சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சா"தீ".. தமிழர்களுக்கு? தெலுங்கர்களுக்கு?.. "அறியாதவன்" ஆகிறார் ராஜ கண்ணப்பன்.. பாய்ந்த பா.ரஞ்சித்

ராஜ கண்ணப்பனை டைரக்டர் பா.ரஞ்சித் விமர்சித்து ட்வீட் பதிவிட்டுள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: "சாதியை அறிந்தவர், எதிர்ப்பதின் மூலமாக சமூக நீதி அமைக்க முயற்சிக்கிறார்... அறியாதவன் திரு. ராஜ கண்ணப்பன் ஆகிறார்" என்று இயக்குனர் பா.ரஞ்சித் போட்ட பதிவு ஒன்று பெரும் வைரலாகி வருகிறது.

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரன், தன்னை அமைச்சர் ராஜ கண்ணப்பன் சாதியை சொல்லி திட்டியதாக பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட வீடியோவும் வைரலானது... இந்த வீடியோவை முன்னிறுத்தி, ராஜகண்ணப்பனை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டு முதலில் குரல் கொடுத்தது மக்கள் நீதி மய்யம்தான்..!

இலாகா மாத்திட்டா புனிதராகிடுவாரா ராஜ கண்ணப்பன்? இதுதான் திராவிட மாடலா?.. டிடிவி தினகரன் நறுக்! இலாகா மாத்திட்டா புனிதராகிடுவாரா ராஜ கண்ணப்பன்? இதுதான் திராவிட மாடலா?.. டிடிவி தினகரன் நறுக்!

 இலாகா மாற்றம்

இலாகா மாற்றம்

சர்ச்சை வீடியோ வெளியான அடுத்த சில மணி நேரங்களிலேயே, போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக திடீரென மாற்றப்பட்டார்... அவருக்கு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை இலாகா ஒதுக்கப்பட்டது... பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த எஸ்.எஸ்.சிவசங்கரிடம் போக்குவரத்துத் துறையும் உடனடியாக ஒதுக்கப்பட்டது...

 சாதீய சர்ச்சை

சாதீய சர்ச்சை

ராஜ கண்ணப்பனின் இலாகா நேற்றைய தினம் மாறியதாக இருந்தாலும், அதற்கு சாதிய சர்ச்சை காரணமாக இருந்தாலும், முடிவு எப்போதோ எதிர்பார்க்கப்பட்ட ஒன்று என்றே கூறப்படுகிறது.. போக்குவரத்துத் துறை பறிக்கப்பட்டது குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகள் ராஜகண்ணப்பன் மீது உள்ளன.. ராஜகண்ணப்பன் மீது கட்சி ரீதியாகவும் சரி, துறை ரீதியாகவும் சரி, தொடர் குற்றச்சாட்டுகள் நித்தமும் எழுந்து கொண்டே இருந்தது.

 பாரத் பந்த்

பாரத் பந்த்

பாரத் பந்த் அன்று திமுகவின் தொமுச தொழிற்சங்கம் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டதும், சென்னையில் உள்ள போக்குவரத்து ஆணையர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ரூபாய் 35 லட்சம் வரை பறிமுதல் செய்ததும் ராஜகண்ணப்பனுக்கு உச்சக்கட்ட எதிர்ப்பை வலுவாக பெற்று தந்துவிட்டது.. இதுபோன்ற விவகாரங்களிலேயே அவர் மீது துறைவாரியான நடவடிக்கை பாயும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில்தான், அரசு அதிகாரி ஒருவரை சாதி ரீதியாக திட்டிய விவகாரத்தில் அதிரடியை திமுக அரசு காட்ட வேண்டி இருந்தது.

தெலுங்கர்களுக்கு

தெலுங்கர்களுக்கு

இந்த விவகாரம் தொடர்பாக இயக்குனர் பா.ரஞ்சித் ஒரு ட்வீட் பதிவிட்டுள்ளார்.. அதில், ராஜகண்ணப்பனுக்கு தன்னுடைய கடுமையான கண்டனத்தையும் பதிவு செய்துள்ளர்.. "சாதி வெறி இந்தியர்களின் இயல்பு மனநிலை! தமிழர்களுக்கு? தெலுங்கர்களுக்கு? அட எந்த மொழி பேசுபவர்களுக்கும் பிறப்பின் வழி கிடைத்த மூலதனம் (அயோக்கிய தனம்) ! சாதியை அறிந்தவர், எதிர்ப்பதின் மூலமாக சமூக நீதி அமைக்க முயற்சிக்கிறார்! அறியாதவன் திரு. ராஜ கண்ணப்பன் ஆகிறார்!" என்று பதிவிட்டுள்ளார்.

English summary
What did director pa Ranjith slams tamilnadu minister raja kannappan
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X