• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

தமிழுக்கு ட்விட்டர் கொடுத்த கௌரவம்.. 2020ம் ஆண்டின் மறக்க முடியாத பதிவுகள்!

|

டெல்லி: 2020 முடிய போகிறது, இந்த ஆண்டு மொத்த உலகமும் கொரோனா வைரஸ் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் இந்த ஆண்டில் வைரலான ட்வீட் பதிவுகளை, ட்விட்டர் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ளது. அரசியல், சினிமா மற்றும் விளையாட்டு உள்பட பல்வேறு பிரிவில் சிறந்த ட்வீட் பதிவை மறுட்வீட் செய்து வெளியிட்டுள்ளது. இவற்றை டுவிட்டர் நிறுவனம் ஆங்கிலம், இந்தியுடன், தமிழில் வெளியிட்டது தான் ஹைலைட்டே

நடிகர் விஜய்யின் நெய்வேலி செல்பி தொடங்கி, வீராட் கோலியின் மனைவி அனுஷ்கா சர்மா கர்ப்பம் மற்றும் அமிதாப் பச்சனுக்கு வந்த கொரோனா வரை ட்விட்டர் இந்தியா நிறுவனம் டாப் ட்வீட்களை நேற்று வெளியிட்டது.

ட்விட்டர் வெளியிட்ட தரவுகளின் படி. ஜனவரி 1, 2020 முதல் இந்த ஆண்டு நவம்பர் 15 வரை வந்த ட்வீட்களில் முக்கியமானவற்றை '2020 இன் கோல்டன் ட்வீட்ஸ்' என்று வரிசை படுத்தி உள்ளோம். அவற்றை இப்போது பார்ப்போம்.

அதிகம் மேற்கோள்

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட பாலிவுட் மெகாஸ்டார் அமிதாப் பச்சன் அறிவித்த ட்வீட் பதிவு தான் இந்த ஆண்டின் அதிகம் மிகவும் மேற்கோள் காட்டப்பட்ட ட்வீட் ஆகும். அதை 43000 பேர் மேற்கொள் காட்டி இருந்தனர். இப்போது அது லட்சத்தை தாண்டி விட்டது அவரது மகன் அபிஷேக் பச்சன், மருமகள் ஐஸ்வர்யா ராய் பச்சன் மற்றும் பேத்தி ஆராத்யா ஆகியோரும் இந்த ஆண்டு ஜூலை மாதம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டனர்.

கர்ப்பம் குறித்து ட்வீட்

இந்த ஆண்டின் மிகவும் விரும்பப்பட்ட (லைக்) ட்வீட் என்றால் அது இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி , தனது மனைவி அனுஷ்கா ஷர்மா கர்ப்பமாக உள்ளதாக ஆகஸ்ட் மாதம் வெளியிட்ட அறிவிப்பு தான். கோலி தனது ட்வீட் பதிவில், "இனி நாங்கள் மூன்று பேர்! ஜனவரி 2021 ல் மூன்று பேராக வருவோம்" என்று கூறியிருந்ததுடன், அனுஷ்கா சர்மா உடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். இந்த ட்வீட், ட்விட்டர் தளத்தில் 6.4 லட்சத்திற்கும் அதிகமான லைக்குகள் செய்திருந்தனர். இப்போது அது 6.44 லட்சம் ஆகி உள்ளது.

அரசியல் ட்வீட்

அரசியலில், மிகவும் ரீட்வீட் செய்யப்பட்ட ட்வீட் என்றால் பிரதமர் நரேந்திர மோடி போட்டது தான்- ஒரு லட்சம் ரீட்வீட்களுக்கு மேல் செய்யப்பட்டது. அதிகரித்த கொரோனா தொற்றுநோய்க்கு எதிராக போராடும் மருத்துவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக விளக்குகளை ஏற்றி சமஸ்கிருதத்தில் ஸ்லோகங்களை பதிவிட்டிருந்த புகைப்படம் தான் அதிக ரீட்வீட் செய்யப்பட்டது . முன்னதாக 9ம் தேதி, 9 மணி, 9நிமிடத்தில் விளக்குகளை ஏற்றுமாறும் கைதட்டுமாறும் பிரதமர் மோடி கூறியிருந்தார். இதன் அடிப்படையில் விளக்குகள் ஏற்றப்பட்டது.

வணிகம்

வணிக துறையில் மிகவும் அதிகம் ரீட்வீட் செய்யப்பட்ட ட்வீட் என்றால் அது தொழிலதிபர் ரத்தன் டாடா போட்டது தான். அவர் 500 கோடி ரூபாய் கொரேனா நிதி கொடுத்து உதவியதுடன் மக்களுக்கு நாங்கள் இருக்கிறோம் என்று ஆதரவு கரம் நீட்டினார். கொரோனா என்பது நாம் எதிர்கொள்ளும் கடினமான சவால்களில் ஒன்றாகும். டாடா டிரஸ்ட்கள் மற்றும் டாடா குழும நிறுவனங்கள் கடந்த காலங்களில் நாட்டிற்கு தேவையானதை செய்துள்ளன. . இந்த நேரத்தில், அதன் தேவை எல்லாவற்றையும் விட முக்கியமானது என்று கூறியிருந்தார்.

விளையாட்டு

விளையாட்டுகளில், மிகவும் மறு ட்வீட் செய்யப்பட்ட ட்வீட் என்றால் முன்னாள் கிரிக்கெட் கேப்டன் மகேந்திர சிங் தோனியிடமிருந்து வந்தது தான். தன்னை பாராட்டிய பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து தோனி வெளியிட்ட ட்வீட் பதிவில். "ஒரு கலைஞன், போர் வீரன் மற்றும் விளையாட்டு வீரர் அவர்கள் விரும்புவது பாராட்டு தான், அவர்கள் கடின உழைப்பு மற்றும் தியாகம் அனைவராலும் கவனிக்கப்படுவதையும் பாராட்டப்படுவதையும் விரும்புகிறார்கள். உங்கள் (பிரதமர் நநேரத்திர மோடி) பாராட்டுக்கும் நல்வாழ்த்துக்களுக்கும் நன்றி" என்று கூறியிருந்தார்

விஜய் ட்வீட்

ஒட்டுமொத்தமாக இந்த ஆண்டில் இந்தியாவில் அதிகம் ரீட்வீட் செய்யப்பட்ட ட்வீட் என்றால் அது நடிகர் விஜய் வெளியிட்ட ட்வீட் பதிவு தான். வருமான வரித்துறை சோதனைகளால் நெருக்கடிகள் அதிகரித்த போது, நெய்வேலியில் தன்னை பார்க்க திரண்ட ரசிகர்களுடன் நடிகர் விஜய் எடுத்துக்கொண்ட செல்பி ட்வீட் பதிவு தான். நன்றி நெய்வேலி என்ற அந்த ட்வீட் பதிவினை சுமார் 1.6லட்சம் பேர் ரீட்வீட் செய்திருந்தனர். .

 
 
 
English summary
2020 is coming to a close and while this year has been very difficult as the coronavirus pandemic affected millions across the globe, Twitter has curated some of its most retweeted and likes tweets across politics, entertainment and sports.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X