நிர்மலா சீதாராமனை 'தயிர் சாதம் மாமி' என விமர்சிப்பதா? வேல்முருகனுக்கு வானதி சீனிவாசன் கண்டனம்
சென்னை: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை "தயிர் சாதம் சாப்பிடும் மாமி" என விமர்சித்த தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் எம்.எல்.ஏ.வுக்கு பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. கூறியிருப்பதாவது: மும்மொழிக் கொள்கைக்கு எதிராகப் போராடுகிறோம் என்ற போர்வையில், நமது மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை அவர்களை அடிப்படை மாண்பின்றி ஒருமையில் சாடியதோடு, சாதிய ரீதியாகவும் அவரைக் கீழ்த்தரமாக விமர்சித்த உங்கள் அநாகரிகப் பேச்சு வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

"ஆணுக்கு பெண்ணிங்கே இளைப்பில்லை" என பெண் உரிமைகளைப் பறைசாற்றிய பாரதி பிறந்த மண்ணில், "பெண் அமைச்சர் அடக்கமாக இருக்கவேண்டும்" எனவும், "தயிர் சாதம் சாப்பிடும் மாமி" எனவும் பொது வாழ்வில் உள்ள ஒரு மூத்த பெண் தலைவர் மீது தொடர்ந்து சொல்லெறியும் உங்களின் ஆணாதிக்க மனப்போக்கு ஆபத்தானது மட்டுமன்றி, வெட்கக்கேடானது.
உங்களுடன் அரசியல் களமாடும் சக பெண் தலைவர்களைக் கொச்சைப்படுத்துமளவிற்கு ஆணவம் உங்கள் அறிவுத் திறனை மழுங்கடித்துவிட்டதா? இதுதான் நீங்கள் தமிழகத்தின் வாழ்வுரிமையைக் காக்கும் லட்சணமா திரு. வேல்முருகன்?
எனவே, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நீங்கள், உங்களின் பொறுப்பையும், தவறையும் உணர்ந்து, மத்திய நிதியமைச்சர் குறித்த உங்களின் தரம்தாழ்ந்த பேச்சுக்கு உடனடியாக மக்கள் மன்றத்தில் பகிரங்க மன்னிப்பு கோரவேண்டும் என வலியுறுத்துகிறேன். இவ்வாறு வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. கூறியுள்ளார்.
வேல்முருகன் பேசியது என்ன?
மத்திய அரசின் மும்மொழிக் கொள்கை திணிப்புக்கு எதிராக சென்னையில் திமுக கூட்டணி கட்சிகளின் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் பங்கேற்று பேசிய வேல்முருகன், தயிர் சாதம் சாப்பிடுகிற மாமி (நிர்மலா சீதாராமன்) நீங்களே இவ்வளவு ஆவேசமாக பேசினால் நல்லி எலும்பு சாப்பிடுகிற எங்களுக்கு எவ்வளவு கோபம் இருக்கும் என கேள்வி எழுப்பி காட்டமாக விமர்சித்திருந்தார். வேல்முருகனின் இந்த பேச்சுக்குதான் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதேபோல தமிழக பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதியும் வேல்முருகனுக்கு கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications