72 - 56.. அதிரடியில் இறங்கிய எடப்பாடி.. இனி அங்கதான்.. இடியாப்பச் சிக்கலில் ஓபிஎஸ்.. என்ன திட்டம்?
சென்னை : 72 நாட்களுக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமி, அதிமுக தலைமைக் கழகத்திற்கு நாளை செல்ல இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ள நிலையில், ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசித்து வருகிறார்.
அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த வன்முறைச் சம்பவத்திற்குப் பிறகு அலுவலக சாவியைப் பெற்ற எடப்பாடி பழனிசாமி இன்னும் ஒரு முறை கூட அங்கு செல்லவில்லை.
ஒரு மாதத்திற்கு தொண்டர்களை அனுமதிக்கக்கூடாது என்ற நீதிமன்ற உத்தரவின் காரணமாக, தானும் அங்கு செல்லாமல் இருந்து வந்தார் ஈபிஎஸ். அதன்பிறகும், ஈபிஎஸ் அங்கு செல்லவில்லை.
இந்நிலையில், அதிமுக பொதுக்குழு வழக்கிலும் தீர்ப்பு சாதகமாக வந்துள்ள நிலையில், 72 நாட்களுக்குப் பிறகு நாளை தலைமைக் கழகம் செல்கிறார் எடப்பாடி பழனிசாமி.

தலைமைக் கழக மோதல்
அதிமுகவில் எழுந்த ஒற்றை தலைமை விவகாரத்தைத் தொடர்ந்து கடந்த ஜூலை 11ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் எடப்பாடி பழனிசாமி தரப்பால் சென்னை வானகரத்தில் நடத்தப்பட்ட போது ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்குச் சென்றனர். அப்போது, ஓபிஎஸ், ஈபிஎஸ் தரப்பினர் இடையே மோதல் வெடித்தது. இதில் தலைமைக் கழகமே ரத்தக்களறியானது. இதனை தொடர்ந்து வட்டாட்சியர் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல் வைத்தார்.

அலுவலக சாவி
இது தொடர்பாக ஈபிஎஸ், ஓபிஎஸ் இருவரும் தனித்தனியாக தொடர்ந்த வழக்கில் அதிமுக தலைமை கழகத்தின் சாவியை எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் அதிமுக தொண்டர்களை ஒரு மாத காலத்திற்கு அதிமுக தலைமை கழக அலுவலகத்திற்குள் அனுமதிக்கக் கூடாது எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக ஓபிஎஸ் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது.

யாருமே போகவில்லை
ஐகோர்ட் விதித்த 30 நாட்கள் தடை முடிவடைந்த நிலையில், அதிமுக தலைமை அலுவலகத்தின் சாவி எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியிடம் இருப்பதால் அவர் கட்சி தொண்டர்களுடன் தலைமை அலுவலத்திற்கு செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதிமுக தொண்டர்கள் யாரும் அதிமுக தலைமை அலுவலகத்துக்கு செல்லவில்லை. அதிமுக தலைமை அலுவலக வன்முறை தொடர்பாக போலீசாரின் விசாரணை முடியும் வரை தொண்டர்கள் செல்ல வேண்டாம் என்று ஈபிஎஸ் அறிவுறுத்தியதாகக் கூறப்பட்டது.

சிக்கிய ஓபிஎஸ்
இதற்கிடையே, அதிமுக தலைமை அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்து ஆவணங்களை எடுத்துச் சென்றதாக ஈபிஎஸ் ஆதரவாளர் சி.வி.சண்முகத்தால் அளிக்கப்பட்ட புகாரில் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட ஏழு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களை சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பி விசாரணைக்கு ஆஜராக அறிவுறுத்தக்கூடும் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று சிபிசிஐடி போலீசார், அதிமுக தலைமை அலுவலகத்திற்குச் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

நாளை போகிறார் ஈபிஎஸ்
இதற்கிடையே, அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கிலும் எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமான முடிவு கிடைத்தது. அதைத் தொடர்ந்தே நாளை அதிமுக தலைமை அலுவலத்திற்கு எடப்பாடி செல்ல இருக்கிறார். அதிமுக தலைமைக் கழகம் செல்லும் ஈபிஎஸ், அங்கிருக்கும் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த இருக்கிறார். இதற்காக கட்சி நிர்வாகிகளும் அழைக்கப்பட்டுள்ளனர்.

72 நாட்களுக்குப் பிறகு
எடப்பாடி பழனிசாமி கடைசியாக, ஜூன் மாதம் நடந்த பொதுக்குழுவிற்குப் பிறகு 27ஆம் தேதி அதிமுக தலைமை அலுவலகத்திற்குச் சென்று தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். அதன்பிறகு, அவரது ஆதரவாளர்கள் அங்கு சென்றாலும் கூட எடப்பாடி பழனிசாமி போகவே இல்லை. ஜூலை 11ல் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பிறகு ஈபிஎஸ் அங்கு செல்வதற்குள், அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டது. இதனால் அவர் செல்ல முடியவில்லை. இந்நிலையில், 72 நாட்களுக்குப் பிறகு நாளை தலைமைக் கழகம் செல்கிறார் ஈபிஎஸ்.

ஓபிஎஸ் ஆலோசனை
எடப்பாடி பழனிசாமி அதிமுக தலைமைக் கழகம் செல்ல இருப்பதால், இனி, தனது ஆதரவாளர்களுடன் அங்கு தான் ஆலோசனை நடத்துவார் எனத் தெரிகிறது. இதுநாள்வரை ஈபிஎஸ் தனது கிரீன்வேஸ் சாலை இல்லத்திலேயே ஆதரவாளர்களைச் சந்தித்து வந்தார். அதேநேரம், ஓ.பன்னீர்செல்வம், தனியார் ஹோட்டலிலேயே தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். கடைசியாக ஓபிஎஸ் ஜூலை 11ஆம் தேதி அலுவலகம் சென்றார். அது நடந்து 56 நாட்கள் ஆகின்றன.

இடியாப்ப சிக்கல்
அதிமுக அலுவலக சாவி மேல்முறையீட்டு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இருக்கும் நிலையில், ஓபிஎஸ் மீது, அதிமுக அலுவலகத்தில் கொள்ளை அடித்ததாகவும் வழக்கு இருக்கிறது. பொதுக்குழு வழக்கிலும் உயர் நீதிமன்றம் பாதகமான தீர்ப்பை அளித்ததால், அலுவலகம் தொடர்பாக எந்த முடிவும் எடுக்க முடியாத நிலையில் இருக்கிறார். அடுத்தகட்டமாக என்ன செய்வது என்பது குறித்து தனது ஆதரவாளர்களுடன் ஆலோசித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. என்ன திட்டம் வைத்திருக்கிறது ஓபிஎஸ் தரப்பு என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
-
AMMK: அமமுக போட்டியிடும் 11 தொகுதியின் உத்தேச பட்டியலை கொடுத்த தினகரன்! கோவில்பட்டி எங்கே? -
9 ஆண்டுகள் கழித்து! அதிமுக தலைமை அலுவலகத்தில் நுழைந்த டிடிவி தினகரன்! மாடத்தில் Nostalgic மொமன்ட்ஸ்! -
ADMK: பாஜக 27, பாமக 18, அமமுக 11! அப்போ அதிமுக 172? வெளியான உத்தேச பட்டியல்? -
Annamalai: அதிமுக அலுவலகத்தில் அண்ணாமலையை காணோமே! ஆதரவாளர்கள் அப்செட்! எடப்பாடி கண்டிஷனா? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது?












Click it and Unblock the Notifications