87 ஓட்டுகளில் கையை விட்டு போன காட்டுமன்னார்கோவில்! 10 ஆண்டு கழித்து மீண்டும் திருமாவளவன் போட்டி!
சென்னை: சிதம்பரம் தொகுதியின் எம்பியாக இருக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், தற்போது தமிழக சட்டசபை தேர்தலிலும் போட்டியிடுகிறார். அவர் காட்டுமன்னார்கோவில் தொகுதியில் போட்டியிடுகிறார்.
ஒடுக்கப்பட்ட மக்களுக்காக மட்டும் அல்லாத அனைத்து தரப்பினருக்குமான தலைவராக இருந்து வரும் திருமாவளவன், தமிழகத்தில் மாபெரும் அரசியல்வாதியாக உருவெடுத்துள்ளார்.

இவர் சிதம்பரம் எம்பியாக இருந்து வருகிறார். வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி தமிழக சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் இன்றைய தினம் வேட்பாளர்களை திருமாவளவன் அறிவித்தார். அதில் சிட்டிங் எம்எல்ஏக்களான எஸ்.எஸ்.பாலாஜி, ஆளூர் ஷாநவாஸ், பனையூர் பாபு ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.
திண்டிவனம் (தனி)தொகுதியில் வன்னியரசு, கள்ளக்குறிச்சி (தனி) தொகுதியில் மாலதி, செய்யூர் (தனி) தொகுதியில் சிந்தனை செல்வன், பெரியகுளம் (தனி) தொகுதியில் ஆற்றல் அரசு, அரக்கோணம் (தனி) தொகுதியில் எழில் கரோலின், பண்ருட்டி தொகுதியில் அப்துல் ரஹ்மான், திருப்போரூர் பன்னீர் தாஸ் ஆகியோர் போட்டியிடுவதாக அறிவித்தார்.
காட்டுமன்னார்கோவில் தொகுதியில் திருமாவளவன் போட்டியிடுகிறார். இந்த தொகுதியை அவர் ஏன் தேர்வு செய்தார் என்பது குறித்தும் தேசிய அரசியலில் இருந்து மாநில அரசியலுக்கு ஏன் வந்தார் என்பது குறித்தும் தெரிந்து கொள்ளலாம்.
சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று காட்டுமன்னார்கோவில். திருமாவளவனின் அரசியல் எழுச்சி இந்தப் பகுதியிலிருந்தே தொடங்கியது. இத்தொகுதி அவரது கட்சியின் கோட்டையாகக் கருதப்படுகிறது.
இங்கு கணிசமான அளவில் தலித் மக்கள் மற்றும் முஸ்லிம் சமூகத்தினர் வசிக்கின்றனர். இவர்களின் வாக்கு வங்கி திருமாவளவனுக்குப் பெரிய பலமாக உள்ளது. 2001-ல் முதன்முதலில் மங்களூர் தொகுதியில் வென்றாலும், அதன்பின் காட்டுமன்னார்கோவிலில் அவரது கட்சி வலுவாகத் தடம் பதித்துள்ளது. 2006-ல் ரவிக்குமார் இங்கு விசிக சார்பாக வென்றது குறிப்பிடத்தக்கது.
2021 ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் சிந்தனை செல்வன் 49.20 சதவீதம் வாக்குகளை பெற்று வென்றார். வரும் தேர்தலில் விசிகவுக்கு இந்த தொகுதியில் இருக்கும் வெற்றி வாய்ப்பு என பார்க்கும் போது எம்பியாக இருக்கும் திருமாவளவன் தனது தொகுதிகளுக்கு செய்த பணிகள், அந்த பகுதி மக்களுடன் நெருக்கம் காட்டுவது உள்ளிட்டவை பயன்படும்.
மேலும் திமுக கூட்டணியில் விசிக இருப்பதால் அந்த கட்சியின் வாக்கு வங்கியும் இணைந்து வெற்றியை எளிதாக்கும். திமுக-விசிக கூட்டணியின் மதச்சார்பற்ற நிலைப்பாடு முஸ்லிம் வாக்குகளை உறுதி செய்யும்.
2016 ஆம் ஆண்டு மக்கள் நல கூட்டணியில் இருந்த போது காட்டுமன்னார்கோவில் சட்டசபைத் தொகுதியில் போட்டியிட்டு வெறும் 87 வாக்குகள் வித்தியாசத்தில் திருமாவளவன் தோல்வியை சந்தித்தார். 10 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது அதே தொகுதியில் களம் காண்கிறார். இந்தத் தேர்தலில் அவர் நிச்சயம் வெற்றி பெறுவார் என விசிகவினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.
-
காட்டுமன்னார்கோவிலுக்கு கிளம்பும் திருமாவளவன்.. டெல்லி துறப்பு முடிவின் பின்னணி இதுதானா? விசிக பலே -
அக்கா எனும் அம்மா! பானுமதி இறப்பால் சுக்குநூறான திருமாவளவன்! கள்ளக்குறிச்சி வேட்பாளர் யார் தெரியுமா? -
விஜய் செல்வாக்கு + பதவி.. திருமாவளவன் மாநில அரசியலுக்கு திரும்புவதற்கு பின்னணியில் 2 காரணங்கள்! -
Thirumavalavan: சிதம்பரம் இடைத்தேர்தல் செலவை திருமாவளவன் ஏற்பாரா? சீமான் கேள்வி -
பாஜக சிம்ப்ளி வேஸ்ட்.. திருமாவளவன் பெஸ்ட்.. புயலை கிளப்பிய வால்பாறை அதிமுக வேட்பாளர் ஆடியோ -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது












Click it and Unblock the Notifications