Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நாங்க பங்காளிங்க.. சண்டை போட்டாலும் என்றைக்கும் நாங்கதான்.. பாஜகவுக்கு எதிராக டீம் போட்ட திமுக!

Subscribe to Oneindia Tamil

சென்னை : என்னதான் திமுக - அதிமுக ஆகிய கட்சிகள் எதிரெதிராக நின்று அரசியல் களத்தில் மோதிக் கொண்டாலும், திராவிடக் கட்சிகளாக, பங்காளிக் கட்சிகள் என்கிற உணர்வில் உறுதியாக இருந்து வருகின்றன.

அதிமுக தொடர் தோல்விகளால் துவண்டிருந்த நிலையில், குறுக்கே புகுந்த பாஜக, அதிமுகவை ஓவர் டேக் செய்யப் பார்த்தது. அதிமுகவுவை விழுங்கிவிட்டு பாஜக வளர்வதை திமுகவினரே ரசிக்கவில்லை.

இன்றைக்கு இரண்டு கட்சிகளும் எதிரெதிர் நிலையில் இருந்தாலும், கடந்த 50 ஆண்டுகால தமிழகத்தை இரு கட்சிகளும் தான் ஆட்சி செய்துள்ளன. அதுவும் அண்ணாவை தலைவராக ஏற்றுக்கொண்ட கட்சிகளே இரண்டும் என்பதால் பல நேரங்களில் ஒரே குரல் தான் ஒலித்துள்ளன. இப்போதும் அதே குரல் ஒலித்திருக்கிறது.

தமிழக அரசியல்

தமிழக அரசியல்

தமிழகத்தின் அரை நூற்றாண்டு கால அரசியலை ஆண்டு வரும் கட்சிகள் திமுகவும் அதிமுகவும். ஒன்று திமுக ஆட்சியில் இருக்கும், இல்லையென்றால் அதிமுக ஆட்சியில் இருக்கும். திமுக 1967ல் ஆட்சிப் பொறுப்புக்கு வருவதற்கு முன்பு கோலோச்சி வந்த காங்கிரஸ் கட்சியே அதன்பிறகு இந்த இரண்டு கட்சிகளில் ஏதாவது ஒன்றோடு கூட்டணி வைத்தால் தான் எம்.எல்.ஏ சீட்டையே ஜெயிக்க முடியும் என்ற நிலை இருந்து வருகிறது. இந்தக் கட்சிகளின் இடத்தைப் பிடிக்க பல கட்சிகள் வந்து முட்டி மோதி முட்டுச் சந்திலேயே நின்றுவிட்டது வரலாறு.

திராவிடம்

திராவிடம்

திமுகவில் இருந்து கருத்து வேறுபாட்டால் பிரிந்து சென்ற எம்.ஜி.ஆர். அதிமுகவை தலைமையேற்று நடத்தினாலும், அவரும் தலைவராக ஏற்றுக்கொண்டது பேரறிஞர் அண்ணாவைத்தான். கட்சியின் பெயரிலேயே அண்ணாவையும் வைத்திருக்கிறது அதிமுக. இதனால், எதிரெதிராக நின்று கள அரசியல் செய்தாலும், பல விஷயங்களில் இரண்டு கட்சிகளுமே ஒரே நிலைப்பாட்டை எடுத்துள்ளன. மாநில சுயாட்சி கோஷங்களை இரு கட்சிகளுமே வலுவாக முன்வைத்து வந்திருக்கின்றன.

உள்ளே வந்த பாஜக

உள்ளே வந்த பாஜக

ஆனால், சமீபகாலமாக, அதாவது ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு ஏற்பட்ட அரசியல் குழப்பங்களுக்குப் பிறகு ஆட்சியில் இருந்த அதிமுக, பாஜகவின் முழு ஆதரவோடு இயங்கத் தொடங்கியது. எடப்பாடி பழனிசாமியின் ஆட்சிகாலம் முழுவதும் டெல்லி பாஜகவே அதிமுக அரசுக்கு உறுதுணையாக இருந்தது. அதைப் பயன்படுத்தியே அதிமுகவோடு கூட்டணி அமைத்து 4 எம்.எல்.ஏ சீட்களையும் வென்றது பாஜக. பாஜகவின் தேசியவாதத்தை எதிர்த்து வந்த திராவிடக் கட்சிகளில் ஒன்றான அதிமுக பாஜகவுக்கு அடங்கிப்போனது அனைவரையும் அதிருப்திக்குள்ளாக்கியது.

எதிர்க்கட்சி யார்?

எதிர்க்கட்சி யார்?

இதன் உச்சமாக, ஒரு கட்டத்தில் அதிமுகவையே ஓவர்டேக் செய்யும் நிலைக்கு வந்தது பாஜக. திமுக அரசுக்கு எதிராக தொடர்ந்து பேசி பாஜக தலைவர் அண்ணாமலை லைம்லைட்டில் இருந்து வந்ததும், அந்த நேரத்தில் அதிமுக தலைமை ஓபிஎஸ்-ஈபிஎஸ் இருவரும் அமைதி காத்ததும், தமிழகத்தில் உண்மையில் எதிர்க்கட்சியாக செயல்படுவது யார் எனும் விவாதத்தையே கிளப்பியது. ஆனால் அடுத்த சில நாட்களியேலே ஒற்றைத் தலைமை மோதலால் பரபரப்புகள், எதிர்பார்ப்புகள் அத்தனையையும் தன்பக்கம் ஈர்த்தது அதிமுக.

பங்காளிகள்

பங்காளிகள்

திமுகவும் அதிமுகவும் இத்தனை ஆண்டுகளாக தொடர்ந்து எதிர் எதிர் துருவ அரசியலில் ஈடுபட்டு வந்தாலும், இரண்டு கட்சிகளுமே திராவிடக் கட்சிகள் என்ற ஆதார நோக்கத்தை விட்டுக்கொடுத்ததில்லை. புதிய கட்சிகள் அந்த இடத்தைப் பிடிக்க அனுமதித்ததும் இல்லை. எவ்வளவு அரசியல் எதிரிக் கட்சியாக இருந்தாலும் கூட இந்த விஷயத்தில் திமுகவும், அதிமுகவும் ஒற்றுமையோடு இருந்து வருவது மற்ற மாநிலங்களில் உள்ள கட்சியினரே ஆச்சரியப்படும் விஷயம்.

ஆர்.எஸ்.பாரதி

ஆர்.எஸ்.பாரதி

சென்ற மாதம் தேனி மாவட்டம் போடியில் நடைபெற்ற தி.மு.க அரசின் ஓராண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் பேசிய தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்‌.எஸ்.பாரதி, தமிழகத்தில் அ.தி.மு.க எங்கள் பங்காளி கட்சி. எங்களுக்குள் சண்டை போட்டுக் கொள்வோம். ஆனால் பா.ஜ.க எங்கள் பகையாளி கட்சி. ஒருபோதும் தி.மு.க பா.ஜ.கவுடன் சேராது என உறுதியாகத் தெரிவித்தார்.

கே.பி.முனுசாமி

கே.பி.முனுசாமி

சமீபத்தில், அதிமுகவில் நிலவிவரும் ஒற்றைத் தலைமை மோதல் தொடர்பாக அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி இன்று கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "தமிழகத்தில் பல கட்சிகள் நாங்கள் தான் வந்துவிடுவோம் என்று பேசலாம். ஆனால், அது நடக்காது. திமுக அல்லது அதிமுக மட்டுமே ஆட்சியில் இருக்கும். நாங்கள் பங்காளிகள்" எனப் பேசினார்.

ஒரே குரலில்

ஒரே குரலில்

திமுக, அதிமுகவின் முன்னணி தலைவர்கள் இருவரும் ஒரே குரலில் ஒலித்துள்ளது தான் திராவிட அரசியலின் அடித்தளம். இருவரும் வெவ்வேறு சமயங்களில் இவ்வாறு பேசியிருந்தாலும் கூட, பாஜகவுக்கு எதிராக இரண்டு கட்சிகளும் தங்களுக்கு எதிரில் நிற்கவேண்டியது யார் என்பதில் தெளிவாக இருப்பதையே இந்த நிகழ்வுகள் காட்டுகின்றன. திராவிடக் கட்சிகள் என்ற உணர்வில் இரு முக்கிய கட்சிகளும் ஒரே பார்வையில் இருப்பது பாஜகவுக்கு கிலியை ஏற்படுத்தியிருக்கும் என்றே சொல்லலாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+