பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் கோரிக்கை.. நிறைவேற்றிய விஜய் மக்கள் இயக்கத்தினர்
சென்னை: பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டு 60 சதவீத தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இளம் பெண் ஒருவர் விடுத்த கோரிக்கையை ஏற்று நடிகர் விஜய் நிதி உதவி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் விஜயின் அறிவுறுத்தல் பேரில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் பாதிக்கப்பட்ட பெண்ணை நேரில் சந்தித்து ரூ. 50 ஆயிரம் நிதி உதவி அளித்துள்ளனர்.
விஜயின் அறிவுறுத்தல் பேரில் இந்த நிதி உதவி அளித்ததாகவும் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் கூறியுள்ளனர். இது தொடர்பான விவரம் வருமாறு:-

60 சதவீத தீக்காயங்களுடன்
பாலியல் ரீதியாக துன்புறுத்தலுக்கு ஆளான இளம் பெண் ஒருவர் 60 சதவீத தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார். அந்தப் பெண் தனக்கு உதவி செய்யுமாறும் தன்னை வந்து நடிகர் விஜய் சந்திக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்து இருந்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது.

ஜனவரி 15 ஆம் தேதிக்குள்
மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணின் கோரிக்கை தொடர்பாக தமிழர் முன்னேற்ற படையினரும் போஸ்டர்களை ஒட்டியிருந்தனர். மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணை விஜய் சந்திக்கவில்லை என்றும் கண்டித்து இருந்தனர். ஜனவரி 15 ஆம் தேதிக்குள் நடிகர் விஜய் பாதிக்கப்பட்ட பெண்ணை சந்திக்காவிட்டால் வாரிசு திரைப்படம் வெளியிடப்படும் திரையரங்கம் முன்பாக விஜயின் உருவ பொம்மை எரித்து போராட்டத்தில் ஈடுபடுவோம் எனவும் எச்சரித்து இருந்தனர்.

பூர்வீக சொத்துக்கள் கிடையாது
இந்த நிலையில் நடிகர் விஜயின் அறிவுறுத்தலின் பேரில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் பாதிக்கப்பட்ட பெண்ணை சந்தித்து 50 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கியிருக்கிறார்கள். மேலும் தேவைப்படும் உதவிகளை செய்து தருவதாக உறுதி அளித்து இருக்கிறார்கள். முன்னதாக தமிழக முன்னேற்ற படை தலைவர் வீரலட்சுமி இது தொடர்பான வீடியோ ஒன்றை இன்று காலை வெளியிட்டு இருந்தார். அதில், நடிகர் விஜய் அவர்களே உங்களிடம் இருக்கும் கார் பங்களா, ஆபரணங்கள் சொத்துக்கள் எல்லாம் உங்களின் பூர்வீக சொத்துக்கள் கிடையாது.

விஜய்யின் அறிவுறுத்தலின்பேரில்
தமிழக இளைஞர்கள் உங்கள் படத்தை டிக்கெட் கொடுத்து பார்த்ததால் தான் சேர்ந்த சொத்துக்கள் அவை. எளிமையான குடும்பத்தில் பிறந்த ரசிகை ஒருவர் பாலியல் ரீதியாக துன்புறுத்தலுக்கு உள்ளாகி 60 சதவீத தீக்காயங்களுடன் ஒரு கோரிக்கையை வைத்துள்ளார். இந்த கோரிக்கையை நிறைவேற்றுவோம்.. இல்லையென்றால் நாங்கள் போராட்டத்தில் ஈடுபடுவோம் என வீடியோவில் பேசியிருந்தார். இந்த வீடியோக்கள் விஜயின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் அவருடைய அறிவுறுத்தலின் பேரில் நிதி உதவி வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

நடிகர் விஜய் நிதி உதவி
நடிகர் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. இந்தப் படம் விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. தியேட்டர்களில் ஆரவாரமாக விஜய் ரசிகர்கள் இந்த படத்தை கொண்டாடி வருகின்றனர். இதற்கிடையே, பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட பெண் விடுத்த கோரிக்கையை ஏற்று அவருக்கு நடிகர் விஜய் நிதி உதவி அளித்ததாக வெளியாகி இருக்கும் செய்தியையும் அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் அதிகம் பரப்பி வருகின்றனர்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications