டெல்லியின் '2 மேஜர் அசைன்மென்ட்'.. ஆளுநர் ரவி படு வேகம்! மாளிகையில் நடந்த ரகசிய மீட்டிங்.. பின்னணி?
சென்னை : தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு இரண்டு முக்கியமான அசைன்மெண்ட்டுகள் டெல்லி மேலிடத்தால் தரப்பட்டிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
இந்த இரண்டு டாஸ்க்குகளையும் ஏற்றுக்கொண்டுள்ள ஆர்.என்.ரவி, ஒரே நேரத்தில் இரண்டு ஆபரேஷன்களையும் தொடங்கி இருக்கிறார் என்கிறார்கள்.
முதல் ஆபரேஷனை ஏற்கனவே தொடங்கி, தமிழில் பேச பயிற்சி பெற்று வரும் ஆளுநர் ரவி, கூடிய விரைவிலேயே, மேடையில் சரவெடியாக தமிழில் பேசி ஆச்சர்யப்படுத்துவார் என்கிறார்கள்.
இரண்டாவது அசைன்மெண்டிற்காக, ரஜினியுடன் மிகவும் நெருக்கமான அரசியல் புள்ளி ஒருவரின் துணையை ஆளுநர் ரவி நாடியுள்ளதாகத் தகவல்கள் கசிந்துள்ளன.
அன்று எச்.ராஜா.. இன்று ரஜினிகாந்த் - யாருங்க ஆளுநர்? நல்லா கொளுத்திப் போடுறாங்க

தென்னிதிந்திய திட்டம்
இரண்டாவது முறையாக மத்தியில் ஆட்சியில் இருந்தாலும், தென் மாநிலங்களைப் பொறுத்தவரை கர்நாடகாவில் மட்டுமே பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலங்களில் பாஜகவுக்கு மிகமிகச் சொற்பமான எம்.பிக்கள் மட்டுமே உள்ளனர். 2024ல் இந்தக் கணக்கை உயர்த்தியே ஆக வேண்டும் எனக் கணக்குப் போட்டு வேலை செய்து வருகிறது பாஜக. இதன் காரணமாக, பிரதமர் மோடி, உள்துறை அமித்ஷா ஆகிய தலைவர்கள் அவ்வப்போது தென் மாநிலங்களுக்கு விசிட் அடித்து வருகின்றனர்.

ஆளுநர் பேச்சுக்கு பின்னணி
முக்கியமாக, மத்திய அரசின் திட்டங்கள் பற்றி தென் மாநிலங்களில் மக்களிடையே சென்று சேர்க்கப்படவில்லை என டெல்லிக்கு ரிப்போர்ட் கிடைத்திருக்கிறது. அதனைச் சரிசெய்யும் வகையில், பாஜக அரசின் திட்டங்கள் குறித்து தொடர்ந்து பேச வேண்டும், கூட்டங்களை நடத்த வேண்டும் என தென் மாநில தலைவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாம். பாஜக தலைவர்களுக்கு மட்டுமல்லாது ஆளுநர்களும் இது பற்றிய உத்தரவு சென்றுள்ளது என்கிறார்கள். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தொடர்ச்சியாக பாஜக திட்டங்கள் குறித்துப் பேசி வருவதற்கும் பின்னணி இதுதான் என்கிறார்கள்.

கண்டுகொள்வதே இல்லை
மாநிலத்தின் ஆளுநர் என்பவர், அரசியலுக்கு அப்பாற்பட்டவர் என்றாலும், பாஜக ஆட்சியில் ஆளுநர்கள் பலரும் அரசியல் கருத்துகளைப் பேசி வருவதைக் காண்கிறோம். அதிலும் தமிழக ஆளுநர் ரவி, பொறுப்புக்கு வந்தது முதல், பாஜகவின் கருத்துகளையே பிரதிபலித்து வருகிறார் என்று கூறப்படுகிறது. ஆனால், இந்த விமர்சனங்களுக்கெல்லாம் காது கொடுக்காமல், தொடர்ச்சியாக சனாதனம், இந்து தர்மம், மோடி அரசின் திட்டங்கள் என பேசி வருகிறார் ஆளுநர் ரவி. இது நல்ல விளைவுகளை ஏற்படுத்தி வருவதாக டெல்லிக்கும் ரிப்போர்ட் சென்றுள்ளது.

ஆளுநருக்கு கொடுக்கப்பட்ட டாஸ்க்
இந்நிலையில் தான், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழில் பேசி, மக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என டெல்லியில் இருந்து அசைன்மெண்ட் கொடுக்கப்பட்டுள்ளது என்கிறார்கள். அதனை ஆளுநர் ரவியும் சவாலாக ஏற்றுக்கொண்டு உடனடியாக தமிழ் கற்கும் வேலையில் இறங்கிவிட்டாராம். இதற்காக, ஆளுநர் ரவி, தமிழாசிரியர்களை பணிக்கு அமர்த்தி, தமிழ் கற்று வருவதாகக் கூறப்படுகிறது.

டாஸ்க் 1 - தமிழில் பேசவேண்டும்
சமீபத்தில் ஈரோட்டில் நடைபெற்ற தீரன் சின்னமலை நினைவுநாள் விழாவில் பேசிய ஆளுநர் ரவி, தமிழ் மக்களைப் போல தமிழில் பேச வேண்டும் என்பது எனது ஆசை, ஒரு நாள் நிச்சயம் தமிழில் நன்றாகப் பேசுவேன் எனத் தெரிவித்திருந்தார். அப்படி பேசியதும், இந்த கணக்குகளை மனதில் வைத்துத்தானாம். பிரதமர் மோடி தமிழகம் வந்தாள் திருக்குறள் சொல்லி, தமிழ் மக்களை ஈர்க்க முயற்சிப்பது வழக்கம். அந்த அடிப்படையிலேயே ஆளுநர் ரவிக்கு இந்த வேலை கொடுக்கப்பட்டுள்ளதாம். கூடிய சீக்கிரமே, தெள்ளுநடைத் தமிழில் ஆளுநர் ரவி உரையாற்றினால் ஆச்சர்யப்படுவதற்கில்லையாம்.

அசைன்மெண்ட் 2
ஆளுநருக்கு கொடுக்கப்பட்டிருக்கும் இரண்டாவது அசைன்மெண்ட் தமிழகத்தைச் சேர்ந்த உச்ச நடிகரின் வாய்ஸை தங்களுக்காகக் கொடுக்க வைப்பது தானாம். அரசியலே வேண்டாம் என நடிகர் ரஜினிகாந்த் முடிவெடுத்த நிலையிலும், விடாமல் விரட்டும் பாஜக, அவரை தங்களுக்காக 2024 தேர்தலுக்குள் வாய்ஸ் கொடுக்க வைத்தே தீருவது என உறுதியாக இருக்கிறது. பிரதமர் மோடியே மேலோட்டமாக ரஜினியிடம் பேசியும், அவர் பிடி கொடுக்காததால், அந்த அசைன்மெண்ட் ஆளுநருக்கு கொடுக்கப்பட்டுள்ளதாம்.

ரஜினிக்கு நெருக்கம்
சமீபத்தில் கூட, ரஜினிகாந்த் ஆளுநர் மாளிகைக்கே சென்று ஆளுநரைச் சந்தித்துப் பேசியதும், ஆர்.என்.ரவியின் அழைப்பின் பேரில் தானாம். பாஜகவின் விருப்பத்தை ரஜினியிடம் தெரிவித்த ஆளுநர், அவரது கருத்தைக் கேட்டிருக்கிறார். அப்போதும், பெரிதாக ஆர்வம் காட்டாத நிலையில், அடுத்தகட்டமாக இன்னொரு முக்கியமான அரசியல் பிரமுகரை ஆளுநர் மாளிகைக்கே வரவழைத்துப் பேசியிருக்கிறார் ஆளுநர் என்கிறார்கள். அவர் ரஜினிக்கு மிகவும் நெருங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அப்டேட் வரணும்
அவருடன் ஆளுநர் நடத்திய ரகசிய மீட்டிங்கின்போது, பாஜக தலைமை கொடுக்கும் மிகப்பெரிய கௌரவத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும் என ரஜினியிடம் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்துமாறு ஆளுநர் தெரிவித்துள்ளாராம். அவ்வப்போது, தொடர்ந்து அப்டேட்டுகளை எனக்கு தெரியப்படுத்துங்கள் என்றும் ஆளுநர் அந்த பிரமுகரிடம் கூறியிருக்கிறாராம். அரசியலை விட்டே ஒதுங்குவதாகக் கூறிய அந்தப் புள்ளி, மீண்டும் அரசியலுக்கு வந்துள்ள நிலையில், முதல் பெரிய அசைன்மெண்ட்டே இதுதான் என்கிறார்கள்.