இந்த பெல்ட் மொத்தமும் "ஹாட்ஸ்பாட்".. கன மழை பெய்ய போகிறது.. தமிழ்நாடு வெதர்மேன் அப்டேட்!
சென்னை: இன்றைய தமிழ்நாடு வானிலை குறித்து வெதர்மேன் பிரதீப் ஜான் முக்கிய அப்டேட் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
Recommended Video
தமிழ்நாட்டில் குளிர்காலம் என்றால் மழைக்காலத்திற்கு இணையாக கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்து வருகிறது. தமிழ்நாட்டில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் மொத்தம் 12 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், புதுச்சேரி, கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், காரைக்கால், நாகை ஆகிய மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஏன்
கடலுக்கு மேல் இல்லாமல் தரைக்கு மேலே வளிமண்டல மேலடுக்கு சுழற்சி இருக்கிறது. இதனால் அதிக அளவில் மழை மேகங்கள் கடலோர மாவட்டங்களுக்கு அருகே இருக்கிறது. இதுதான் தமிழ்நாட்டில் இரண்டு நாட்களாக பெய்யும் கனமழைக்கு காரணம் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான்
இந்த நிலையில் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் இன்றைய தமிழ்நாடு வானிலை குறித்து அப்டேட் வெளியிட்டு இருக்கிறார். அதன்படி, டெல்டாவில் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களிலும் இன்று கனமழை பெய்யும். அரியலூர், கடலூர், பெரம்பலூரில் இன்று அவர்களுக்கான மழை பெய்யும்.

தமிழ்நாடு வானிலை
மேலும் ஒரு நாள் மழை கண்டிப்பாக பெய்யும். நாளையில் இருந்து மழை குறையும். இன்று கடலூர் முதல் டெல்டா பெல்ட் வரை ஹாட் ஸ்பாட்டாக இருக்கும் என்று பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். சென்னையில் மழை பிரேக் எடுத்து ஆங்காங்கே பெய்யும். ஆனால் அச்சுறுத்தும் வகையில் எதுவும் பெய்யாது என்று குறிப்பிட்டுள்ளார்.

சென்னை மழை
நேற்று ஒன்இந்தியா தமிழுக்கு தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் அளித்த சிறப்ப பேட்டியில், இன்று (சனிக்கிழமை) மழை பெய்யும். ஆனால் நேற்றுமுதல் நாள் பெய்தது போல சென்னையில் தீவிர கனமழை பெய்யும் என்று சொல்ல முடியாது. மழைக்காலம் போல சாதாரண கனமழையே இன்று பெய்யும் என்று அவர் குறிப்பிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications