சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சித்ராவின் "வீடியோக்கள்".. 10 மணி வரை படுக்கையில் ஹேமந்த்.. கொளுத்தி போட்ட சலீம்..!

சித்ராவின் உதவியாளர் சலீம் சில தகவல்களை வெளியிட்டு உள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: சித்ராவின் வீடியோக்களை ஹேமந்த் அழித்துவிட்டாராம்.. சித்ராவும் தன் சுதந்திரத்தை இழந்தே விட்டாராம்.. இப்படி ஒரு பகீர் தகவலை, சித்ராவின் உதவியாளர் சலீம் என்பவர் கொளுத்தி போட, அது இன்னும் பற்றிக் கொண்டு எரிகிறது.

சித்ரா இறந்து 20 நாட்களுக்கு மேலாகியும் உண்மை நிலவரம் தெரியவில்லை.. தற்கொலைக்கு தூண்டியதாக ஹேமந்த் ஜெயிலுக்குள் இருந்தாலும், விசாரணை விறுவிறுப்பாகவில்லை என்றே சொல்லப்படுகிறது.

"என் மகளை கொன்னுட்டான்" என்று சித்ராவின் அம்மாவும், சித்ராவின் கொலைக்கு வேறு ஏதோ காரணம் என்று அவரது மாமனாரும் மாறிமாறி குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

யார்னு தெரியுதா பாருங்க.. கும்முன்னு இருக்கும் சித்ரா.. பக்கத்தில் ஜம்முன்னு ஒரு குட்டி.. செம வைரல்யார்னு தெரியுதா பாருங்க.. கும்முன்னு இருக்கும் சித்ரா.. பக்கத்தில் ஜம்முன்னு ஒரு குட்டி.. செம வைரல்

 அறிமுகம்

அறிமுகம்

இந்த சமயத்தில்தான், சித்ராவின் உதவியாளர் சலீம், பிரபல பத்திரிகைக்கு ஒரு பேட்டி தந்துள்ளார்.. அதில்,"சில வருஷத்துக்கு முன்னாடிதான் சித்ராவுக்கு உதவியாளராக சேர்ந்தேன்.. அவரது தீவிர ரசிகராக அறிமுகமானேன்.. பிறகுதான் உதவியாளர் வேலை பார்த்தேன்.. ஷூட்டிங்கில் சித்ராவின் நடை, உடை, பேச்சு,பாட்டு, என மொத்த நிகழ்வுகளையும் வீடியோ எடுப்பேன்.. போட்டோ எடுப்பேன்.

 விசாரணை

விசாரணை

அவைகளை பார்த்துவிட்டு, சித்ராவும் இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு அவைகளை பயன்படுத்தி கொள்வார். ஆனால் ஹேமந்த் சித்ராவை காதலிக்க ஆரம்பித்ததும், நிலைமையே மாறி போச்சு.. சித்ராவுடன் போய் நான் வீடியோக்கள் எடுக்கறதுக்கு முதலில் தடை போட்டார். நான் சித்ராவை வீடியோ எடுத்து சம்பாதிக்கறேன்னு தப்பா புரிஞ்சிக்கிட்டார்.

 வீடியோக்கள்

வீடியோக்கள்

என் செல்போனை பிடுங்கி அதில் இருந்த சித்ராவின் வீடியோக்களை டெலிட் செய்தார்.. ஒருகட்டத்தில் என்னை சித்ராவிடம் இருந்து விரட்டி அடித்தார்.. அப்போதுகூட சித்ரா அமைதியா இருந்தாங்க.. ஏன்னு தெரியல..10 மணி வரை படுக்கையை விட்டு எழ மாட்டார்.. வேலைக்கும் போக மாட்டார்.. சித்ராவுக்கு ஷூட்டிங்கில் போன் செய்து கொண்டே இருப்பார்" என்று தெரிவித்துள்ளார்.

சித்ரா

சித்ரா

ஆக, சலீமின் இந்த பேட்டி மறுபடியும் பரபரப்பை கிளப்பி உள்ளது.. இந்த அளவுக்கு சித்ராவுக்கு ஒரு உதவியாளர் இருக்கும்போது, அவரை ஏன் இதுவரை விசாரணை வளையத்துக்குள் போலீஸ் கொண்டு வரவில்லை? என்று கேள்வி எழுப்புகிறார்கள்.. சித்ரா விவகாரத்தில் போலீசாரின் விசாரணை சரியான திசையில்தான் செல்கிறதா என்று கேட்டபடியே இருக்கிறார்கள்.

 சலீம்

சலீம்

அதற்கு காரணம், 2 விஷயம்தான்.. சித்ராவின் செல்போனில் இருந்த மொத்த பேரையும் ஏன் போலீசார் விசாரிக்காமல் இருக்கிறார்கள்? என்பதும், மற்றொன்று 14 பேரை விசாரித்த போலீசார், சலீமை ஏன் விசாரிக்கவே இல்லை என்பதும்தான்... சித்ரா இறப்பதற்கு 2 நாள் முன்னாடி வீடியோ கிடைக்கும்போது, சித்ரா இறந்த அன்று ஹோட்டலில் இருந்த சிசிடிவி கிடைக்காதது மர்மமாகவே உள்ளது.

 மர்மங்கள்

மர்மங்கள்

ஏற்கனவே, சித்ரா கழுத்தில் தடயங்கள் இல்லை, சித்ரா மார்பில் காயங்கள் இருந்தன, ஹோட்டல் ரூம் சிசிடிடிவி காட்சிகளை காணோம், என்பன போன்ற சந்தேகங்களும், மர்மங்களும் நீண்டு கொண்டே போகின்றதே தவிர, அந்த மென்மையான இதயம் கொண்ட பெண்ணின் மரணத்துக்கு விடைதான் இன்னும் கிடைக்கவே இல்லை.

English summary
VJ Chitras personal assistant Saleem interview
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X