"மேஜர்".. தலைவர் வீட்டில் ரகசிய மீட்டிங்.. "பொதுச்செயலாளர்" இவராமே.. டக்கென திரும்பிய பாஜக, அதிமுக
தேமுதிகவுக்கு பொதுச்செயலாளர் பதவியை ஏற்க போகிறாராம் பிரேமலதா விஜயகாந்த்
சென்னை: பாஜக, அதிமுக, திமுகவை முந்திக்கொண்டுள்ளது தேமுதிக.. அக்கட்சி தொடர்பான மிக முக்கியமான விஷயம் ஒன்று பறந்து வந்துள்ளது.
கடந்த டிசம்பர் மாதத்தில், தேமுதிக தரப்பில் ஒருசில விஷயங்கள் கசிந்தன.. அதாவது, கட்சிக்கு புதிய தலைவரை உடனே நியமித்துவிட வேண்டும் என்று பேசப்பட்டது.. இளைஞரணிக்கு விஜய பிரபாகரனை செயலாளராக நியமித்து தமிழகம் முழுவதும் அவரை ஒரு ரவுண்டு அடிக்க வைக்க திட்டமிட்டார் பிரேமலதா.
மேலும், பொதுக்குழு மூலம் பிரேமலதா விஜயகாந்துக்கு செயல் தலைவர் பதவி வழங்கப்பட்டால், அவர் தற்போது வகித்து வரும் பொருளாளர் பதவி எல்.கே.சுதீஷ் வசம் கொடுக்கப்படும் என்றும் கூறப்பட்டது.

கண்ணீர்
இதற்கு பிறகு, கட்சி தலைவர் யார் என்ற விவகாரம் அமுங்கிவிட்ட நிலையில், மீண்டும் இந்த பேச்சு எழுந்துள்ளது.. விஜயகாந்த் இருக்கும் நிலையில், கட்சி தலைவராக பிரேமலதா பொறுப்பேற்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.. அல்லது கட்சி தலைவராக விஜயகாந்த் இருக்கட்டும்.. பிரேமலதா செயல்தலைவராக செயல்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிகிறது.. இப்படி இருவித கருத்துக்களில் எந்த ஒரு இறுதி முடிவும் இதுவரை எட்டப்படாத நிலையில், தேமுதிக குறித்த முக்கிய தகவல் ஒன்று கசிந்து வருகிறது.

சுதீஷ்
சமீபத்தில், விஜயகாந்த் குடும்பத்தினரிடம் ஒரு மீட்டிங் நடந்திருக்கிறது. இதில் விஜயகாந்த்தின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் தேமுதிக தலைமைக் கழக நிர்வாகிகளிகள், கேப்டன் குடும்பத்துக்கு விசுவாசமான சிலரும் கலந்து கொண்டிருக்கிறார்கள். இந்த மீட்டிங்கில் கட்சியின் எதிர்காலம் குறித்து பிரேமலதாவிடம் அவரது சகோதரர் சுதீஷ் விரிவாக விவாதித்துள்ளார்.

ஐடியா NO: 1
அப்போது, "நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒன்னரை ஆண்டுகள் இருந்தாலும் ஜனவரி தொடங்கியதுமே தேர்தலுக்கான பணிகளை மத்திய -மாநில ஆளும் கட்சிகள் முடுக்கி விடும். திமுக, பாஜக இப்போதே சில பணிகளை செய்து கொண்டுதான் இருக்கிறார்கள்... ஜனவரிக்கு பிறகு இந்த தேர்தல் பணிகள் வேகமாக நடக்கத்துவங்கி விட்டால் 2023ம் ஆண்டு நகர்வதே தெரியாது.. அந்தளவுக்கு வேகமாக ஓடும். அதனால், கட்சியின் எதிர்காலம் பற்றி முடிவெடுக்க வேண்டும்" என்று சுதீஷ் சொல்லியிருக்கிறார்.

ஐடியா NO: 2
விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரனோ, "2011 வெற்றிக்கு பிறகு, தேமுதிகவில் ஜெயலலிதா விளையாடியதால் நம் கட்சி எம்எல்ஏக்கள் சோரம் போனார்கள்... ஆனாலும் 2016 வரை தேர்தல் வரை கட்சியை தூக்கி நிறுத்த முடிந்தது. அதன் பிறகு நமக்கான வெற்றிங்கிறது இல்லாமலே போய்விட்டது. அதற்கு காரணம் அப்பாவின் உடல்நிலைதான். அவர் ஆரோக்கியமாக இருந்திருந்தால் தமிழகத்தில் அரசியலில் நிறைய மாற்றங்கள் இருந்திருக்கும். அப்பாவின் உடல்நிலை மற்றும் கட்சியில் வெற்றி இல்லாத நிலை எல்லாம் சேர்ந்து நம் கட்சி தொண்டர்களை சோர்வடைய வைத்து விட்டது.

ஐடியா NO: 3
கடந்த 6 ஆண்டுகாலமாக தேர்தல் செலவுகளை செய்து மனமுடைந்து போயிருக்கிறார்கள். அடிமட்டத்தில் வேலை செய்ய ஆர்வமில்லாமல் இருக்கிறார்கள். முதலில் அவர்களுக்கு நம்பிக்கையளிக்கும் வகையில், தலைமையிலிருந்து ஏதேனும் செய்தாக வேண்டும். அதற்கான செயல்திட்டத்தை வரும் புத்தாண்டில் இருந்து துவங்க வேண்டும்" என்று சொல்லியிருக்கிறார்... அதை பிரேமலதாவும் ஆமோதித்திருக்கிறார்.

ஐடியா NO: 4
அதுமட்டுமல்ல, தேர்தல் பணிகள் துவங்கி விட்டால் நிறைய அறிக்கைகள், அறிவிப்புகள், உத்தரவுகள் என பல்வேறு விஷயங்கள் தலைமைக்கழகத்தில் இருந்து தரப்பட வேண்டும். அதில் பொதுச்செயலாளர் என்கிற வகையில் கேப்டன் தான் கையெழுத்திட்டிருப்பார். அவரது பெயரில் அறிக்கைகளோ, அறிவிப்புகளோ, உத்தரவுகளோ வந்தால், நம் கட்சிக்காரர்கள் கூட அதை நம்ப மாட்டார்கள். பொதுவெளியில் கட்சியின் நம்பகத்தன்மையும் கேள்விக்குள்ளாக்கப்படும்.

ஐடியா NO: 5
அதனால், கட்சியின் பொதுச்செயலாளர் பொறுப்பினை நீங்கள் ஏற்றுக் கொண்டு, கட்சியின் நிறுவன தலைவராக மட்டுமே கேப்டன் இருக்கட்டும் என்று பிரேமலதாவிடம் சொல்லப்பட்டுள்ளது. ஆக, தேமுதிக கட்சி தலைமையிடத்தில் விரைவில் பல்வேறு மாற்றங்களை எதிர்பார்க்கலாம் என்கிறார்கள் தேமுதிகவினர்... ஒருவேளை இதுமாதிரியான முடிவுகள் எடுக்கப்பட்டால், செயல்தலைவர் & கட்சி தலைவர் போன்ற பதவிகளுக்கும் அவசியம் இருக்காது என்றும்கூறப்படுகிறது.

கருணாநிதி
முன்னதாக, திமுக பாணியிலேயே செயல் தலைவர் பதவி தேமுதிகவிலும் உருவாகும் என்கிறார்கள்.. மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டபோது, அவரால் கட்சி பணிகளை கவனிக்க முடியவில்லை.. அப்போது, ஸ்டாலின்தான், செயல் தலைவர் பதவியை ஏற்றிருந்தார்.. கட்சியில் எடுக்கப்பட்ட எல்லா முடிவுகளும் ஸ்டாலின் ஒப்புதல் பேரில்தான் நடந்தது.. அதுபோலவே, திமுகவுக்கு அடுத்தபடியாக தேமுதிக இப்படி ஒரு போஸ்டிங்கை உருவாக்கலாம் என்று கூறப்பட்டது. ஆனால், கட்சித்தலைவராக விஜயகாந்த் இருப்பதைவிட, நிறுவனத்தலைவராக இருப்பதே மிக பொருத்தமாக இருக்கும் என்றும், தேமுதிக காலம்வரை, நிறுவனத்தலைவர் பதவி கூடவே வரும் என்பதாலும், இப்படி முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
-
தேமுதிக போட்டியிடும் 10 தொகுதிகள் இறுதியானது.. திமுக தலைமையகத்தில் சுதீஷ் சொன்ன சேதி! -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி












Click it and Unblock the Notifications