Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

துணைவேந்தர் நியமனம்.. ஆளுநர் செயல்பாடு மக்களாட்சிக்கு எதிரானது.. சட்டசபையில் ஸ்டாலின் ஆவேசம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: துணை வேந்தர்களை மாநில அரசே நியமனம் செய்யும் மசோதா இன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது ஏன் என்று முதல்வர் ஸ்டாலின் அவையில் விளக்கம் அளித்தார்.

Recommended Video

    பல்கலை., துணை வேந்தர்களை மாநில அரசே நியமனம் செய்யும் - MK Stalin

    தமிழ்நாடு அரசே தமிழ்நாட்டு பல்கலைக் கழகங்களின் துணை வேந்தர்களை நியமிக்க வகை செய்யும் சட்ட மசோதா தமிழ்நாடு சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா இன்று ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

    ஆளுநர்தான் துணை வேந்தர்களை நியமனம் செய்து வந்த நிலையில்தான் தற்போது இந்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. முன்னதாக இம்மசோதாவுக்கு சட்டசபையில் அதிமுக, பாஜக எம்.எல்.ஏக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    முதல்வர் ஸ்டாலின்

    முதல்வர் ஸ்டாலின்

    இந்த நிலையில் மசோதா தாக்கல் செய்யப்பட்ட பின் அவையில் பேசிய முதல்வர் ஸ்டாலின், தமிழ்நாடு உயர்கல்வித்துறையின் கீழ் 13 பல்கலைக்கழகங்கள் செயல்படுகின்றன. இதன் வேந்தராக ஆளுநர் செயல்பட்டுக்கொண்டு இருக்கிறார். இணை வேந்தராக உயர்கல்வித்துறை அமைச்சர் செயல்படுகிறார். ஆனால் பல்கலைக்கழக துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் அரசுக்கு இல்லை. உயர்கல்வியில் இது பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

    மாநில அரசு

    மாநில அரசு

    மாநில அரசை கலந்தாலோசித்து துணை வேந்தர்களை நியமிக்கும் வழக்கம் இருந்தது. ஆனால் தற்போது மாநில அரசை கலந்தாலோசிக்காமல் நியமனம் நடக்கிறது. ஆளுநர் தனக்கு மட்டுமே உரிமை இருப்பது போல் செயல்படுகிறார். ஆளுநர் எதோ இது தன்னுடைய அதிகாரம் என்பது போல செயல்படுகிறார். மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசு ஒன்று, தனக்கு கீழ் செயல்படும் பல்கலைக்கழகங்களுக்கு துணை வேந்தரை நியமிக்க முடியவில்லை என்பது மிகவும் தவறானது.

    குளறுபடி

    குளறுபடி

    இது பல்கலைகழக நிர்வாகத்தில் நிறைய குளறுபடிகளை ஏற்படுத்துகிறது. கூட்டாச்சி தத்துவத்திற்கே இது எதிரானது. 2007ல் நியமிக்கப்பட்ட உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி பூஞ்சி தலைமையிலான ஆணையம், துணை வேந்தர் நியமன அதிகாரத்தை ஆளுநருக்கு அளிக்க கூடாது என்று பரிந்துரை செய்துள்ளது. ஆளுநரிடம் இந்த அதிகாரம் இருந்தால் அது சர்ச்சைக்கு வழி வகுக்கும்.

    அதிகார மோதல்

    அதிகார மோதல்

    இது அதிகார மோதலுக்கு வித்திடும் என்று அதில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இது பற்றி ஒன்றிய அரசு மாநில அரசிடம் கருத்து கேட்டது. தமிழ்நாடு உள்ளிட்ட 19 மாநிலங்கள் இந்த பரிந்துரையை ஏற்றுக்கொண்டது. நான் முதல்வர் ஆன பின் மீண்டும் இதில் என்னிடம் கருத்து கேட்கப்பட்டது. அதில் துணை வேந்தர் நியமன அதிகாரத்தை ஆளுநருக்கு அளிக்க கூடாது என்று நான் கருத்து கூறினேன்.

    இதே நிலைதான் உள்ளது

    இதே நிலைதான் உள்ளது

    பல மாநிலங்களில் இதே நிலைதான் உள்ளது. பிரதமர் மோடியின் சொந்த குஜராத் மாநிலத்தில் தேடுதல் குழு பரிந்துரைக்கு மூவரில் ஒருவரை மாநில அரசே நியமிக்கிறது. ஆந்திர பிரதேசத்திலும் அரசின் பரிந்துரை அடிப்படையில்தான் நியமனம் நடக்கிறது. பிரதமரின் சொந்த மாநிலமான குஜராத்தில் இருப்பது போல தமிழ்நாட்டிலும் சட்ட முன்வடிவு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    குஜராத்

    குஜராத்

    குஜராத்தில் மாநில அரசுதான் துணை வேந்தர்களை நியமிக்கிறது. இப்போது சட்டசபை கோட்டத்தில் கலந்து கொள்ள முடியாமல் வெளியேறி இருக்கும் பாஜக எம்எல்ஏக்களை கேட்டுக்கொள்கிறேன். இது பிரதமர் மோடியின் மாநிலத்தில் உள்ள சட்டம்தான். 2017ல் அதிமுக ஆட்சியிலும் இதே கருத்து தெரிவிக்கப்பட்டது. நாங்கள் சொன்ன கருத்தை அப்போது அதிமுகவும் சொன்னது. இதனால் அதிமுகவிற்கு இதில் நெருடல் இருக்கும் என்று நான் நினைக்கவில்லை, என்று முதல்வர் ஸ்டாலின் தனது உரையில் குறிப்பிட்டார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+