தமிழகத்தில் 9 முதல் 12ம் வகுப்பு வரை திறக்கப்பட்டன பள்ளிகள்.. உற்சாகத்தோடு வந்த மாணவ, மாணவிகள்
சென்னை: தமிழகத்தில் செப்டம்பர் 1ம் தேதியான இன்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. 9 முதல் 12 ஆம் வகுப்புகள் செயல்படுகிறது. எனவே போதிய ஏற்பாடுகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
Recommended Video
2020ம் ஆண்டு மார்ச் மாதம் கொரோனா பரவல் அதிகரித்ததால் அதன்பிறகு பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன.
இடையில் அவ்வப்போது ஒரு சில வகுப்பு மாணவர்களுக்கும், செமஸ்டர் மாணவர்களுக்கும் வகுப்புகள் நடத்தப்பட்டாலும் நோய்த்தொற்றின் தாக்கம் தொடர்ந்து இருந்ததால் மீண்டும் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டன. பிறகு தற்போதுதான் 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் திறக்கப்படுகின்றன.
சுமார் 4 மாதங்கள் பிறகு 9ம் வகுப்புக்கு மேற்பட்ட வகுப்புகளுக்கு முழுமையாக பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன.

பாதுகாப்பு நடவடிக்கை
இதன் காரணமாக கணிசமான மாணவ, மாணவிகள் உற்சாகமாக காணப்படுகிறார்கள். வீட்டிலேயே இருந்து பாடம் படித்து நண்பர்களுடன் சேர்ந்து படிக்க முடியாத நிலை மாறப்போவதாக அவர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர். மாணாக்கர்களுக்கு மாஸ்க் கட்டாயம். மாஸ்க் சரியில்லாவிட்டால் பள்ளிகளிலேயே வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாணாக்கர்களுக்கு காய்ச்சல் இருந்தால் அனுமதிக்கப்படுவதில்லை. நுழைவாயிலில் சானிடைசர்கள் கைகளில் தெளிக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டதை பார்க்க முடிந்தது. மாணவ, மாணவிகள் மிகவும் உற்சாகமாக காணப்படுகிறார்கள். இந்த நிலையில் பள்ளிகள் திறப்புக்கு முன்பாக உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. பள்ளிகள் திறப்புக்கான, வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. இதன்படி, 9 முதல் 12ம் வகுப்பு வரை 50 சதவிகித மாணவர்களுடன் பள்ளிகள் நடைபெறும். பள்ளிக்கூடங்கள் ஷிப்டு முறையில் செயல்பட வேண்டும். வகுப்பறையில் பாதி அளவு மாணவர்கள் மட்டுமே இருக்க வேண்டும்.

விதிமுறைகள்
ஒவ்வொரு வகுப்பிலும் தலா 20 மாணவர்கள் மட்டுமே அமர வைக்கப்பட வேண்டும். பள்ளிகளில் 9 முதல் 12ம் வகுப்புகள் வாரத்தில் 6 நாட்களும் செயல்படும். பள்ளிக்கு வர விருப்பமில்லா மாணவர்கள் வீட்டிலிருந்தபடியே ஆன்லைன் வழியிலும் பாடங்களை கற்கலாம்.
பள்ளி நுழைவு வாயில் மற்றும் வெளியே செல்வதற்கு தனித்தனி வாயில்கள் பின்பற்றப்பட வேண்டும். மாணவர்கள் ஒருவருக்கொருவர் உணவுகளை பகிர்ந்து உண்ண கூடாது. அதேபோல குழுவாக இடைவேளை நேரங்களில் மாணவர்கள் அமரக்கூடாது.

விளையாட்டு நிகழ்ச்சிகள்
பள்ளி வளாகங்களில் விளையாட்டு நிகழ்ச்சிகள் மற்றும் காலை நேர வழிபாட்டு கூட்டங்கள் ஆகியவை நடத்தக்கூடாது.
பள்ளிகள் திறக்கப்படுவதை முன்னிட்டு வளாகங்கள் வகுப்பறைகளில் உள்ள மேசை நாற்காலி மற்றும் பள்ளி வளாகங்கள் முழுவதுமாக கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். அனைத்து ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும்.

முகக் கவசம் கட்டாயம்
ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் மாணவர்கள் உள்ளிட்ட அனைவரும் கட்டாயம் முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும். பள்ளி வளாகங்களில் கைகளை கழுவுவதற்கு உரிய தண்ணீர் வசதி மற்றும் சோப்பு வைத்திருக்க வேண்டும். அதேபோல சுகாதாரத்துறை சார்பில் அனைத்து பள்ளிகளுக்கும் கிருமிநாசினி வழங்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
அதிமுகவை பாஜக விலைக்கு வாங்கிவிட்டது.. திருவாரூரில் தேர்தல் பரப்புரையை தொடங்கிய ஸ்டாலின்! ‘அட்டாக்' -
கோவை தெற்கு மட்டுமல்ல 10 தொகுதிகளிலும் இறங்கியடிக்க போகும் செந்தில் பாலாஜி.. அதிமுக பாஜக ஷாக் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு? -
திடீரென வீடியோ வெளியிட்டு மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி உருக்கம்! பிடிஆர் இருக்காரே!












Click it and Unblock the Notifications