தீவிர கனமழை பெய்யும்.. தமிழ்நாட்டிற்கு இன்றும், நாளையும் "ரெட் அலர்ட்".. வானிலை மையம் வார்னிங்!
சென்னை: தமிழ்நாட்டிற்கு இன்று ரெட் அலர்ட் விடுத்து இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் தீவிர கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் மீண்டும் மழை தீவிரம் அடைந்துள்ளது. தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்து வருகிறது.
கடந்த இரண்டு நாட்களாக தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் மழை பிச்சு எடுத்தது. கடந்த சில நாட்களாக கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் மழை பெய்தது.
மதுரையில் பல இடங்களில் சாலைகளில் வெள்ளம் ஏற்பட்டது. சென்னையில் தற்போது பல இடங்களில் மழை பெய்து வருகிறது.

சென்னை
சென்னையில் அதிகாலையில் இருந்து அரும்பாக்கம், கோயம்பேடு, காசிமேடு , திருவொற்றியூர் , எண்ணூர், தேனாம்பேட்டை, அண்ணா சாலை, மெரினா கடற்கரை, சைதாப்பேட்டை, நுங்கம்பாக்கம், ராயப்பேட்டை, கிண்டி, வடபழனி ஆகிய பகுதிகளில் மழை பெய்து வருகிறது. தேபோல் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, கோவை, திண்டுக்கல் மதுரை, விருதுநகர், போன்ற மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. தூத்துக்குடி, நாமக்கல், சேலம், ஈரோடு, சிவகங்கை, திருச்சி, கரூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூரில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்து வருகிறது.

ரெட் அலர்ட்
இந்த நிலையில் தமிழ்நாட்டிற்கு இன்று ரெட் அலர்ட் விடுத்து இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் தீவிர கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. மொத்தமாக தமிழ்நாடு முழுமைக்கும் இந்த அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கேரளா, புதுச்சேரி, கர்நாடகாவிற்கும் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நாளை அலர்ட்
அதேபோல் தமிழ்நாட்டிற்கு நாளையும் ரெட் அலர்ட் விடுக்கப்படுவதாக இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது. வெள்ளி, சனி, ஞாயிறு மூன்று நாட்களுக்கு மஞ்சள் அலர்ட் விடுத்து இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது. இன்றும் நாளையும் மிக தீவிர கனமழை தமிழ்நாட்டில் பெய்யும். கடலோர மாவட்டங்களில் மழை தீவிரமாக இருக்கும். கடலோர மாவட்டங்களில் காற்று வேகமாக வீசும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

மஞ்சள் அலர்ட்
உத்தரகாண்ட், கிழக்கு உத்தரபிரதேசம், மேற்கு வங்காளம், சிக்கிம், அந்தமான் & நிக்கோபார் தீவுகள், அருணாச்சல பிரதேசம், அசாம் , மேகாலயா, நாகாலாந்து, மணிப்பூர், மிசோரம் , திரிபுரா, தெலுங்கானா, ராயலசீமா, வடக்கு கர்நாடகா மற்றும் லட்சத்தீவுகள் ஆகிய பகுதிகளில் கனமழை பெய்யும். இந்த பகுதிகளுக்கு கனமழைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இங்கு காற்று வேகமாக வீசும். இதனால் மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
Bakrid: பக்ரீத், வார இறுதிக்கு சொந்த ஊர் போறீங்களா.. போக்குவரத்துக் கழகத்தின் சூப்பர் அறிவிப்பு -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்?












Click it and Unblock the Notifications