Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கட்டாந்தரையாக கிடந்த 40 ஏக்கரை பழத்தோட்டமாக மாற்றிய கிராம மக்கள்! வன பாதுகாப்பில் சாதித்த ஸ்டாலின்!

Subscribe to Oneindia Tamil

சென்னை : தமிழக முதல்வராக ஸ்டாலின் பதவிக்கு வந்தது முதல் நகர வளர்ச்சியில் மட்டும் கவனம் செலுத்தவில்லை. ஊரக வளர்ச்சி என்பதே உண்மையான வளர்ச்சி என்ற நம்பிக்கையில் பல்வேறு திட்டப்பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

நாடு மட்டும் அல்ல; அந்த நாட்டில் உள்ள காடும் சிறப்பாக இருக்க வேண்டும் எனப் பல அறிவிப்புக்களை வெளியிட்டுள்ளார்.

குறிப்பாகத் தனிச் சரணாலயம், வன உயிர்களின் பாதுகாப்பு என இந்தியாவின் முன்னோடி திட்டங்கள் இந்த ஒன்றரை ஆண்டுக்காலத்தில் செயல்பாட்டுக்கு வந்துள்ளன.

வனப் பாதுகாப்பில் சாதித்த ஸ்டாலின்

வனப் பாதுகாப்பில் சாதித்த ஸ்டாலின்

அதில் தனிக்கவனம் பெற்றுள்ளது திருவள்ளுவர் மாவட்டம் சந்திரவிலாசபுரம் பகுதி. இங்கே இத்தனைக் காலம் கரடுமுரடாகவும் கட்டாந்தரையாகவும் கிடந்த 40 ஏக்கர் வனப்பகுதி, இன்று பழங்கள் காய்த்துத் தொங்கும் சோலையாக மாறி இருக்கிறது.

அந்த அளவுக்கு இந்தப் பகுதியை உயிர்ச்சூழல் மிக்க பூமியாக மாற்றி உள்ளனர் இந்தக் கிராமத்து மக்கள். இந்த அற்புதமான மாற்றம் குறித்து அந்த வனத்தின் முகமாக உள்ள முக்கியஸ்தர்களிடம் பேசினோம்.

எப்படி இது சாத்தியமானது என்ற நம்முடைய கேள்விக்குப் பதிலளிக்க முன்வந்தார் ஊராட்சித் தலைவர் மோகன். இது குறித்து மோகன், "இந்த இடம் முன்பு பல வருடங்களாகப் புதர்மண்டிக்கிடந்தது. அதனால் சமூக விரோத கும்பல்களின் இடமாக இது இருந்தது. ஆகவே இந்தப் பக்கம் மக்கள் வர அஞ்சினார்கள்.

4 லட்சத்து 52 ஆயிரம் ரூபாய்

4 லட்சத்து 52 ஆயிரம் ரூபாய்

ஆகவே அதைச் சுத்தம் செய்து மக்களின் பயன்பாட்டுக்காகக் கொண்டுவர முடிவு செய்தோம். அதற்குத் துணையாக என்னுடைய நண்பர்கள் இருந்தார்கள். ஆகவே அதற்காக மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி கேட்டுப் பெற்றோம். இதற்காக 4 லட்சத்து 52 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் தொடங்கினோம். முள் புதர்களை வெட்டி சீர் செய்து இப்போது மக்கள் பயன்பாட்டுக்குத் தேவையான மரங்களை வளர்த்து வருகிறோம்" என்கிறார்.

இவரைத் தொடர்ந்து திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் சந்திரன், " கிட்டத்தட்ட 3 ஆயிரம் செடிகள் அங்கே நடப்பட்டுள்ளன. நவீன பசுமைக்காடு வளர்க்கக்கூடிய திட்டம் இன்றைக்குச் செயல்படுத்தி உள்ளோம். பலரும் காட்டை அழித்து வருகின்ற வேளையில் நாங்கள் இந்த முயற்சியை எடுத்துள்ளோம்.

பாலாபுரம் மற்றும் சந்திரவிலாச புரம் ஆகிய இரண்டு இடங்களிலும் ஏறக்குறைய 40 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலத்தில் இந்தப் பசுமைக்காடு உருவாகி வருகிறது. நாங்கள் நட்ட செடிகள் இப்போது மழைக்காலம் என்பதால் மிக உயரமாக வளர்ந்து பூத்துக்குலுங்கி வருகின்றன. பார்க்கவே கண்களுக்குக் குளிர்ச்சியாக இருக்கிறது. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேற்பார்வையில் மேற்கொள்ளப்பட்ட இந்தப் பணி இந்த ஊருக்குத் தனிச்சிறப்பை உருவாக்கித் தந்துள்ளது" என்கிறார்.

"ஒரு ஆள் உயரத்திற்கு முன்பு புதர்மண்டிக் கிடந்தது. உள்ளே ஆள் நுழைந்தால்கூட தெரியாது. அந்தளவுக்குப் புதர்மண்டிக் கிடந்த பகுதி. இந்தப் பகுதியைக் கடக்கவே பிள்ளைகள் பயப்படுவார்கள். அந்த அளவுக்குக் காடுபோல் கிடந்த இடம்.

180 வகையான பழவகை செடிகள்

180 வகையான பழவகை செடிகள்

இன்று எங்களது முயற்சியால் சுத்தமாக மாறி இருக்கிறது. எல்லா செடி, கொடிகளையும் வெட்டி அகற்றிவிட்டோம். செடியை நடும் காலத்தில் காலையிலேயே 7 மணிக்கு வருவோம். அப்போதுதான் செடிகளை நடச் சரியான நேரம். வெயில் வந்துவிட்டால் நட முடியாது.

இப்போது நட்ட செடிகளைப் பராமரிக்கக் காலை 9 மணிக்கு வருகிறோம். இந்தக் காட்டை உருவாக்கப் போட்டிப் போட்டுக் கொண்டு செய்தோம்" என்கிறார் இந்தக் காடு உருவாக்கிய பெண் ஊழியர் ஒருவர்.

இவரைப்போலவே மற்றொரு பெண் ஒருங்கிணைப்பாளர் ஒருவர், "இங்கே 180 வகையான பழவகை செடிகளை நட்டு உள்ளோம். பலா, முந்திரி, கொய்யா, நெல்லி, மா, மாதுளை, சப்போட்டா, சாத்துக்குடி, இளந்தை, திராட்சை என அத்தனையும் மிக அழகாக வளர்ந்து உள்ளன. இதில் வரும் வருமானம் பஞ்சாயத்தின் பணத்தேவைக்கு உதவி வருகிறது.

இந்தக் காட்டை காவல் காக்கத் தனியாக ஆட்கள் வேலைக்குப் போட்டுள்ளோம். அவர்கள் இதை இரவு பகலாகக் கண்காணித்து வருகிறார்கள். மேலும் சமூக விரோத கும்பல் உள்ளே நுழையாமல் தடுக்கப்பட்டுள்ளது. முன்பு ஆடு, மாடுகளை மேய்த்து வந்தனர். அதை முற்றாகத் தடுத்துள்ளோம். மேய்ச்சலின்போது மாடுகள் செடிகளைக் கடித்துவிடும். ஆகவே பல்வேறு விதங்களில் கட்டுப்பாட்டுடன் கவனமாக வளர்த்து வருகிறோம்." என்கிறார்.

சாதித்துக்காட்டிய சாதாரண மக்கள்

சாதித்துக்காட்டிய சாதாரண மக்கள்

இந்தக் காட்டில் பணிபுரியக் குழுவாக வேலை செய்யும் பெண்கள் தங்களின் பணியை தனித்தனியாகப் பிரித்துக் கொண்டுள்ளனர். சிலர் முள் வெட்டுவதைச் செய்கிறார்கள். சிலர் களை எடுப்பதைப் பார்க்கிறார்கள். வேறு சிலர் நீர் பாய்ச்சுவது போன்ற இதர வேலைகளைப் பார்க்கிறார்கள்.

ஆகவே வேலைகளில் எந்த சோம்பலும் இல்லை. அவரவர் அவருக்கு வழங்கப்பட்ட வேலையை எடுத்துக் கட்டி செய்வதால், இந்தக் காடு திட்டமிடப்பட்ட காலத்திற்கு முன்பாக நல்ல வளர்ச்சியை எட்டி உள்ளது.

இது தவிர ஊர் பொதுமக்களும் தங்களின் பங்களிப்பாக இந்த வேலைகளில் பங்களிப்பு செய்கின்றனர். தன்னார்வலர்களாக அவர்கள் வந்து உதவுவதும் இந்த வேலைத்திட்டத்தை மேலும் எளிதாக்கி உள்ளது.

அதிகாரிகள் திட்டம் தீட்டினாலும்

அதிகாரிகள் திட்டம் தீட்டினாலும்

"பிற்காலத்தில் எத்தனையோ பறவைகள் வந்து இந்தச் செடிகளில் அமரலாம். கூடும் கட்டலாம். அதை நினைத்தால் சந்தோஷமாக இருக்கிறது. பழச் செடிகொடிகள் இல்லாமல் மூலிகைச் செடிகள் மட்டும் 99 வைத்துள்ளோம்.

இவைத் தவிர, ஆலமரம், அரச மரம், செம்மரம், வேம்பு என விதவிதமாக நட்டு இருக்கிறோம். முந்திரியும் மாமரமும் காய்க்கத் தொடங்கி விட்டது. ஒரு அறுவடை கூட நடந்துள்ளது" என்கிறார் இத்திட்டத்தின் சிந்தனைக் களமாக இயங்கிய பொறியாளர் சுந்தரம்.

என்னதான் அதிகாரிகள் திட்டம் தீட்டினாலும் அதை முழுமை அடையச் செய்வது மக்கள்தான். அந்தவகையில் இந்தக் கிராம மக்கள் தனித்துத் தெரிகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+