சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஜெய்பீம் சர்ச்சை: அன்புமணி மீது நடவடிக்கை எடுங்க! விசிக சார்பில் புகார் மனு!

Google Oneindia Tamil News

சென்னை: ஜெய்பீம் விவகாரம் தொடர்பாக நடிகர் சூர்யா மற்றும் படக்குழு மீது பாமகவினர் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அக்கட்சியின் மாநில இணை செய்தித்தொடர்பாளர் விக்ரமன், காவல்துறை இயக்குனர் சைலேந்திர பாபுவிடம் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில் அன்புமணி உள்ளிட்ட சூர்யாவுக்கு மிரட்டல் விடுத்த பாமக நிர்வாகிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

Recommended Video

    Anbumani Ramadoss-ஐ கைது செய்ய வேண்டும் - Vikraman | Oneindia Tamil

    வன்னியர் சமுதாயத்தை தவறாக சித்தரித்து சாதி ரீதியாக வன்முறையை தூண்டும் வகையில் காட்சிகள் எடுக்கப்பட்டதாக பாமக கட்சியினர் சார்பில் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஜெய்பீம் படத்தின் நாயகனான நடிகர் சூர்யாவை உதைப்பவருக்கு லட்சம் ரூபாய் சன்மானம் என மயிலாடுதுறை மாவட்டச் செயலாளர் சித்தமல்லி பழனிச்சாமி வன்முறையை தூண்டும் வகையில் பேசியுள்ளார்.

    கொட்டும் மழையில் ஆட்டம் போட்ட பாண்டியன் ஸ்டோர் முல்லை, தனம்..வைரலாக்கும் ரசிகர்கள்கொட்டும் மழையில் ஆட்டம் போட்ட பாண்டியன் ஸ்டோர் முல்லை, தனம்..வைரலாக்கும் ரசிகர்கள்

    நீக்கம்

    நீக்கம்

    இது குறித்து விசிக கட்சியின் மாநில செய்தி தொடர்பாளர் விக்ரமன் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது, அமேசான் பிரைமில் வெற்றிகரமாக ஓடி பலரது பாராட்டை பெற்றது ஜெய்பீம் திரைப்படம். இந்தப் படத்தில் வன்னியர் சமுதாயத்தை தவறாக காட்டியதாக அன்புமணி ராமதாஸ் நடிகர் சூர்யாவிற்கு கடிதம் எழுதியிருந்தார். பின்னர் அந்த படத்தில் காலண்டர் தொடர்பான காட்சிகளும் நீக்கப்பட்டன.

    பிரச்சினை

    பிரச்சினை


    இருளர் மற்றும் குறவர் சமுதாயத்தின் பிரச்சினைகள் அரசின் கவனத்தை ஈர்த்தது. ஆனால் வன்னியர் மக்களின் ஒற்றுமையை சீர் குலைக்கும் நோக்கில் அன்பு மணி ராமதாஸ் மற்றும் அவர் கட்சியினர் செயல்பட்டு வருகின்றனர். சூர்யாவின் திரைப்படம் எங்கு வெளியானாலும் தியேட்டர்களை கொளுத்துவோம் என காடுவெட்டி குரு அவர்களின் மருமகன் மனோஜ் மற்றும் மயிலாடுதுறை மாவட்ட பாமக செயலாளர் சித்தமல்லி பழனிச்சாமி நடிகர் சூர்யாவை எட்டி உதைப்பவருக்கு 1 லட்சம் ரூபாய் சன்மானம் என கூறியுள்ளார்.

    சூர்யா

    சூர்யா

    மேலும் இதில் எவ்வித அரசியல் இல்லை என்றும் , சூர்யா போன்ற பிரபலமான நடிகர் தமிழ் சமூகம் மீதான பிரச்சினைகளை கூறுவதால் அவருக்கு ஆதரவு அளிப்பது எங்கள் தார்மீக கடமை என்றும் ருத்ர தாண்டவம் என்ற படத்தில் வன்னியர்களை கிறிஸ்தவர்களாக காட்டும் விதமாக படம் எடுக்கப்பட்டது. அதனை வன்னியர்களே எதிர்ப்பு தெரிவித்த போதிலும் பாமக ஆதரவு தெரிவித்தது.

    அன்புமணி

    அன்புமணி

    தற்போது ஜெய்பீம் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வன்முறையை தூண்டும் வகையில் செயல்படும் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்து கைது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி டிஜிபி அலுவலகத்தில் புகார் மனு கொடுத்ததாக கூறினார்.

    English summary
    VCK gives complaint on PMK activist those who threatens Actor Surya on Jaibhim.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X