ஆரஞ்சு அலர்ட்! இன்றும் தமிழ்நாட்டில் கனமழை வெளுக்க போகிறது! எங்கெல்லாம் பெய்யும்? வானிலை ரிப்போர்ட்
சென்னை: தமிழ்நாட்டில் இன்று கன முதல் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த ஒரு வாரமாக தீவிர கனமழை பெய்து வருகிறது. முதலில் தென் மாவட்டங்களில் தொடங்கிய கனமழை தற்போது தமிழ்நாடு முழுக்க பரவலாக பெய்து வருகிறது.
நேற்று வடமாவட்டங்களில் தீவிர கனமழை பெய்தது. அதேபோல் டெல்டா மாவட்டங்களிலும் மழை பெய்தது.
மழை காரணமாக தமிழ்நாட்டில் உள்ள ஏரிகள், குளங்கள், ஆறுகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. காவிரியில் நீர் வரத்து அதிகரித்து உள்ளதால் மேட்டூர் அணை திறக்கப்பட்டு 2.10 லட்சம் கன அடி நீர் வெளியேறி வருகிறது.

கனமழை
இந்த நிலையில் தமிழ்நாட்டில் இன்று கன முதல் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.நாளை தமிழ்நாட்டிற்கு மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் இன்றும் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. முன்பு தமிழ்நாட்டிற்கு இன்று மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டு இருந்தது.

ஆரஞ்ச் அலர்ட்
தற்போது அது ஆரஞ்சு அலர்ட்டாக மாற்றப்பட்டுள்ளது. மொத்தமாக ராஜஸ்தான், குஜராத் பகுதி, கடலோர & தெற்கு கர்நாடகா மற்றும் தமிழ்நாடு, புதுச்சேரி & காரைக்கால் ஆகிய இடங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் கடலோர மாவட்டங்களில் காற்றின் வேகம் 60 கிமீ இருக்கும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. உள்மாவட்டங்களிலும் 50 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும்.

கடலுக்கு செல்ல வேண்டாம்
இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இன்று இடி, மின்னல் அதிகமாக இருக்கும் என்றும் கணிக்கப்பட்டு உள்ளது. இது போக இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட், மேற்கு உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், துணை-இமயமலை மேற்கு வங்காளம் & சிக்கிம், ஒடிசா, அந்தமான் & நிக்கோபார் தீவுகள், அசாம் & மேகாலயா, நாகாலாந்து, மணிப்பூர், மிசோரம் & திரிபுரா, குஜராத் பகுதி, மராத்வாடா, விதர்பா மற்றும் ராயலசீமா ஆகிய பகுதிகளுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. நேற்று தமிழ்நாட்டில் பல பகுதிகளில் இரவு மழை கொட்டித்தீர்த்தது.

மழை
இன்று நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, கோவை, திண்டுக்கல் மதுரை, விருதுநகர், போன்ற மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.. தூத்துக்குடி, நாமக்கல், சேலம், ஈரோடு, சிவகங்கை, திருச்சி, கரூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூரில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் அதிகாலையில் இருந்து ஆங்காங்கே விட்டு விட்டு மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் நேற்று நாள் முழுக்க ஆங்காங்கே விட்டு விட்டு மழை பெய்தது. அதேபோல் டெல்டா மாவட்டங்களில் இரவு முழுக்க மழை பெய்தது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications