திமுகவில் அடுத்த விக்கெட்? காங்கிரசுக்கு தந்த சீட்டால் வினை.. தமிழகத்தில் கனவாகும் ஸ்வீப் சக்சஸ்
சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தல் களம் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது.. இதில் ஆளும் கட்சியான திமுக, கூட்டணி பேச்சுவார்த்தைகளை முதன்முதலில் தொடங்கி மற்ற கட்சிகளை விட ஒருபடி முன்னிலையில் இருந்தது.. ஆனால் இன்று வரை அந்தப் பேச்சுவார்த்தைகள் ஒரு முடிவுக்கு வராமல் உறுதி பெற்று இறுதி பெறவில்லை என்பதுதான் கள நிலவரம்.. இதை பற்றின பிரத்யேக தகவல் ஒன்று நமக்கு கிடைத்துள்ளது.
காங்கிரசுக்கு அதிக தொகுதிகளை வாரி வழங்கியதால் மற்ற கட்சிகளுக்கான இடங்களை குறைத்து, கூட்டணி விவகாரத்தில் திமுக தலைமை தப்புக்கணக்கு போட்டுவிட்டது என்பதுதான் தற்போது அரசியல் நோக்கர்களின் மிக முக்கியமான விமர்சனமாக இருக்கிறது.

திமுக மெகா கூட்டணி
பாஜகவை தமிழகத்தில் எக்காரணம் கொண்டும் நுழையவிட்டு விடக்கூடாது என்ற ஒற்றை நோக்கத்தை முன்னிறுத்திதான் இந்த மெகா கூட்டணியை திமுக தலைமை கட்டமைத்துள்ளது..
ஆனால் அந்த பாஜக எதிர்ப்பையே தனது முழு நேர அரசியலாக முன்னெடுத்த கம்யூனிஸ்ட்டுகளுக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும் (விசிக) அவர்களுக்கான உரிய அங்கீகாரத்தை கொடுக்க திமுக தலைமை தவறிவிட்டதாம்.. அதனால்தான் திமுக கூட்டணியில் தற்போது பெரும் குழப்பம் நிலவுவதாக தெரிகிறது.
தேசிய அளவில் பாஜகவை காங்கிரஸ் எதிர்த்து வருகிறது என்பது உண்மைதான்.. ஆனால் தமிழக மண்ணில் பாஜக எதிர்ப்பு அரசியலை காங்கிரஸ் எந்த அளவிற்கு முன்னெடுத்தது என்ற கேள்வி இங்கே மிகவும் அவசியமாகிறது..
சிறுத்தைகள், கம்யூனிஸ்ட்கள்
குறிப்பாக தமிழகத்திற்கு எதிரான அல்லது தமிழர்களுக்கு எதிரான பாஜகவின் நிலைப்பாட்டை, அரசியலை கம்யூனிஸ்ட்டுகளும் விசிகவும் எதிர்த்த அளவிற்கு காங்கிரஸ் களமாடியதா என்ற கேள்வி எழுகிறது..
சித்தாந்த ரீதியாக பாஜகவிற்கும் அதன் வளர்ச்சிக்கும் காம்ரேட்டுகளும் சிறுத்தைகளும் கொடுத்த குடைச்சலோடு காங்கிரசின் செயல்பாடுகளை ஒப்பிட்டு பார்த்தால் யார் தேறுவார்கள்? திமுகவின் கொள்கைகளுக்கு பலம் சேர்க்கும் விதமாக பாஜக எதிர்ப்பு அரசியலில் யார் முன்னணி போராளிகள்? இதற்கெல்லாம் விடை சொல்வதென்றால் கம்யூனிஸ்ட்டுகளுக்கும் சிறுத்தைகளுக்கும் உரிய தொகுதிகளை திமுக கொடுத்திருக்க வேண்டும்..
ஆனால் அதைச் செய்யாமல் திமுக அலைக்கழிக்கிறதோ என்பதுதான் கம்யூனிஸ்ட்டுகளும் சிறுத்தைகளும் தற்போது முன்வைக்கும் கேள்வியாக உள்ளது..
காங்கிரசுக்கு அதிக சீட்
காங்கிரசை பொறுத்தவரை அவர்களுக்கு பாஜகவை எதிர்த்துதான் ஆகவேண்டும், பாஜக எதிர்ப்புதான் அவர்களின் பிரதான அரசியல்.. ஆனால் கம்யூனிஸ்டுகளுக்கும் விடுதலை சிறுத்தைக்கும் வேறு ஆப்ஷன்கள் இருக்கின்றன..
ஆனாலும் அந்த இரண்டு கட்சிகளும் பாஜக எதிர்ப்பை பிரதானமாக கொண்டிருந்தன, இது திமுகவிற்கு மிகப்பெரிய பலம் தானே? அந்த பலத்திற்கு மேலும் பலம் சேர்க்கும் விதமாக மேற்சொன்ன இரண்டு கட்சிகளையும் வளர்க்க வேண்டியது திமுகவின் கடமை தானே என்ற கேள்விக்கு திமுக தலைமையிடம் என்ன பதில் இருக்கிறது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்..
காங்கிரசுக்கு அதிக தொகுதிகள் கொடுத்ததால் அகாமடேட் செய்ய முடியவில்லை என்ற காரணத்தால் திமுக தற்போது வேல்முருகனை இழந்துள்ளது.. இந்த இழப்பு வட மாவட்டங்களில் திமுகவிற்கு கொஞ்சம் சறுக்கலை நிச்சயம் ஏற்படுத்தும்.. ஏற்கனவே அன்புமணி தேஜ கூட்டணியில் ஐக்கியமாகிவிட்டார், ராமதாஸ் அவர்கள் சசிகலாவுடன் கூட்டணி அமைத்து விட்டார்..
வேல்முருகன் - திமுக கூட்டணி
இந்த சூழலில் வன்னியர்களின் ஓரளவு வாக்குகளையாவது உறுதி செய்ய வேல்முருகன் கைவசம் இருந்தார், ஆனால் அவரையும் தக்கவைத்துக் கொள்வதில் திமுக தலைமை தோற்றுவிட்டது..
கம்யூனிஸ்டுகளை திமுக வெறும் மாரல் கன்வின்ஸ் தான் செய்துள்ளது, அதனால் அவர்களிடம் தேர்தல் களத்தில் 100 விழுக்காடு களப்பணி வெளிப்படுமா என்பதும் பெரிய சந்தேகம்தான்.. சாதி கட்சி என்ற இமேஜை உடைத்து வெகுஜன அரசியலில் பெரும் நம்பிக்கை பெற்றுள்ள திருமாவளவனை திமுக முழுமையாகப் பயன்படுத்தி இருக்க வேண்டும், ஆனால் அதிலும் கோட்டை விட்டுள்ளது..
ஸ்வீப் சக்சஸ்
இவையெல்லாமே திமுகவின் "ஸ்வீப் சக்சஸ்" கனவை நிச்சயம் பலவீனப்படுத்தும் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.. காங்கிரசுடன் தொகுதி பங்கீட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகிவிட்ட நிலையில், வொர்த்தான கூட்டணி கட்சிகளை தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்றால் தனக்கான தொகுதிகளைத்தான் திமுக குறைத்துக்கொள்ள வேண்டும்..
ஆனால் அதை திமுக செய்யுமா என்று தமிழகத்தின் அரசியல் கள நிலவரம் நன்கறிந்தவர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.. தேர்தல் நெருங்க நெருங்க இன்னும் என்னவெல்லாம் நடக்கப்போகிறதோ தெரியவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!
- சிறப்பு நிருபர்
-
திமுகவிடம் பணியக்கூடாது.. உதயசூரியன் வேண்டாம்.. கமலிடம் சொன்ன நிர்வாகிகள்! -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
இந்த 7 தொகுதிகளில் திமுக வேட்பாளர்கள் இவர்கள் தானா? ஒரே ஒருவர் பெயரில் மட்டும் வந்த விருப்பமனுக்கள்! -
மதிமுக - இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் விரும்பும் தொகுதிகள் எது? திமுக கையில் முடிவு.. இதோ லிஸ்ட் -
சுருண்டு விழுந்த சூரியன்! 91இல் வீசிய ‘ராஜீவ்’ அலை.. 2 வருடத்தில் ’நேஷனல் லீடர்’ ஆன ஜெயலலிதா -
1989ல் திமுக இமாலய வெற்றி! 91இல் ஆட்சியைக் கலைத்த ஜெயலலிதா.. சிவாஜியின் புதுக்கட்சி எங்கே? -
BJP- TVK- DMK: தவெகவில் இருந்து விலகிய நடிகை ரஞ்சனா நாச்சியார் திமுகவில் ஐக்கியம்! -
8 கேட்கும் விசிக.. 6க்கு இழுக்கும் திமுக.. அழுத்தமாக நிற்கும் திருமாவளவன்.. திமுக கணக்கு என்ன? -
புதிய கட்சிகள் வரவால் திமுகவுக்கு நெருக்கடி.. 165-க்கும் குறைவான தொகுதியில்தான் இந்த முறை போட்டியா? -
கோவையில் போட்டியா?... முதல்வரின் விருப்பத்தால் விரக்தியில் செந்தில் பாலாஜி! -
விஜய் எவ்வளவு ஓட்டு வாங்குவார்? நேர்காணலின் போது திமுக நிர்வாகிகளிடம் ஸ்டாலின் எழுப்பிய கேள்வி! -
யார் பெரிய தலை? கதர் கட்சியில் ’கை’கலப்பு! 2 ஆக பிரிந்த நிர்வாகிகள்! டெல்லிக்கு சென்ற பஞ்சாயத்து!












Click it and Unblock the Notifications