யார் மேல் கை வைக்கிறீர்கள்! தமிழகத்தில் ஆந்திரா பேருந்துகளை சிறைபிடிப்போம்! வேல்முருகன் எச்சரிக்கை!
சென்னை: திருப்பதி அருகே தமிழக மாணவர்கள் மீது சுங்கச்சாவடி ஊழியர்கள் தாக்குதல் நடத்திய நிலையில், ஆந்திரா பேருந்துகளை சிறைபிடித்து போராட்டம் நடத்துவோம் என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் எச்சரித்துள்ளார்.
எதிரி கையாளும் உத்தியை நாமும் கையில் எடுப்போம் என்றும் இதுவும் தமிழர்களை பாதுகாத்தும் கொள்ளும் தற்காப்புப் போர் எனவும் அவர் கூறியிருக்கிறார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

தமிழக மாணவர்கள்
ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள தனியார் சட்டக்கல்லூரியில், தமிழ்நாட்டை சேர்ந்த மாணவர்கள் ஏராளமானோர் பயின்று வருகின்றனர். கடந்த சில தினங்களாக சட்ட கல்லூரி மாணவர்களுக்கு தேர்வு நடைபெற்று வந்தது. தேர்வுகளை முடித்து விட்டு, நேற்று மாணவர்கள் காரில் திரும்பி கொண்டு இருந்துள்ளனர். எஸ்.ஆர்.புரம் வடமாலாப்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடி ஊழியர்கள், தமிழ்நாட்டை சேர்ந்த மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

ரவுடி கும்பல்
அப்போது, அங்கு வந்த ஆந்திராவை சேர்ந்த ரவுடி கும்பலும், தமிழ்நாட்டில் இருந்து வந்து எங்களிடம் பிரச்னை செய்கிறீர்களா எனக் கூறி, மாணவர்கள் மற்றும் பெண்கள், குழந்தைகள் மீது தாக்குதல் நடத்தி இருக்கின்றனர். தகவலறிந்து வந்த ஆந்திரா காவல்துறையும், என்ன நடந்தது என்று கூட விசாரிக்காமல், தமிழ்நாட்டை சேர்ந்த மாணவர்கள் 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.

தமிழர்கள் விவகாரம்
கேரள மலைத் தோட்டங்களில் வேலைக்குச் சென்ற தேனி மாவட்டத் தமிழர்களைப் பெண்கள் உட்பட 500 பேரை மலையாளிகள் சிறைப்பிடித்தபோதும் சரி, காவிரி உரிமை சிக்கலில், கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்பட்டபோதும் சரி, ஆந்திராவில் செம்மரக்கடத்தல் விவகாரத்தில், தமிழர்கள் சுட்டு கொல்லப்பட்டபோதும் சரி, தமிழ்நாட்டு மீனவர்கள் மீது இந்திய கடற்படை துப்பாக்கி சூடு நடத்திய போதும் சரி, தமிழர்களாகிய நாங்கள் அமைதியான வழியில் அறப்போராட்டத்தை தான் கையில் எடுத்தோம்.

எப்போதும் அமைதியாக
உரிமைகளை இழந்தாலும் ஓங்கி எழாமல், ஒதுங்கி வாழும் தமிழர்களை வலிந்து தாக்குவதையே, ஆந்திரா, கர்நாடகம், கேரளா ஆகிய மாநிலங்கள் கடைபிடித்தே வருகிறது. அதன் தொடர்ச்சி தான், ஆந்திராவில் தமிழ்நாட்டு மாணவர்கள் மீது நடத்திய தாக்குதலும். உரிமைகளை இழந்து இழந்து உதைவாங்கி உதை வாங்கி அவமானப்பட்டுக் கிடக்கும் தமிழர்களாகிய நாங்கள் எப்போதும் அமைதியாக இருக்க மாட்டோம்.

ஆந்திரா பேருந்துகள்
எனவே, ஆந்திரா காவலதுறையால் கைது செய்யப்பட்ட தமிழ்நாட்டு மாணவர்களை உடனடியாக விடுவித்து, அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும். இல்லையெனில், தமிழ்நாட்டுக்கு வரும் ஆந்திரா பேருந்துகளை சிறை பிடித்து, மாபெரும் போராட்டத்தை முன்னெடுக்கப்படும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி எச்சரிக்கை விடுக்கிறேன்.

பதிலடி கொடுப்போம்
அயல் மண்ணில் தமிழர்களை அவர்கள் தாக்கினால் நம் மண்ணில் அவர்களுக்குப் பதிலடி கொடுப்போம். எதிரி கையாளும் உத்தியை நாமும் கையில் எடுப்போம். இதுவும் தமிழர்களை பாதுகாத்தும் கொள்ளும் தற்காப்புப் போர். இதனை வரலாறு நமக்கு கற்றுக்கொடுத்து இருக்கிறது என்பதை தமிழக வாழ்வுரிமைக் கட்சி சுட்டிக்காட்டுகிறது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications