சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

விதை விதைப்போம்.. இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க தன்னார்வலர்களின் உன்னதமான திட்டம்!

Google Oneindia Tamil News

சென்னை: இயற்கை விவசாயம் செய்வதை ஊக்குவிப்பதற்காக ஆரம்பிக்கப்பட்ட விதை விதைப்போம் என்ற குழு தீவிரமாக செயல்பட்டு பல்வேறு செடிகளை நட்டுள்ளது.

விதை விதைப்போம்! ஒரே சிந்தனை கொண்ட சுற்றுச்சூழல் தன்னார்வலர் இளைஞர்கள் குழுவினர்.
இணைய வெளியில் இன்ஸ்டாகிராம் மூலம் வீட்டில் இயற்கை விவசாயம் செய்வதை ஊக்குவிப்பதற்காக ஆரம்பிக்கப்பட்ட ஒரு சிறிய குழு, பிறகு அதன் அடுத்த கட்டமாக இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட பொருட்களை பயன்படுத்த ஊக்கப்படுத்தவும் செயல்பட்டு வருகிறது.

நம் வீடு வரை இயற்கை விவசாயமும் ரசாயனம் கலக்காத பொருள்களும் பயன்படுத்தினால் போதுமா? நாட்டு மக்களும் பயன்படுத்த வேண்டாமா? அவர்களையும் ஊக்கப் படுத்த வேண்டாமா என்ற சிந்தனை எழ அத்தகைய கருத்து ஒற்றுமை உள்ள இயற்கை ஆர்வலர் இளைஞர்களை ஒன்றிணைத்து அரசு சார்பற்ற அமைப்புகளின் உதவியுடன் விதை விதைப்போம் என்ற ஒரு இயற்கை தன்னார்வ குழு ஆரம்பிக்கப்பட்டது.

இக்குழுவின் நோக்கம் இயற்கை முறை விவசாயம், பசுமை காடுகள் உருவாக்குதல் , வீட்டில் விவசாயம், மாடி தோட்டம் போன்றவற்றை அமைக்கவும் அதை மற்றவர்களிடம் எடுத்துக் கூறி அவர்களையும் அத்தகைய பணியில் ஈடுபடுத்துவது ஆகும். குறிப்பாக பெண்கள், இளைஞர்கள் மற்றும் தொழில்முறை பணியாளர்கள் இத்தகைய இயற்கை காக்கும், உருவாக்கும் பணியில் ஈடுபட வைப்பது தான் இவர்களது முதன்மையான குறிக்கோள். பெரும்பாலும் இவர்களது பணி இயற்கை சார்ந்ததாகவே இருக்கிறது.

விதை விதைப்போம் அதிகாரபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது ஆகஸ்ட் 25 2021. இணையத்தில் ஒரு சிறு குழுவாக ஆரம்பிக்கப்பட்டு இன்று 250 மேற்பட்ட தன்னார்வலர்கள் இணைந்து பணியாற்ற கூடிய ஒரு குழுவாக இரண்டே மாதங்களில் வளர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. கிட்டத்தட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட களப்பணியாளர்கள் எங்களுடன் வார இறுதி நாட்களில் சேர்ந்து பணியாற்றுகிறார்கள். எல்லோரும் பங்கு பெற வேண்டும் என்பதால் அவர்களது பணி நேரம் பாதிக்கப்படாமல் வார இறுதி நாட்களில் இத்தகைய பணியில் ஈடுபட வைக்கிறோம்.

என்ன செய்கிறது இந்த அமைப்பு?

இணையவெளியில் வீடுகளில் மாடித் தோட்டங்களில் மற்றும் சமையலறை கூடங்களில் செடிகள் வளர்க்க பல மாதங்களாக குழுவாக செயல்பட்டு வந்த வேளையில் களப்பணியில் ஈடுபடலாம் என்று ஒற்றை கருத்துள்ள இளைஞர் குழு ஒன்று சேர்ந்து கடந்த ஆகஸ்ட் 25 முதல் களத்தில் பணியாற்றி வருகிறோம். இதுவரை 18 களப்பணிகள் செய்து முடிக்கப்பட்டுவிட்டன

களப்பணி விவசாய மற்றும் தோட்டம் உருவாக்குதல் மட்டுமில்லாமல் தோட்டம் போடுவதற்கு செடி கன்றுகளை உருவாக்குதல், பிறகு தோட்டம் போடுதல், அதைப் பாதுகாத்து உருவாக்குதல் போன்றவற்றையும் செய்து வருகிறோம். விதை விதைப்போம் தோழர்கள் முதலில் ஒரு மியாவாக்கி காடு பராமரித்தல் பணி செய்து வருவதோடு எங்களது முழுமுதல் முயற்சியாக சென்னைக்கு அருகில் அடையாளம்பட்டில் ஒரு மியாவாக்கி காடு ஒன்றை அமைத்துள்ளோம்.

Vithai Vithaipom team is encouraging organic farm

விதை விதைப்போம் விதைத்த இடங்கள்:

சிட்கோ அலுவலகம், அம்பத்தூர் தொழிற்பேட்டை, சென்னை
முகப்பேர் 6ஆவது பிளாக்கில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி
அம்பத்தூர் அரசு தொழில் பயிற்சி நிறுவனம்
எஸ்டிஏடி, டால்பின் நீச்சல் அகாதெமி, சென்னை
மியாவாக்கி காடுகள் அடையாளம்பட்டு, சென்னை
சென்னை அயனம்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளி
கிரீன் கலாம் ஆக்டிவிட்டு சென்னை
அயப்பாக்கம் ஏரி சென்னை

ஆகிய இடங்களில் மியாவாக்கி காடுகள் அமைக்கப்பட்டுள்ளன.

Vithai Vithaipom team is encouraging organic farm

மியாவாக்கி காடுகள் என்றால் என்ன?

மியாவாக்கி வனவியல் முறை நகர்ப்புற காடுகளை உருவாக்குவதற்கான ஒரு தனித்துவமான வழியாகும் மற்றும் ஜப்பானிய தாவரவியலாளர் அகிரா மியாவாகியால் முன்னோடியாக பயன்படுத்த பட்ட முறை. இந்த நடவு முறையால், ஒரு நகர்ப்புற காடு 20-30 ஆண்டுகளில் குறுகிய காலத்தில் வளர முடியும், அதே நேரத்தில் ஒரு வழக்கமான காடு இயற்கையாக வளர 200-300 ஆண்டுகள் ஆகும். மியாவாக்கி நுட்பத்தில், பல்வேறு பூர்வீக இன செடி, மரங்கள் அருகருகே நெருக்கமாக நடப்படுகின்றன, இதனால் செடிகள், மரங்கள் சூரிய ஒளியை மேலிருந்து மட்டுமே பெற்று பக்கவாட்டாக வளராமல் மேல்நோக்கி வளரும். இதன் விளைவாக, தோட்டம் தோராயமாக 30 மடங்கு அடர்த்தியாகவும், 10 மடங்கு வேகமாக வளர்ந்து 3 வருட காலத்திற்குப் பிறகு பராமரிப்பு இல்லாத காடாக மாறும்.

யார் யார் பங்கு பெறலாம்?

யார் வேண்டுமானாலும் பங்கு பெறலாம். வயது ஒரு தடை இல்லை. இயற்கை மீது ஆர்வமும் அதை காத்து அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்க வேண்டும் என்ற எண்ணம் மட்டும் போதும், கூடவே கொஞ்சம் உங்களின் பொன்னான நேரமும் தேவை.

எப்படி இணையலாம்?

9962200666/ 70109 32723 என்ற வாட்ஸ் அப் எண்ணில் தொடர்பு கொண்டு தங்களை இணைத்துக் கொள்ளலாம்.

Vithai Vithaipom team is encouraging organic farm

பணி நேரம்:

வார இறுதி நாட்கள் மட்டுமே அனைவரும் பங்கு பெற வேண்டும் என்ற நோக்கத்தில் இவ்வாறு அட்டவணை அமைக்கப்பட்டுள்ளது.

English summary
Vithai Vithaipom team is encouraging organic farm in lands, home, terrace etc.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X