தமிழக அரசுடன் இணைந்து செயல்படுவோம்.. முன்வந்த அண்ணாமலை.. இன்புளூயன்சா பரவலை தடுக்க வேண்டுகோள்!
சென்னை : புதிய தொற்றுநோய் பரவாமல் தடுக்க தமிழக அரசு வழிவகை செய்ய வேண்டும் என்றும், நாம் அனைவரும் தமிழக அரசுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக இன்புளூயன்சா வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் இன்புளூயன்சா காய்ச்சலால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,166ஆக அதிகரித்துள்ளது. காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காய்ச்சலுடன் வரும் குழந்தைகள்
இந்நிலையில் இதுதொடர்பாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், "H1, N1 இன்ப்ளுவன்சா வைரஸ் பரவல் தமிழகத்தில் குறிப்பாக சென்னை மற்றும் பிற மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மிகவும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. பல மருத்துவமனைகளில் காய்ச்சலுடன் சிகிச்சைக்காக வரும் குழந்தைகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது.

பாஜக சார்பில் முழு ஒத்துழைப்பு வழங்க தயார்
இன்புளுவன்சா H1, N1 வைரஸ் பாதிப்பினால் மக்கள் மிக அதிகமாக பாதிக்கப்படாத வகையில் உடனடியாக மருத்துவ உதவிகள் கிடைக்க மாநில அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும், மக்களுக்கு மருத்துவ உதவிகள் கிடைத்திட பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் அரசுக்கு முழுமையான ஒத்துழைப்பினை வழங்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.

மருத்துவ முகாம்கள்
வைரஸ் H1, N1 இன்ப்ளுவன்சா பரவல் குறையும் வரை பொது இடங்களில் முகக் கவசம் அணிவது கட்டாயம் ஆக்கவேண்டும், H1, N1 இன்ப்ளுவன்சா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பள்ளிக்கல்வித்துறை மற்றும் அரசு மருத்துவமனைகளில் உதவியோடு மாணவர்கள் எண்ணிக்கை அதிகம் உள்ள பள்ளிகளில், மருத்துவ முகாம்கள் நடத்துவது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும்.

அண்ணாமலை கடிதம்
நோய் பரவலை தடுப்பதற்கு மக்களும் அரசும் இணைந்து செயல்பட்டு பரஸ்பரம் முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என்று தமிழக பாஜக சார்பாக பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இது தொடர்பாக மத்திய சுகாதாரத் துறையின் கவனத்தை ஈர்க்க மாண்புமிகு மத்திய அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளேன், அனைவரும் இணைந்து அரசுடன் இணைந்து புதிய வைரஸ் தாக்குதலை முறியடிப்போம்" என அந்த அறிக்கையில் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
பைக்கில் பள்ளிக்கு வரும் மாணவர்களா நீங்க? உஷார்.. தமிழக பள்ளி கல்வித்துறை அதிரடி உத்தரவு! -
மொத்தமாக காலியாகும் மம்தா கட்சி.. பாஜகவுக்கு தாவும் 50 திரிணாமுல் MLAகள்? 20 எம்பிக்களும் ராஜினாமா? -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்?












Click it and Unblock the Notifications