அரசியலுக்கு விஜய் “க்ரீன்” சிக்னலா? முதல்வர் “தளபதி” வாழ்க - ரசிகர்கள் கோஷம்.. துணை முதல்வர் “இவரா?”

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் ரசிகர் மன்ற தலைவர் புஸ்ஸி ஆனந்தை சந்தித்த நடிகர் விஜய் ரசிகர்கள், தமிழ்நாட்டின் அடுத்த முதலமைச்சர் விஜய் என கோஷமிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.

நடிகர் ரஜினிகாந்த் எப்போது அரசியலுக்கு வருவார் என்ற பேச்சு தற்போது மறைந்து அடுத்து நடிகர் விஜய் அரசியலுக்கு வருவாரா? மாட்டாரா? என்ற பேச்சு கடந்த சில ஆண்டுகளாகவே எழத் தொடங்கிவிட்டது.

தனது ரசிகர் மன்றத்தை மக்கள் இயக்கமாக விஜய் மாற்றியதே அரசியலில் இறங்குவதற்கான முன்னோட்டம்தான் என பலரால் பேசப்பட்டது. தலைவா திரைப்படத்தின் பெயர், அதை தொடர்ந்து விஜய் சந்தித்த பிரச்சனைகள் இதை மேலும் வலுப்படுத்தின.

சினிமாவில் அரசியல்

சினிமாவில் அரசியல்

அதன் தொடர்ச்சியாக கத்தி, மெர்சல், சர்க்கார் என தொடர்ந்து அவர் நடித்து வந்த திரைப்படங்களிலும், அந்த திரைப்படங்களில் ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சிகளிலும் அவர் பேசிய அரசியல் கருத்துக்கள், பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிராக விஜய் பேசியது என பல விசயங்கள் இதை உறுதிபடுத்தின.

கருத்து சொல்லாத விஜய்

கருத்து சொல்லாத விஜய்

குறிப்பாக நீட்டால் உயிரிழந்த அனிதா வீட்டுக்கு விஜய் சென்றது, ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பங்கேற்றது, பாஜகவினர் நடிகர் விஜயை மத ரீதியாக விமர்சித்தது, மாஸ்டர் படப்பிடிப்பின்போது வருமான வரித்துறை சோதனை நடத்தியது என அடுத்தடுத்து அவர் எதிர்கொண்ட பிரச்சனைகளை வைத்து அவர் அரசியலுக்கு நிச்சயம் வருவார் என்றே பேச்சு எழுந்தது.

உள்ளாட்சித் தேர்தல்

உள்ளாட்சித் தேர்தல்

ஆனால், விஜய் அது தொடர்பாக எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை. அதே நேரம் அரசியலுக்கு வரமாட்டேன் என்ற மறுப்பையும் அவர் வெளியிடவில்லை. குறிப்பாக 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல், நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் போட்டியிட்டனர்.

மறைமுக ஒப்புதலா?

மறைமுக ஒப்புதலா?

நடிகர் விஜய்யின் ஒப்புதலுடன் அவரை பெயர், படத்தை பயன்படுத்தி தேர்தலில் போட்டியிட அனுமதித்தது போன்றவை விஜய் அரசியலுக்கு கொடுத்த பச்சை சிக்னலாகவே பார்க்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே நடிகர் விஜய்யின் ரசிகர்கள் அடிக்கடி நடிகர் விஜய் அரசியலுக்கு வருகிறார் என்று சுட்டிக்காட்டி போஸ்டர்கள், பேனர்களை வைப்பது வாடிக்கையாகி இருக்கிறது.

வருங்கால முதல்வரா?

வருங்கால முதல்வரா?

2026 சட்டமன்றத் தேர்தலில் விஜய் போட்டியிடுவார் என்றும் அவர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் விஜய் மக்கள் இயக்க தலைவர் புஸ்ஸி ஆனந்தை சந்தித்த ரசிகர்கள் வருங்கால முதலமைச்சர் தளபதி, வருங்கால துணை முதலமைச்சர் ஆனந்த் என கோஷமிட்ட வீடியோ அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+