'மெகா கூட்டணி’ பாஜகவால் கடுப்பான எடப்பாடி பழனிசாமி! திருமாவுக்கு ரொம்ப சந்தோஷம்! அவரே சொல்லிட்டாரே!

Subscribe to Oneindia Tamil

சென்னை : பாரதிய ஜனதா கட்சியுடன் அதிமுக கூட்டணி அமைப்பதற்கான வாய்ப்புகள் இல்லை என்ற பொருள்படும்படி எடப்பாடி பழனிச்சாமி பேசி இருப்பது ஆறுதல் அளிப்பதாகவும் அவரது முயற்சி வரவேற்கத்தக்கது என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் வெகுவாக பாராட்டி இருக்கிறார்.

அதிமுகவை வைத்து நாடாளுமன்றத் தேர்தலை நடத்திவிடலாம் என தமிழக பாஜக விரும்பும் நிலையில் அதிமுக ஒற்றைத் தலைமை விவகாரம் அவர்களுக்கும் சிக்கலாகவே இருக்கிறது. இதனால் எடப்பாடி ஓபிஎஸ் தரப்பு இணைய வேண்டும் என பாஜக விரும்புகிறது.

பிரதமர் மோடி தமிழகம் வந்த போது இருவரும் ஒன்றாக வரவேண்டும் என ஸ்ட்ரிக்ட்டாக உத்தரவிட்டதாகவும் இதனால் இருவரும் ஒன்றாகவே பிரதமர் மோடியை வரவேற்றதாக கூறுகின்றனர். ஆனால் நாட்கள் செல்ல செல்ல எடப்பாடி பழனிசாமியின் நடவடிக்கைகளில் மாற்றம் தெரிய தொடங்கி உள்ளது.

அதிமுக தனித்து போட்டி

அதிமுக தனித்து போட்டி

பாஜக தனித்து போட்டியிட முடியுமா என மறைமுகமாக முன்னாள் அமைச்சர்கள் விமர்சித்து வரும் நிலையில் தனது தலைமையிலான கூட்டணியை பாஜக ஏற்றுக் கொண்டாலும் கட்சிக்கும் தன்னையே தலைமையாக ஏற்றுக் கொள்ள வேண்டும் அப்படி இருந்தால் மட்டும்தான் பாஜகவுடன் கூட்டணி அல்லது நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தவிர்த்து பிற கட்சிகளுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்கலாம் என நிர்வாகிகளிடம் எடப்பாடி பழனிச்சாமி பேசியதாகவும் அதற்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

தொல் திருமாவளவன்

தொல் திருமாவளவன்

இந்நிலையில் பாரதிய ஜனதா கட்சியுடன் அதிமுக கூட்டணி அமைப்பதற்கான வாய்ப்புகள் இல்லை என்ற பொருள்படும்படி எடப்பாடி பழனிச்சாமி பேசி இருப்பது ஆறுதல் அளிப்பதாகவும் அவரது முயற்சி வரவேற்கத்தக்கது என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் வெகுவாக பாராட்டி இருக்கிறார். ஏற்கனவே அதிமுக கூட்டணியில் பாஜக விலக்கப்பட்டால் மேலும் சில கட்சிகள் இணையும் என கூறப்பட்ட நிலையில், திருமாவளவனின் பாராட்டு முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. இதனால் அதிமுக மெகா கூட்டணி குறித்த பேச்சுகளும் தீவிரமாகி வருகிறது.

பாராட்டு

பாராட்டு

அரியலூர் மாவட்டத்தில் மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டமானது சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவருமான திருமாவளவன் தலைமையில் நடைபெற்றிருக்கிறது இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன் ராஜீவ் காந்தி கொலை வழக்கு ஈழத்தமிழர் விவகாரம் தமிழக மீனவர்கள் பிரச்சனை குறித்து பேசி இருக்கிறார் அதைத்தொடர்ந்து அதிமுக விவகாரம் தொடர்பாக பேசிய அவர் அதிமுக, பாஜக கூட்டணி குறித்து பேசியிருக்கிறார். குறிப்பாக எடப்பாடி பழனிசாமியை பாராட்டியுள்ளார் திருமா.

மதவாத சக்தி

மதவாத சக்தி

அதிமுகவில் உள்ள இரண்டு அணிகளும் ஒன்றாக இணைந்தால் மெகா கூட்டணி என பொருள்படும்படி எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கலாம். அதிமுக சுயமாக இருக்க வேண்டும். பாஜகவோடு துணை போக கூடாது. மதவாத சக்திகளுக்கு துணைபுரிய கூடாது. திராவிட கட்சிகள் ஒன்றிணைந்தால்தான் பாஜக என்ற மதவாத சக்தியை தமிழகத்தில் கால் ஊன்றுவதை தடுக்க முடியும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். அதிமுக பாஜகவோடு கூட்டணி அமைக்க வாய்ப்பில்லை என்ற பொருள்படும்படி எடப்பாடி பழனிசாமி கருத்தொன்றை தெரிவித்திருப்பது ஆறுதல் அளிக்கிறது. அவரது முயற்சி வரவேற்கத் தக்க முயற்சி என பேசியுள்ளார்.

கூட்டணி சாத்தியமா?

கூட்டணி சாத்தியமா?

ஏற்கனவே கூறியது போல பாஜகவுடன் கூட்டணி அமைத்தால் சிறுபான்மை வாக்குகள் மற்றும் பல கட்சிகளின் ஆதரவை இழக்க வேண்டி இருக்கும். அதே நேரத்தில் பாஜகவை கூட்டணி சேர்க்காவிட்டால் ஏற்கனவே கூட்டணியில் இருக்கும் கட்சிகளோடு மேலும் சில கட்சிகள் கூட்டணிக்கு வரும் என எடப்பாடி தரப்பு எதிர்பார்க்கிறது. அதை வைத்தே அவர் தனது தரப்பு முன்னால் அமைச்சர்களை பேசவிட்டு இருக்கும் நிலையில் அதற்கான பலனும் தற்போது கிடைத்திருப்பதாகவே கூறுகின்றனர் அதிமுகவினர். ஏற்கனவே திமுக கூட்டணியில் இருக்கும் சில கட்சிகள் எடப்பாடி பழனிச்சாமி தரப்புடன் கூட்டணி அமைக்க தயாராக இருப்பதாக தகவல்கள் உலாவரும் நிலையில் தற்போது திருமாவளவனின் இந்த பேச்சு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் இது கூட்டணி மாறுமா என்பதும் கேள்விக்குறி தான்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+