தலையிலிருந்து பிறந்தார்கள் என புராணத்தை நம்புவோர், நயன்தாரா குழந்தையை ஆய்வு செய்வது ஏன்?: வன்னியரசு
சென்னை: புராணங்களை நம்பும் பலர், நயன்தாரா - விக்னேஷ் சிவனுக்கு இரட்டை குழந்தை பிறந்ததை ஆய்வு செய்வதாக விசிக துணை பொதுச்செயலாளர் வன்னியரசு விமர்சித்துள்ளார்.
பிரபல நடிகை நயன்தாரா - இயக்குனர் விக்னேஷ் சிவன் ஆகியோருக்கு கடந்த ஜூன் 9ம் தேதி திருமணம் நடைபெற்றது. இதற்கு பிறகு இருவரும் தங்களுடைய படப் பணிகளில் வேலை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் திருமணம் முடிந்து 4 மாதங்களில் இரட்டை குழந்தை பிறந்ததாக அண்மையில் அறிவித்தனர். தங்களின் இரட்டை குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படத்தையும் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.

மக்கள் சந்தேகம்
நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஆகியோரின் பதிவால் பலரும் 4 மாதங்களில் எப்படி குழந்தைப் பிறக்கும் என்ற சந்தேகத்தை வெளிப்படுத்தி வந்தனர். பின்னர் வாடகை தாய் மூலமாக இந்த நட்சத்திர ஜோடிக்கு இரட்டைக் குழந்தை பிறந்தது தெரிய வந்தது. இதையடுத்து வாடகைத் தாய் குறித்த பேச்சுகளும், விவாதங்களும் அதிகரித்தது.

விசாரணைக் குழு
இதனைத் தொடர்ந்து வாடகைதாய் குறித்து பல கேள்விகளும் சர்ச்சைகளும் தொடர்ந்து வந்துக்கொண்டிருந்தது. இந்த தம்பதியினர் சட்டத்தை முறையாக பின்பற்றி வாடகை தாய் மூலம் குழந்தையை பெற்றுக் கொண்டார்களா என்ற விவாதம் எழுந்தது. தொடர்ந்து வாடகை தாய் விவகாரம் குறித்து விசாரிக்க சுகாதார இணை இயக்குநர் தலைமையில் மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்படுகிறது.

வன்னியரசு பேச்சு
இது ஒருபக்கம் இருக்க, நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஆகியோரால் கலாச்சாரம் சீரழிவதாக சமூக வலைதளங்களில் கருத்துக்கள் பதிவிடப்பட்டு வந்தது. இந்த விவகாரம் குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச் செயலாளர் வன்னியரசு பேசுகையில், நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதினருக்கு இரட்டை குழந்தை பிறந்துள்ளது. இதனை பலரும் திருமணம் முடிந்து 3 மாதங்கள் கூட ஆகவில்லை, எப்படி குழந்தைப் பிறந்தது என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

புராணங்களை நம்பும் கூட்டம்
ஆனால் பிரம்மன் தலையில் பிராமணன் பிறந்தார் , தோளில் இருந்து சத்ரியன் பிறந்தார், தொடையில் இருந்து வைசியன் பிறந்தார், காலில் இருந்து சூத்திரன் பிறந்தார் என்று சொன்னால் நம்புகிற கூட்டம் தான், நயன்தாரா குழந்தை பிறந்ததை ஆய்வு செய்கிறது என்று விமர்சித்துள்ளார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications