மேற்கு வங்கம், மணிப்பூர் மாநில ஆளுநர் இல.கணேசன் மருத்துவமனையில் அனுமதி! என்ன காரணம்?
சென்னை : சென்னை வந்த மணிப்பூர் மாற்றும் மேற்கு வங்க மாநிலங்களின் ஆளுநர் இல. கணேசனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து, அவர் சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சிக்கிம் மாநில ஆளுநர் கங்காதர் பிரசாத் மணிப்பூர் மாநில ஆளுநராக கூடுதல் பொறுப்பு வகித்து வந்த நிலையில் கடந்த 2021ஆம் ஆண்டு, மணிப்பூர் மாநிலத்தின் புதிய ஆளுநராக இல.கணேசன் நியமனம் செய்யப்பட்டார்.
பாஜக மூத்த தலைவரான இல கணேசன், மாநிலங்களவை உறுப்பினராகவும், தமிழக பாஜக தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.

இல.கணேசன்
மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காலம் முடியும் முன்னரே மணிப்பூர் ஆளுநராக நியமிக்கப்பட்டார். பின்னர் இந்நிலையில் அவர் மேற்கு வங்க ஆளுநர் பொறுப்பையும் கூடுதலாக பெற்றார். குடியரசு துணை தலைவர் பதவியில் போட்டியிடுவதற்காக மேற்குவங்காள ஆளுநர் பதவியை ஜெகதீப் தன்கர் இன்றுகடந்த ஜூலை மாதம் ராஜினாமா கடிதத்தை அளித்தார்.

இரு மாநிலங்கள்
அதனை அப்போதைய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஏற்றுக்கொண்டார். இதனையடுத்து மணிப்பூர் ஆளுநரான இல.கணேசன் மேற்கு வங்காள கவர்னராக கூடுதல் பொறுப்பு வகிப்பார் என ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்தது. இதனையடுத்து மணிப்பூர், மேற்கு வங்கம் ஆகிய இரு மாநிலங்களின் ஆளுநர் பொறுப்பையும் இல கணேசன் கவனித்து வந்தார்.

உடல்நலக் குறைவு
இடையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் துரந்தோ கோப்பை கால்பந்து தொடரில் வெற்றி பெற்ற அணியில் கேப்டனை போட்டோவுக்கு போஸ் கொடுப்பதற்காக தள்ள்விட்டதாக இல.கணேசன் சர்ச்சையில் சிக்கிய நிலையில் இந்தியா முழுவதும் அறியப்பட்ட நபராக மாறினார். இந்நிலையில் சென்னை வந்த இல. கணேசனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

மருத்துவமனையில் அனுமதி
தொடர்ந்து, அவர் சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலையில் சென்னை தியாகராய நகரில் உள்ள அவரது இல்லத்தில் இல.கணேசன் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது எனவும், இதையடுத்து சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அந்த மருத்துவமனையை சேர்ந்த இருதய சிகிச்சை மருத்துவர் குழுவினர் இல.கணேசனுக்கு சிகிச்சை அளித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications