சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பொது இடங்களில் விநாயகர் சிலை நிறுவ மட்டுமே அனுமதி கேட்கிறோம் ஊர்வலத்திற்கு இல்லை - எல்.முருகன்

பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடத்தான் அனுமதி கேட்கிறோமே தவிர ஊர்வலம் செல்வதற்காக அனுமதி கேட்கவில்லை என்று பாஜக தமிழக தலைவர் முருகன் கூறியுள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடை திறக்க அனுமதி கொடுத்திருக்கும் போது விநாயகர் சிலை திறக்க மட்டும் அனுமதி மறுப்பது ஏன் பாஜக தமிழக தலைவர் எல். முருகன் கூறியுள்ளார். இந்து முன்னணியினர் எடுக்கும் நிலைப்பாட்டிற்கு பாஜக ஆதரவும் ஒத்துழைப்பும் கொடுக்கும் என்றும் முருகன் கூறியுள்ளார்.

Recommended Video

    விநாய சதுர்த்தியை வீட்டிலேயே கொண்டாடுங்கள்..ஊர்வலம் வேண்டாம் - தமிழக அரசு

    விநாயகர் சதுர்த்தி விழா பல்லாயிரக்கணக்கானோர் கூடும் பண்டிகை. இந்தாண்டு கொரோனா பரவல் காரணமாக நடப்பாண்டில் பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைக்கவும், ஊர்வலமாக எடுத்து சென்று கரைக்கவும் தமிழக அரசு தடை விதித்துள்ளது. அத்துடன், விநாயகர் சதுர்த்தி பண்டிகையை அவரவர் வீடுகளிலேயே கொண்டாடவும் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

    Vinayagar Chathurthi 2020: We support Hindu Munnani Says BJP L.Murugan

    உயர்நீதிமன்றமும் அரசு உத்தரவை மதிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது என்றாலும் தடையை மீறி ஒன்றரை லட்சம் விநாயகர் சிலைகளை நிறுவுவோம் என்று கூறியுள்ளார் இந்து முன்னணியின் காடேஸ்வரா சுப்ரமணியம்.

    இந்த நிலையில் தமிழக அரசு இன்று முக்கிய அறிவிப்பினை வெளியிட்டது. அதில் அதில், 22.8.2020 அன்று விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படவுள்ளது. இந்த ஆண்டு கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக, தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் 29.7.2020 அன்று வெளியிட்ட அறிவிக்கையின்படி, மதம் சார்ந்த விழாக்கள், கூட்டு வழிபாடுகள் ஆகியவை நாட்டின் அனைத்து பகுதிகளிலும் தடை செய்யப்பட்டுள்ளது.

    மத்திய அரசின் வழிகாட்டுதலின்படியும், மாநிலத்தில் கொரோனா தொற்றினால் நிலவிவரும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டும், கொரோனா நோய் தொற்று பரவுதலை தடுக்கும் வகையில், பொது இடங்களில் விநாயகர் சிலைகள் அமைப்பதையும், பொது இடங்களில் வழிபாடு நடத்துவதையும், ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர்நிலைகளில் கரைப்பதையும், பொதுமக்கள் நலன் கருதி தடை செய்யப்பட்டு ஏற்கெனவே ஆணை வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில், பொதுமக்கள் அவரவர் வீடுகளிலேயே விநாயகர் சதுர்த்தி விழாவினை கொண்டாட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் இன்று சென்னை தி. நகர் கமலாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநிலத்தலைவர் எல். முருகன், விநாயகர் சிலை வைத்து வழிபடுவதற்கு அரசு தடை விதிப்பது புரியாத புதிராக இருப்பதாக கூறியுள்ளார். தமிழ்நாட்டில் சிறிய கோவில்கள் திறக்கப்பட்டுள்ளன. மக்கள் வழிபாடு செய்கிறார்கள். அதே போல பொது இடத்தில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட மட்டுமே அனுமதி கேட்கிறோம் ஊர்வலம் செல்வதற்காக அனுமதி கேட்கவில்லை என்று கூறினார்.

    25 வயது மருத்துவ மாணவி மர்ம மரணம்.. தலை, கழுத்தில் காயம்.. மருத்துவரை கைகாட்டும் உறவினர்கள்!25 வயது மருத்துவ மாணவி மர்ம மரணம்.. தலை, கழுத்தில் காயம்.. மருத்துவரை கைகாட்டும் உறவினர்கள்!

    டாஸ்மாக் கடைகளை திறந்துள்ள அரசு, விநாயகர் சிலைகளை வைத்து வழிபட அனுமதி மறுப்பது ஏன் என்றும் கேள்வி எழுப்பினார். தொடர்ந்து பேசிய அவர், விநாயகர் சிலை வைத்து வழிபடும் விவகாரத்தில் இந்து முன்னணியினர் எடுக்கும் நிலைப்பாட்டிற்கு பாஜக ஆதரவும், ஒத்துழைப்பும் கொடுக்கும் என்றும் கூறியுள்ளார் முருகன்.

    விநாயகர் சிலை வைத்து வழிபட மகாராஷ்டிரா, கர்நாடகாவில் அரசு அனுமதி வழங்கியுள்ளது தமிழக அரசு மட்டும் அனுமதி கொடுக்க மறுப்பது ஏன் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார் முருகன்.

    English summary
    BJP Tamil Nadu leader L Murugan said the BJP would support and co-operate with the position taken by the Hindu Munnai for Vinagar Chathurthi.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X