4 ஆயிரம் கோடி செலவு.. கொளத்தூரிலேயே மழை நீர் தேங்குதே.. சீண்டிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
சென்னை: மழை நீர் வடிகால் பணிகள் முறையாக நடைபெற்று இருந்தால் கண்டிப்பாக வெள்ளம் வடிந்து இருக்கும். 4 ஆயிரம் கோடி செலவு செய்ததாக சொல்கிறீர்கள் அதனால் என்ன தாக்கம்? கொளத்தூர் தொகுதியிலேயே தண்ணீர் நிற்கிறது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்தார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதவாது:- உலகத்திலேயே பொய் சொல்வதற்கு என்று ஒரு விருது கொடுக்க வேண்டும் என்றால் திமுக அரசுக்குத்தான் கொடுக்க வேண்டும். தேர்தல் வாக்குறுதியை 100 சதவீதம் நிறைவேற்றி விட்டேன் என்றார்கள், நிறைவேற்றிவிட்டார்களா.. ஒன்னும் செய்யவில்லை. அதுபோலத்தான் மழை நீர் வடிகால் பணிகள் 98 சதவீதம் முடிந்துவிட்டதாக கூறுவதும்... காதில் பூ சுற்றும் கதையாகத்தான் முதல்வரின் அந்த அறிக்கை உள்ளது.

அந்த மாதிரி நிறைவேற்றியிருந்தால் வெள்ளம் வடிந்து இருக்கும். 4 ஆயிரம் கோடி செலவு செய்ததாக சொல்கிறீர்கள். அதனால் என்ன தாக்கம்.. விளைவு என்ன? கொளத்தூர் தொகுதியிலேயே தண்ணீர் நிற்கிறது. அடுத்த மழைக்கு தண்ணீர் நிற்காகது என இப்போ சொல்வார்கள். இவர்கள் ஆட்சி இருக்கும் வரை மக்களுக்கு கஷ்டம் தான். பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கும் முடிவை தன்னிச்சையாக எடுக்க முடியாது.
கலெக்டர் கல்வித்துறை அதிகாரிகளிடம் கேட்பார். துறை செயலாளர்கள் அமைச்சர்களிடம் கேட்பார்கள். அமைச்சர்கள் முதல்வரிடம் கேட்டு வானிலை அறிக்கை பொறுத்து விடுமுறை அளிக்கும் முடிவை எடுப்பார்கள். ஆனால் இந்த அரசு தூங்கிவிட்டது. வானிலை அறிக்கையை படிக்காமல் காலேஜ் எல்லாம் திறந்து இருக்கிறது என்றால் இந்த அரசு எந்த அளவு விழிப்பாக இருக்கிறது என்று தெரிந்து கொள்ளலாம்.
எம்.ஜி.ஆர் நினைவு நாளில் கலைஞர் நூற்றாண்டுவிழா கொண்டாடப்படுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக கேட்கிறீர்கள். இந்த விவகாரத்தில் அதிமுக சார்பில் ஏற்கனவே கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வேண்டுகோளும் வைக்கப்பட்டது. எம்.ஜி.ஆர் நினைவு நாள்.. தமிழ்நாடே துயரப்படும் தேதி.. அந்த தேதியில் நடத்த வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.
நடிகர் சங்கத்திற்கு அதிக நிதி ஒதுக்கி கொடுத்து நிலம் வாங்கி கொடுத்தவர் எம்.ஜி.ஆர். நடிப்பில் மட்டும் இன்றி தமிழ்நாட்டில் மாபெரும் முதல்வராக 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஆண்ட ஒரு முதல்வர். அவர் நினைவு நாளில் நடத்த வேண்டாம் என்று சொன்னால் செவிடன் காதில் ஊதிய சங்கு போல கேட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள். தேதி மாற்றம் குறித்து சொல்லவில்லை. திமுக நிர்பந்தத்தின் பேரில் நீங்கள் பண்ணுகிறீர்கள். உண்மையில் எம் .ஜி.ஆர் நூற்றாண்டுவிழாவைத்தான் கொண்டாடியிருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
-
தண்ணீர் பாட்டில் வீசுனாங்க.. ஆனால் இன்னைக்கு! ஓபிஎஸ் சொன்னதுமே ஸ்டாலின் கொடுத்த ரியாக்ஷன் -
சினிமா துறைக்கு ரெட் கார்பெட்.. அதிமுக மாஜிக்களுடன் நோ சந்திப்பு.. விஜய்யின் செயலால் அப்செட்! -
சின்ன புரட்சித் தமிழர்..அதிமுகவில் என்ட்ரி கொடுக்கும் எடப்பாடி மகன்? மிதுனால் மிரளும் அதிமுக தலைகள்? -
சென்னையில் இடி.. தவெகவில் இணையும் அதிமுக மா.செக்கள்? எடப்பாடி பழனிசாமிக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி! -
4 சட்டமன்ற தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க முடியாது - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி -
வயிறு எரியுது! விஜய்யிடம் சரணடைவதை விட உயிரை விடலாம்! விஜயபாஸ்கர் மீது ஆர்பி உதயகுமார் கடும் தாக்கு! -
அதிமுகவில் உடைந்த அடுத்த செங்கல்.. சனிக்கிழமை பனையூரில் மெயின் புள்ளி! இவரா? பரபர புதுக்கோட்டை! -
4 சீட்டர் சோபா இல்லை.. இப்போது 5 சீட்டர் சோபா... விஜய் விஜய்பாஸ்கரை விமர்சித்த உதயநிதி -
அடுத்து ராஜினாமாவுக்கு ரெடியாகும் 3 தலைகள்.. ’மறுமலர்ச்சி’யுடன் விஜய்! பனையூர் போட்ட பக்கா ஸ்கெட்ச்! -
எடப்பாடி பழனிசாமிக்கு ஷாக்.. விஜயபாஸ்கரை தொடர்ந்து அதிமுகவில் இருந்து விலகிய ஆர்.வி.உதயகுமார் -
கலக்கத்தில் கரூர்.. தவெகவுக்கு தாவும் விஜயபாஸ்கர்? அவரே சொன்ன விளக்கம்! குஷியான அண்ணனின் விழுதுகள்! -
அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைகிறாரா செல்லூர் ராஜு? பேச்சே கிடையாது.. விரலிலேயே சிக்னல்!












Click it and Unblock the Notifications