பாம்பு சட்டையை படுக்கையில் உரித்து போட்ட பெண்.. தோலை உரித்து நாகினியாக மாறி.. எகிறி ஓடிய மக்கள்
சென்னை: உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் நடந்த இந்த சம்பவம் ஒட்டுமொத்த இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்துள்ளது.. இதையெல்லாம் நம்புவதா? வேண்டாமா? என்று கிராம மக்கள் குழம்பி போயிருந்தனர்.. பிறகுதான் போலீசார், இதுகுறித்த உண்மையை வெளி உலகுக்கு கொண்டுவந்தனர்.. இந்த சம்பவம் இணையத்தில் வைரலாகி கொண்டே உள்ளது.. என்ன நடந்தது?
ஆரையா மாவட்டத்தில் பாபுந்த் என்ற கிராமம் உள்ளது.. இங்கு வசித்து வந்த ஒரு இளம் பெண்ணிற்கு, அவரது பெற்றோர் திருமணத்துக்கு வரன் பார்த்து வந்தனர்..

பிறகு ஒரு வரன் அமைந்ததுமே, பெரியவர்கள் கூடி பேசி நிச்சயிக்கப்பட்ட திருமணத்தை நடத்த ஏற்பாடு செய்து வந்தனர்..
திருமணத்திற்கு சில நாட்களுக்கு முன்பு, அதிகாலையில் அந்த பெண்ணின் ரூம் கதவு நீண்ட நேரமாக திறக்கப்படாமல் இருந்தது.. இதனால் சந்தேகமடைந்த பெற்றோர் கதவை உடைத்து கொண்டு உள்ளே சென்று பார்த்த போது அங்கு அவர்கள் கண்ட காட்சி அவர்களை நிலைகுலைய வைத்தது..
அந்த அறையில் பெண்ணை காணவில்லை.. ஆனால் அவர் படுத்திருந்த படுக்கையில் அவர் அணிந்திருந்த துணிகளும் அதன் நடுவே ஒரு பெரிய பாம்பின் சட்டையும் கிடந்தது.. இதை பார்த்த அந்த பெண்ணின் அம்மா அலறி துடித்துள்ளார்..
மணப்பெண் மாயம்
அந்த அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர்.. படுக்கையில் இருந்த பாம்பின் சட்டையை பார்த்து விட்டு அந்த பெண் ஒரு நாகினி என்று பேச தொடங்கினர்.. அந்த பெண் மனித உருவில் இத்தனை காலம் வாழ்ந்து விட்டு இப்போது தனது உண்மையான பாம்பின் உருவத்திற்கு மாறி காட்டை நோக்கி சென்று விட்டார் என்றெல்லாம் தகவல்கள் காட்டு தீ போல பரவியது..
அதற்கேற்றபடி அந்த பெண்ணின் பெற்றோர், "ஆமாம், என் மகள் சின்ன வயசிலிருந்தே அடிக்கடி ஏதாவது விசித்திரமான செயல்களை செய்வாள், அவளுக்குள் ஏதோ ஒரு தெய்வீக சக்தி இருந்துள்ளது" என்று அழுதுகொண்டே சொன்னார்கள்..
சிறிது நேரத்தில் இந்த செய்தி மீடியாக்களிலும் வெளியாகிவிட்டது. உடனே அந்த கிராமத்திற்கு மக்கள் கூட்டம் அலைமோதியது.. பலரும் அந்த இடத்தை ஒரு புனித இடமாக கருதி வழிபடவும் தொடங்கினர்..
படுக்கையில் தோல் உரித்த பாம்பு
இதற்கு நடுவில், விஷயத்தை கேள்விப்பட்ட போலீசார், பெண்ணின் அறைக்குள் சென்று தீவிரமாக சோதனை செய்தனர்.. ஒரு மனிதன் பாம்பாக மாறுவது என்பது சாத்தியமே இல்லை என்பதை உணர்ந்த போலீசார் அந்த பெண்ணின் நடமாட்டத்தை கண்காணிக்க முடிவு செய்தனர்.. இதற்காக மாயமான பெண்ணை வலைவீசி தேடினார்கள்.. இறுதியில் பெண்ணை தேடி கண்டுபிடித்ததில், அவரது குட்டு வெளிப்பட்டு விட்டது..
அதாவது அந்த பெண், வேறொரு இளைஞரை காதலிக்கிறாராம்.. இந்த காதலை ஏற்காத பெற்றோர் மகளுக்கு கட்டாய கல்யாணம் செய்ய முயன்றுள்ளனர்.. இநத் கல்யாணத்தை எப்படியாவது தடுத்து நிறுத்த பெண் யோசனை செய்துள்ளார்..
பாம்பின் சட்டை படுக்கையில்
தன்னுடைய காதலனுடன் சேர்ந்து வாழ நினைத்த அந்த பெண், தன்னை யாரும் தேட கூடாது என்பதற்காக, தான் இறந்து விட்டதாகவோ அல்லது மறைந்து விட்டதாகவோ அனைவரும் நம்ப வேண்டும் என்பதற்காகவே இப்படியொரு பிளானை போட்டாராம்..
இதற்காகவே ஒரு பாம்பின் சட்டையை தேடி பிடித்து எடுத்து வந்து தனது படுக்கையில் போட்டு விட்டு ஜன்னல் வழியாக தப்பி சென்றுள்ளார்.. மக்கள் மூடநம்பிக்கையில், நாகினியாக தான் மாறிவிட்டதாக நம்புவார்கள் என்பதையும் சரியாகவே கணித்து இந்த நாடகத்தை ஆடினாராம்..
மூடநம்பிக்கை மக்கள்
இவ்வளவும் போலீசாரிடம் வாக்குமூலமாக இளம்பெண் சொல்லி உள்ளார்.. தன்னுடைய காதல் எந்தவகையிலும் தோல்வி அடைய கூடாது என்பதற்காக ஒரு பெண் சினிமா பாணியில் செய்த இந்த செயல், உத்தர பிரதேச கிராம மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்திவிட்டது..
ஒரு சாதாரண சம்பவத்தையும், மர்மமாக மாற்றக்கூடியதுதான் மூடநம்பிக்கை என்பதற்கு இந்த நிகழ்வு இன்னொரு சான்றாகும்..!!


Click it and Unblock the Notifications
