Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அவங்களுக்குத்தான் குறி.. நோட்டமிடும் ஆளுநர் ரவி.. அண்ணாமலையை சந்தித்த பின் நடந்தது என்ன? பின்னணி

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு ஆளுநர் ஆர். என் ரவியை பாஜக தலைவர் அண்ணாமலை நேரில் சந்தித்து பேசிய பின் என்ன நடந்தது? தமிழ்நாடு ஆளுநர் அதன்பின் என்ன செய்தார் என்பது தொடர்பான விவரங்கள் வெளியாகி உள்ளன. தமிழ்நாட்டில் சில அமைச்சர்களை ஆளுநர் கண்காணித்து வருவதாக ஆளுநர் தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பாஜக தலைவர் அண்ணாமலைக்கு, மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும் இடையில் கடுமையான மோதல் நிலவி வருகிறது. கொங்கு மண்டலத்தில் எப்படியாவது கால் பதிக்கலாம் என்று நினைத்த பாஜகவிற்கு மிகப்பெரிய இடையூறாக வந்து இருக்கிறார் செந்தில் பாலாஜி. கோவை, கரூர், சேலம் என்று பல மாவட்டங்களில் தற்போது செந்தில் பாலாஜிதான் கேம் சேஞ்சராக இருக்கிறார்.

இதனால் எப்படியாவது செந்தில் பாலாஜியை வீழ்த்த வேண்டும் என்று பாஜக தரப்பு முயன்று வருகிறதாம். இதற்காக அண்ணாமலை எடுத்து இருக்கும் அஸ்திரம்தான் மின்சாரத்துறை ஒப்பந்த முறைகேடு.

புகார்

புகார்

பி.ஜி.ஆர். எனர்ஜி நிறுவனத்திடம் மின்சாரத்துறையின் ஒப்பந்தம் ஒன்றை கொடுத்ததுதான் இந்த புகாருக்கு காரணம். இந்த நிறுவனத்திடம் , எண்ணூர் அனல் மின் நிலைய திட்ட விரிவாக்க பணிகள் ஒப்படைக்கப்பட்டது. இது திமுகவினருக்கு நெருக்கமான நிறுவனம் என்பதால் இந்த ஒப்பந்தம் கொடுக்கப்பட்டது. இந்த நிறுவனம் 355 கோடி ரூபாய் நஷ்டத்தில் இயங்கி வருகிறது. அவர்களின் வங்கியில் போதிய இருப்பு இல்லை. முறைகேடாக ரூ.4,472 கோடி மதிப்பில் இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறது என்று அண்ணாமலை குற்றஞ்சாட்டி உள்ளார்.

மூன்று விஷயங்கள்

மூன்று விஷயங்கள்

இது தொடர்பாகவே ஆளுநர் ஆர். என் ரவியை அண்ணாமலை நேரில் சந்தித்தும் பேசினார். அண்ணாமலை இந்த சந்திப்பில் இது மட்டுமின்றி வேறு சில விஷயங்கள் பற்றியும் பேசியதாக கூறப்படுகிறது. மொத்தம் மூன்று விஷயங்களை ஆளுநர் ரவியிடம் அண்ணாமலை பேசினாராம்.

1. செந்தில் பாலாஜி மீதான புகார் பற்றியும், தமிழ்நாட்டில் முன்பு நிலவிய மின்சார தடை பற்றியும் பேசி இருக்கிறாராம்.

2. முதல்வர் ஸ்டாலினின் டெல்லி பயணம், துபாய் பயணம், பட்ஜெட்டில் இடம்பெற்று இருந்த சில திட்டங்கள் பற்றியும் பேசி இருக்கிறாராம். சோஷியல் மீடியாவை கண்காணிக்க தமிழ்நாடு அரசு முடிவு எடுத்தது பற்றி இவர்கள் ஆலோசனை செய்ததாக கூறப்படுகிறது.

3. இது போக சட்ட ஒழுங்கு பிரச்சனை பற்றி புகார் அளித்து இருக்கிறாராம். முதல்வர் ஸ்டாலின் ஆட்சிக்கு கீழ் சட்ட ஒழுங்கு சரியாக இல்லை. போலீஸ் சுதந்திரமாக இல்லை. டிஜிபி சுதந்திரமாக முடிவு எடுக்கவில்லை என்று புகார் அளித்து இருக்கிறாராம்.

ஆளுநர் என்ன செய்கிறார்?

ஆளுநர் என்ன செய்கிறார்?

தமிழ்நாடு ஆளுநர் ஆர். என் ரவியை பாஜக தலைவர் அண்ணாமலை நேரில் சந்தித்து பேசிய பின் தமிழ்நாட்டில் சில அமைச்சர்களை ஆளுநர் கண்காணித்து வருவதாக ஆளுநர் தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆட்சியில் என்னதான் நடக்கிறது என்று ஆளுநர் சில அமைச்சர்களை கண்காணித்து வருகிறாராம். சில அமைச்சர்கள் மீது இருக்கும் புகார்களை லிஸ்ட் எடுத்துக் கொண்டு இருப்பதாகவும். அதை பற்றிய ரிப்போர்ட்டை அவர் தயாரித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் நடவடிக்கை எடுக்க முடியாது?

ஆனால் நடவடிக்கை எடுக்க முடியாது?

ஆளுநர் நேரடியாக அமைச்சர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது. ஆளுநருக்கு அந்த அதிகாரம் இல்லை. அமைச்சர்கள் மீது ஆளுநர் நேரடியாக கண்டனமும் தெரிவிக்க மாட்டார். மாறாக ஆளுநர் இந்த அமைச்சர்களை நோட்டம் விட்டு அந்த ரிப்போர்ட்டை டெல்லிக்கு ஆளுநர் அனுப்பும் வாய்ப்புகள் உள்ளன. அதன் மூலம் சிபிஐ, அமலாக்கத்துறை போன்ற அமைப்புகள் வழியாக ரெய்டுகள் நடந்தால் கூட ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்று ஆளுநர் அலுவலகத்தில் சுற்றி திரியும் அரசியல் "மான்கள்" தெரிவிக்கின்றன.

மடியில் கனமில்லை

மடியில் கனமில்லை

ஆனால் ஆளும் தரப்போ இதை பற்றி பெரிதாக கவலைப்படவில்லை என்றே கூறப்படுகிறது. எங்களுக்கு மடியில் கனமில்லை. பி.ஜி.ஆர். எனர்ஜியிடம் 2019லேயே அதிமுக அரசு ஒப்பந்தம் செய்தது. அப்போது அதிமுக கூட்டணியில் இருந்தது பாஜகதான். அப்போதே இதை பற்றி ஏன் பேசவில்லை. இதில் எந்த முறைகேடும் நடக்கவில்லை என்று ஆளும் தரப்பும், அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பும் கூலாக இருக்கிறார்களாம். அதோடு, இப்படி தொடர்ந்து அவதூறு செய்தால் சட்டப்படி வழக்கு தொடுக்கும் திட்டத்திலும் செந்தில் பாலாஜி தரப்பு இருக்கிறதாம்.

முந்தைய ஆட்சி

முந்தைய ஆட்சி

ஆளுநரிடம் இப்படி புகார்களை அளிப்பதால் எந்த பயனும் இல்லை. முறையாக ஆவணங்களை சோதனை செய்தே ஒப்பந்தங்கள் செய்யப்பட்டு வருகின்றன என்று அரசு தரப்பும் இந்த விவகாரத்தை பெரிதுபடுத்தாமல் இருக்கிறதாம். அமைச்சர்களை ஆளுநர் என்ன கண்காணிப்பது, முதல்வரே அனைத்தையும் கண்காணித்து வருகிறார். போக்குவரத்துத்துறையின் துணை ஆணையர் நடராஜனின் அலுவலகத்திலேயே லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு நடத்தப்பட்டதை மறக்க வேண்டாம். அந்த அளவிற்கு முதல்வர் தரப்பே சொந்த நிர்வாகிகள், அதிகாரிகள் மீது கண்டிப்புடன் நடந்து வருகிறது, என்று அரசு தரப்பு கூறுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+