சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இன்னும் 2 நாள்தான் இருக்கு.. 100 வருடத்தில் இல்லாத ரெக்கார்ட் படைக்கும் சென்னை.. ப்பா இவ்வளவு மழையா!

Google Oneindia Tamil News

சென்னை: சென்னை கடந்த 100 வருடங்களில் இல்லாத மிகப்பெரிய சாதனை ஒன்றை நிகழ்த்த போகிறது. சென்னையில் இன்னும் 2 நாட்களுக்கு மிதமானது முதல் கனமானது வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் புதிய மழை ரெக்கார்ட்டை அம்மாவட்டம் படைக்க உள்ளது.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்த்ததை விட மிக அதிகமாக பெய்து வருகிறது. இதுவரை வடகிழக்கு பருவமழையில் இந்த வருடம் புயல் எதுவும் தாக்கவில்லை என்றாலும் கூட இரண்டு தாழ்வு பகுதிகள் தாக்கி உள்ளன. அதில் ஒன்று தாழ்வு மண்டலமாக உருப்பெற்று தாக்கியது.

தமிழகத்தில் இன்றும் 12 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்- அடுத்த 3 நாட்களுக்கு கனமழை தொடரும்! தமிழகத்தில் இன்றும் 12 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்- அடுத்த 3 நாட்களுக்கு கனமழை தொடரும்!

அதன்பின் தற்போது வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்து வருகிறது. கடந்த 4 நாட்களாக தமிழ்நாட்டில் வங்கக்கடலை ஒட்டிய பகுதிகள் முழுக்க கனமழை பெய்து வருகிறது.

சென்னை

சென்னை

சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக மிக தீவிரமாக கனமழை பெய்து வருகிறது. வங்கக்கடலை ஒட்டி இருக்கும் கடலோர மாவட்டங்கள் முழுக்க கனமழை பெய்து வருகிறது. நேற்று அதிகாலை சென்னையில் தீவிரம் எடுத்த மழை இதுவரை விடவில்லை. இந்த நிலையில் மழை அளவை பொறுத்த வரை சென்னை கடந்த 100 வருடங்களில் இல்லாத மிகப்பெரிய சாதனை ஒன்றை நிகழ்த்த போகிறது.

சாதனை

சாதனை

அதன்படி கடந்த 100 வருடங்களில் இல்லாத அளவிற்கு மிக அதிக அளவு மழையை இந்த நவம்பரில் சென்னை ரெக்கார்ட் செய்ய உள்ளது. 1918ல் சென்னையில் 108.8 செமீ மழை பெய்தது. அதன்பின் அதே அளவு மழை சென்னையில் நவம்பரில் வடகிழக்கு பருவமழையின் போது பெய்யவே இல்லை. 2015ல் கிட்டத்தட்ட இதே அளவு மழை பெய்து சென்னையில் வெள்ளம் ஏற்பட்டது.

2015 ரெக்கார்ட்

2015 ரெக்கார்ட்

2015 சென்னையில் 105 செமீ மழை பெய்தது. இந்த நிலையில் தற்போது வரை சென்னையில் 100 செமீ வரை இந்த மாதம் பெய்துள்ளது. அதாவது நவம்பர் 1 முதல் இன்று காலை 7 மணி வரை 100 செமீ மழை பெய்துள்ளது. இந்த மாதம் முடிய இன்றோடு சேர்த்து 3 நாட்கள் உள்ளன. இதனால் கண்டிப்பாக 2015 ரெக்கார்டை சென்னை முறியடிக்கும்.

 100 வருடம்

100 வருடம்

இதனால் 100 வருடத்தில் சென்னையில் நவம்பரில் பெய்த மிக அதிக கனமழையாக இந்த வருட நவம்பர் மழை இருக்க போகிறது. நேற்று மட்டும் சென்னையில் 10 செமீ மழை பெய்துள்ளது. இதனால் 1918ல் சென்னையில் பதிவான 108.8 செமீ மழை ரெக்கார்டையும் இந்த வருட நவம்பர் மாதம் பிரேக் செய்யும் வாய்ப்புகள் உள்ளன. நேற்று நுங்கம்பாக்கத்தில் 36.5 மிமீ மழை பெய்தது.

Recommended Video

    School Leave | Tamilnadu Rain Update | Tamilnadu Weatherman | Chennai Rain | Oneindia Tamil
    மீனம்பாக்கம்

    மீனம்பாக்கம்

    அதேபோல் மீனம்பாக்கத்தில் 12 செமீ மழை பெய்தது. மகாபலிபுரத்தில் 18 செமீ மழை பெய்தது. கடலூரில் 15 செமீ மழை பெய்தது. அம்பத்தூரில் 12 செமீ மழை பெய்தது. கிண்டியில் 10 செமீ மழை பெய்தது. வடகிழக்கு பருவமழையின் போது தமிழ்நாட்டில் சராசரியாக 342.4 மிமீ மழை பெய்ய வேண்டும். ஆனால் ஏற்கனவே அந்த சராசரி அளவை தமிழ்நாடு கடந்துவிட்டது. தமிழ்நாட்டில் தற்போது வரை கிட்டத்தட்ட 600 மிமீ மழை பெய்துள்ளது.

    பெரிய அதிசயம்

    பெரிய அதிசயம்

    கடந்த 1950ல் இருந்து 70 வருடங்களில் வெறும் 10 சீசனில் மட்டுமேதான் இந்த அளவிற்கு மழை பெய்துள்ளது. இதற்கு முன் 10 சீசனில் மட்டுமே நடந்த அதிசயம் தமிழ்நாட்டில் இந்த முறை மீண்டும் நடக்கிறது. தமிழ்நாட்டில் இன்னும் 40- 50 மிமீ மழை பெய்தால் 2015ல் பெய்த மழையை தாண்டிவிடும். அதேபோல் இன்னும் 170- 160 மிமீ மழை பெய்தால் 2005ல் பெய்த உச்சபட்ச ரெக்கார்டான 783 மிமீ சென்ற சாதனையை முறையடித்துவிடும்.

    English summary
    Weather Report: Chennai to create to new record by getting highest November rains in last 100 years.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X