தொகை வழங்கப்படும். மட்டுமல்லாது சரஸ்வதி தேவியின் வெண்கல சிலை மற்றும் பாராட்டு பத்திரமும் வழங்கப்படும். கடந்த 2024ம் ஆண்டு, 59வது ஞானபீட விருதை, இந்திய கவிஞர் வினோத் குமார் சுக்லா பெற்றிருந்தார். தமிழகத்தை பொறுத்தவரை, 24 ஆண்டுகளுக்கு பிறகு விருது வழங்கப்பட்டிருக்கிறது.
வைரமுத்து இதற்கு முன்னர் பத்ம பூஷன், பத்ம ஸ்ரீ, சாகித்ய அகாடமி, கலைமாமணி விருது, பாவேந்தர் விருது, பாரதி இலக்கிய பரிசு போன்ற விருதுகளையும், 7 தேசிய விருதுகளையும் பெற்றிருக்கிறார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
ஞானபீட விருது வைரமுத்துவுக்கு அறிவிக்கப்பட்டதற்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்திருக்கிறார். அவர் தனது x பக்கத்தில், "தமிழைத் தன் கவித்திறத்தால் ஆளும் கவிப்பேரரசு வைரமுத்து அவர்களுக்கு ஞானபீட விருது! காலையில்தான் கவிப்பேரரசைச் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தேன். சற்றுநேரத்தில் இந்த இனிய செய்தி வந்தடைந்து, அந்தச் சந்திப்பின் இனிமையை இன்னும் கூட்டியிருக்கிறது!
தமிழில் இதுவரையில் அகிலனும் ஜெயகாந்தனும் மட்டுமே பெற்றிருந்த இவ்விருது, மரபுக் கவிதைகளிலும் நவீனத்திலும் விளையாடி, தமிழ் இலக்கிய உலகில் புதுமைகள் படைத்து ஆளும் நம் கவிப்பேரரசின் கைசேர்ந்து அவரையும் நம்மையும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியிருக்கிறது.
தலைவர் கலைஞர் இருந்திருந்தால் கவிப்பேரரசை உச்சிமுகர்ந்து பாராட்டியிருப்பார். அவரிடத்தில் நான் நின்று கவிப்பேரரசு வைரமுத்து அவர்களை வாழ்த்துகிறேன்! கவிப்பேரரசைத் தமிழ்நாடே வாழ்த்துகிறது" என்று கூறியிருக்கிறார்.
-
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்?












Click it and Unblock the Notifications